கேரள மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் பல அரசு நலதிட்டங்களைத் தொடங்கி வைத்தார். அந்த பட்டியலில் கேரளாவின் கனவு திட்டங்களில் ஒன்றான கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தையம் தொடங்கி வைத்துள்ளார்.
கொச்சி வாட்டர் மெட்ரோ நாட்டின் முதல் நீர் மெட்ரோ மட்டுமல்ல என்றாலும், ஆசியாவிலேயே இந்த அளவு மற்றும் பயணத் தொகுதிகள் கொண்ட முதல் ஒருங்கிணைந்த நீர் போக்குவரத்து அமைப்பு இதுவாகும். அதன் சிறப்பு அம்சங்களையும் பயண விபரங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு கேரளாவின் அரசாங்கம் நிதியளித்ததோடு , ஜெர்மன் அரசுக்குச் சொந்தமான முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியான KfW இலிருந்து கடனும் பெறப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த 1,136.83 கோடி ரூபாய் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக உயர்நீதிமன்றத்தில் இருந்து வைபின் வரையிலும், வைட்டிலா முதல் காக்கநாடு வரையிலும் இந்த நீர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.உயர்நீதிமன்றத்தில் இருந்து வைபினுக்கு 20 நிமிடங்களிலும், காக்கநாட்டிலிருந்து வைட்டிலாவிற்கு 25 நிமிடங்களிலும் பயணிக்க முடியும். டிக்கெட்டின் விலை ₹ 20 மட்டுமே.அடிக்கடி பயணிப்பவர்கள் வாராந்திர, மாதாந்திர மற்றும் காலாண்டு பாஸ்களை தேர்வு செய்யலாம்.
கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி வாட்டர் மெட்ரோ இரண்டிலும் தடையின்றி பயணிக்க 'கொச்சி ஒன்' மெட்ரோ கார்டைப் பயன்படுத்தலாம் .கொச்சி ஒன் ஆப் மூலம் இந்த ரயிலுக்கான டிக்கெட்டை டிஜிட்டல் முறையில் பெறலாம். முதல் கட்டத்தில் இருக்கும் இந்த வாட்டர் மெட்ரோ முழு செயல்பாட்டிற்கு வந்தால் கேரளாவில் உள்ள 10 தீவுகளில் உள்ள 38 முனையங்களுக்கு இடையே 78 படகுகள் இயக்கப்படும்.
மெட்ரோ என்றால் நாம் சென்னையில் பார்க்கும் வாடி ரயில் போல இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது வாட்டர் மெட்ரோ - அதாவது நீண்ட படகு போல தான் இருக்கும். கொச்சி வாட்டர் மெட்ரோ படகு அலுமினியத்தால் செய்யப்பட்ட கட்டுமரம் போன்ற அமைப்போடு ஃபைபர் வலுவூட்டப்பட்ட பாலிமர் கொண்ட அமைப்புகளையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இதனால் எடை குறைவாகவும் , உறுதியாகவும், நீரில் மிதந்து பயணிக்க எதுவாகவும் இருக்கும். படகுகளில் லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது . அதன் மின்சாரத்தில் இருந்து தான் இந்த வாட்டர் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த படகுகளை அதிநவீன இயக்க கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணித்து கட்டுப்படுத்தலாம்.
கடந்த ஆண்டு கொச்சி வாட்டர் மெட்ரோ திட்ட வரையறை உலகின் சிறந்த வணிக பயணிகள் மின்சார படகுக்கான மதிப்புமிக்க குஸ்ஸிஸ் விருதை (பிரான்ஸ்) வென்றது. படகு ஒரு தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆபத்தான அலைகள் ஏற்பட்டாலும் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் இது நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இடையூறு விளைவிக்காது.
இப்போது தொடங்கப்பட்டுள்ள முதல் கட்ட வாட்டர் மெட்ரோ ரயிலில் 34,000 பயணிகள் வரை பயணிக்க முடியும். மேலும் புவி வெப்பமயமாதல் பற்றி பேசும் நிலையில் கொச்சி மெட்ரோ ரயில் மூலம் ஆண்டுக்கு 44,000 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முதல்வர் விஜயன் தெரிவித்தார்.
இதையும் பாருங்க: இந்தியாவின் பெரிய புத்தக கிராமமாக மாறும் காஷ்மீர் அரகம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
வாட்டர் மெட்ரோ சேவை தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை தொடரும். பீக் ஹவர்ஸின் போது மட்டும், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை உயர் நீதிமன்றம்-வைபீன் வழித்தடத்தில் படகுகள் இயக்கப்படும்.
மூன்று பணியாளர்கள் உட்பட ஒவ்வொரு படகின் மொத்த பயணிகள் கொள்ளளவு 99 ஆகும். ஒவ்வொரு படகின் இருக்கை திறன் 48 ஆக உள்ளது . சைக்கிள்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை வைத்திருப்பதற்கு பிரத்யேக இடங்கள் உள்ளன. படகுகளுக்கு கேரளாவின் பழங்கால துறைமுகங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Kochi, Metro Rail