முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 7 வாயில்கள், 3 கூட்டுத் தீக்குளிப்பு.. மகாபாரதக் கதைகள் புதைந்துள்ள பிரம்மாண்ட கோட்டை..!

7 வாயில்கள், 3 கூட்டுத் தீக்குளிப்பு.. மகாபாரதக் கதைகள் புதைந்துள்ள பிரம்மாண்ட கோட்டை..!

சித்தூர் கோட்டை

சித்தூர் கோட்டை

இந்த கோட்டைக்கு இருக்கும் நுழைவு வாயில்கள் எண்ணிக்கையே உங்களை வியப்படைய செய்யும். ஆமாம் மக்களே இந்த கோட்டைக்கு 7 வாயில்கள்.

  • Last Updated :
  • Rajasthan, India

2014 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிறுகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு தனது உரையை ஒளிபரப்பி வருகிறார். ஒவ்வொரு மனதின் குரல் நிகழ்ச்சியிலும் இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், திருவிழாக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றி  பேசி வருகிறார். அந்த வரிசையில் 100 ஆவது  நிகழ்ச்சி  கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 100வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 13 பாரம்பரிய தளங்களை குறிப்பிட்டார், அதில் ராஜஸ்தானின் ஒரே ஒரு சித்தோர்கர் கோட்டையும் அடங்கும். இந்த கோட்டையின் வரலாறு மகாபாரத காலத்துடன் தொடர்புடையது என்று சொல்கிறார்கள்.

சித்தோர்கர் கோட்டை ராஜஸ்தானில் பெராச் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டை, மாநிலத்தில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோட்டை இந்தியாவின் மிகப்பெரிய கோட்டையாக கருதப்படுகிறது. இந்த கோட்டையின் நீளம் 3 கிமீ பரப்பளவில் பரவியுள்ளது மற்றும் வெளிப்புற அரண்களின் நீளம்  13 கிமீ ஆகும். அதாவது, இந்த கோட்டை சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கோட்டைகளின் நகரம் என்று சொல்லும் தகுதி பெற்ற  ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த கோட்டை 7 ஆம் நூற்றாண்டில் மௌரியர்களால் கட்டப்பட்டது. அக்பர்  உட்பட பல்வேறு காலகட்டங்களில் இந்த கோட்டை பல மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது .  சந்தித்த இந்த கோட்டையை பாதுகாக்கும் விதமாக 2013 ஆம் ஆண்டில், இதை யுனெஸ்கோ பாரம்பரிய இடமாக அறிவித்தனர்.

சித்தூர்கர் கோட்டை வளாகத்தில் 4 அரண்மனைகள், 19 முக்கிய கோயில்கள், 7 நுழைவாயில்கள், 4 நினைவுச்சின்னங்கள் மற்றும் 22 நீர்நிலைகள் என சுமார் 65 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்தக் கோட்டையில் முன்பு 84 நீர்நிலைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும் இப்போது அவற்றில் 22 மட்டுமே எஞ்சியுள்ளன.

இந்த கோட்டைக்குள் இருக்கும் நுழைவு வாயில்கள் எண்ணிக்கையே உங்களை வியப்படைய செய்யும். ஆமாம் மக்களே இந்த கோட்டைக்கு பதன், பைரவ், ஹனுமான், கணேஷ் , ஜோட்லா , லக்ஷ்மன்  மற்றும் ராம்   என்ற பெயர்களில் மொத்தம் 7 நுழைவுவாயில்களாம்.

செய்தியின் தொடக்கத்தில் இந்த கோட்டைக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறினோம் அல்லவா, அதை பற்றி சொல்கிறோம்.  வரலாறு இந்த கோட்டையை மௌரியர்கள் கட்டியதாக சொன்னாலும் இந்த பகுதியில் உள்ள நாட்டுப்புறக் கதைகள், இந்த கோட்டை மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்கின்றன.

பாண்டவர்களில் பீமன் செல்வத்தைத் தேடி ஒருமுறை புறப்பட்டதாகக் கூறப்படுகிறது . அந்த நேரத்தில் அவர் தத்துவஞானியின் கல் வைத்திருந்த ஒரு யோகியை சந்தித்தார் . பீமன் யோகியிடம் தத்துவஞானியின் கல்லைக் கேட்டபோது, ​​பீமன் தனக்கு இரவோடு இரவாக ஒரு கோட்டையைக் கட்டினால், அவனுக்கு தத்துவஞானியின் கல்லைக் கொடுப்பதாகக் கூறினார்.

