இந்தியர்கள் இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் படிப்பு, வேலைக்காக குடியேறி அங்கே வாழ்ந்து வருகின்றனர். அப்படி அரபு நாடுகளில் வாழும் மக்களுக்கு ஜூன் மாதத்தில் ஒரு வார விடுப்பு வர இருக்கிறது. அதனால் அரபு நாட்டில் வாழும் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள மக்கள் விடுப்பில் எங்கே போகலாம் என்று தான் சொல்ல போகிறோம்.
ஐக்கிய அரபு நாட்டில் ஜூன் மாத இறுதியில் வரும் ஈத் அல் அதாவை (ஹஜ்) முன்னிட்டு ஒரு வாரம் வரை விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. வானில் தோன்றும் பிறையைப் பொறுத்து ஜூன் 27 செவ்வாய் முதல் ஜூலை 2 ஞாயிறு வரை ஆறு நாட்களுக்கு விடுமுறை நீடிக்கும் என தெரிகிறது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டவர்களே அதிகம். அதிலும் குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்களே இங்கு அதிகம், அதாவது, அமீரகத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 36 சதவிகிதம் பேர், அதாவது 3.5 மில்லியன் மக்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமீரகத்தில் வரவிருக்கும் ஆறு நாள் நீண்ட விடுமுறையில் வேறு நாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்பும் குடியிருப்பாளர்கள். பாஸ்போர்ட் தரவரிசையில் 81வது இடத்தில் இருக்கும் நமது இந்திய பாஸ்போர்ட்டின் மூலம், தாய்லாந்து, மாலத்தீவுகள் கத்தார், ஓமன், ஜோர்டான் மற்றும் இலங்கை போன்ற பிரபலமான இடங்கள் உட்பட, உலகெங்கிலும் உள்ள 60 விசா இல்லாத இடங்களுக்கு பயணிக்கலாம்
அவ்வாறு ஈத் அல் அதா விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலை பகுதி வாரியாக பிரித்துத் தருகிறோம்.
மத்திய கிழக்கு நாடுகள்:
ஐக்கிய அரபு நாடுகளை சுற்றி அமைந்துள்ள
கத்தார் | ஓமன் | ஜோர்டான் | ஈரான் |
ஆசிய நாடுகள்:
பூட்டான் | கம்போடியா | இந்தோனேசியா | கஜகஸ்தான் |
லாவோஸ் (laos) | இலங்கை | நேபாளம் | மியான்மர் |
மாலத்தீவுகள் | மக்காவ் (macau) |
ஐரோப்பா நாடுகள்:
இந்திய குடிமக்களுக்கு அல்பேனியாவிற்கு தனிப்பட்ட விசா தேவை. இருப்பினும், 10 வருட கோல்டன் விசாவைக் கொண்ட அமீரக குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் நாட்டிற்கு செல்லலாம்
ஓசியானியா நாடுகள்:
குக் ஐலேண்ட் (cook island) | பிஜி (fiji) | மார்ஷல் ஐலேண்ட் (marshall island) |
மைக்ரோனேசியா (micronesia) | நியு (niue) | பலாவ் ஐலேண்ட் (palau island) |
சமோவா ஐலேண்ட் (Samoa island | துவாலு (tuvalu) | வனுவாட்டு (Vanuatu) |
அமெரிக்க நாடுகள்:
லெஸ்டே | பொலிவியா | எல் சல்வடோர் (el salvador) |
கரீபியன் நாடுகள்:
பார்படாஸ் (barbados) | பிரிட்டிஷ் விர்ஜின் ஐலேண்ட் (british virgin islands) | டொமினிகா (dominica) |
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (saint vincent and the grenadines) | டிரினிடாட் மற்றும் டொபாகோ (trinidad and tobago | கிரெனடா (grenada) |
செயின்ட் லூசியா (saint lucia | செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (saint kitts and nevis | மாண்ட்செராட் (montserrat) |
ஜமைக்கா (jamaica) |
ஆப்ரிக்க நாடுகள்:
போட்ஸ்வானா | கொமோரோ ஐலேண்ட் (Comoro island | கேப் வெர்டே ஐலேண்ட் (cape verde) | புருண்டி (burundi) |
மடகாஸ்கர் | கினியா-பிசாவ் | காபோன் | எத்தியோப்பியா |
மொரிட்டானியா | மொரீஷியஸ் மொசாம்பிக் | ருவாண்டா | செனகல் |
சீஷெல்ஸ் | சியரா லியோன் (sierra leone) | சோமாலியா | தான்சானியா |
டோகோ | துனிசியா | உகாண்டா | ஜிம்பாவே |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Golden Visa, Travel, Travel Guide, UAE