அதன் பிறகு பீமன் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இந்தக் கோட்டையைக் கட்டத் தொடங்கினான் . விடியும் முன் பீமன் கோட்டையை கட்டி முடித்துவிடுவார். கல்லை  கொடுக்கவேண்டுமே என்று யோசித்த  யோகி, குகடேஷ்வர் என்ற எட்டியை ஏவி சேவல் போல் கூவச் சொன்னார். காலைக்குள் கோட்டையை முடிக்கவேண்டும். ஆனால் அதற்குள் விடிந்துவிட்டதே என்று யோசித்த பீமன் ஏமாற்றப்பட்டதை  உணர்ந்தான்.

பீமன் கோபத்துடன் தன் பாதத்தை தரையில் உதைக்க அங்கே ஒரு குழி உருவானது. அதை மக்கள் இன்னும் லத்-தலாப் என்று அழைக்கிறார்கள் . அதோடு கோட்டைக்குள் இருக்கும் மகாதேவரின் கோவிலைப் பற்றி சொல்லும் போது, பீமன் இந்த கோவிலில் இருக்கும் பிரமாண்டமான சிவன் சிலையை கையில் கட்டிக்கொண்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.இப்படி தான் கோட்டையின் கதைகள் மஹாபாரதத்தோடு இணைக்கப்படுகிறது.

இதையும் பாருங்க: முழுநிலவின் ஒளியில் காதலின் சின்னத்தைப் பார்க்க வாய்ப்பு.. எப்படி..? எப்போது தெரியுமா..?

அது மட்டும் இல்லாமல் இந்த கோட்டையில் 3 முறை தீக்குளிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீக்குளிப்பு  என்றால் தனி நபரது இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து தீக்குளித்த நிகழ்வுகள் நடந்துள்ளன. இதை அந்த  வழக்கப்படி ஜௌஹர் என்று குறிப்பிடுகின்ற்றனர். சித்தோர்கர் கோட்டையில் மன்னர்கள், அவர்களின் ராணிகள், அடிமைகள் , வீரர்கள் , 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோட்டை வேற்று நாட்டு படையால் வீழ்த்தப்படும்போது, அதில் உள்ள பெண்கள் தங்காள் கற்பை பாதுகாத்துக்கொள்ள  ஜௌஹர் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

இந்த கோட்டையில் முதல் ஜௌஹர் 1303 இல்  ராணி பத்மினி/பத்மாவதியின் தலைமையில் மன்னர் ரத்தன் சிங் ஆட்சியின் போது செய்யப்பட்டது. அலாவுதீன் கில்ஜி சித்தூரை ஆக்கிரமத்துவிட்டு கோட்டையை நோக்கி வரும் போது உள்ளே  16 ஆயிரம் பெண்களுடன் ராணியும் கூட்டு தீக்குளிப்பு மேற்கொண்டார்.

இதற்குப் பிறகு, 16 ஆம் நூற்றாண்டில், ராணி கர்னாவதியின் தலைமையில், 13,000 பெண்கள் ஜௌஹர் செய்தார்கள். இங்கு கடைசியாக ராணி புல்கன்வார் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பணிப்பெண்களுடன் ஜௌஹர் செய்துள்ளார். இந்தக் கோட்டையில் ஜௌஹருக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. அது  ஜௌஹர் குந் என்று அழைக்கப்படுகிறது.

top videos

    இந்த கோட்டைக்குள் ராணி பத்மினியின் அரண்மனை, மீராபாய் அரண்மனை, ராணா கும்ப அரண்மனை மற்றும் பல அரண்மனைகள் உள்ளன. திங்கள்கிழமை தவிர்க்க வாரத்தின் அனைத்து தினங்களிலும் கோட்டை திறந்திருக்கும். காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு இந்த கோட்டையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடக்கிறது. கோட்டை நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, குழந்தைகளுக்கு ரூ.25 என்று வசூலிக்கப்படுகிறது.

    First published:

    Tags: Rajastan, Travel, Travel Guide