கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் போது பனி படர்ந்த இயற்கை காட்சிகளும் மலைகளும் நம் நினைவுக்கு வரும். இந்த கோடையில் இந்தியாவில் எந்த மலைப்பகுதியை சுற்றிப்பார்க்க சிறந்த இடமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்காக ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சூப்பர் இடங்களை சொல்கிறோம். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
எந்த இடத்தைப் பற்றி பேசுகிறோம் என்று யோசிக்கிறீர்களா? நாங்கள் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லோசார் கிராமத்தைப் பற்றி தான் பேசுகிறோம். உள்ளூருக்குள் சுற்றுவதை விட்டு விட்டு கொஞ்சம் மேலே போய் பனி மலையில் அமர்ந்து கொளுத்தும் வெயிலுக்கு ஹாய் சொல்லும் வாய்ப்பாக இது இருக்கும்.
ஹிமாச்சலத்தில் இருக்கும் லோசார் ஒரு சிறிய கிராமம் தான். ஆனால் அழகிய, இயற்கையின் இனிமை ததும்பும் மகிழ்ச்சிகரமான கிராமமாக இருக்கும். இந்த கிராம வாழ்க்கையை பார்த்து ரசிக்கவே ஒரு நாள் ஆகும். சொர்க்கம் போன்ற இந்த இடத்தைப் பார்க்காவிட்டால், லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கான பயணம் முழுமையடையாது.
லோசார் மற்றும் பீனோ ஓடைகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள லோசார் கிராமம், கடல் மட்டத்திலிருந்து 13400 அடி உயரத்தில் இந்திய-சீன எல்லையை ஒட்டி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதிக உயரத்தில் இருப்பதால், இந்த இடத்தின் வானிலை பொதுவாக மிதமான வேகத்தில் வீசும் குளிர் காற்று மற்றும் லேசான வெயிலுடன் காணப்படும்.
ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் கடைசியில் உள்ள லோசர் ஒரு குளிர் பாலைவனமாகத் தோன்றும். லோசரின் இணையற்ற அழகு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. லோசரில் உள்ள அழகான ஆறுகள், ரம்மியமான காட்சிகள் மற்றும் கம்பீரமான மலைத்தொடர்கள் சுற்றுலாப் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள அற்புதமான சுற்றுலா தலங்களையும் பட்டியலிடுகின்றோம்.
சந்திரன் ஏரி
நீங்கள் லோசார் கிராமத்திற்குச் சென்றால், சந்திர ஏரி என்று அழைக்கப்படும் மூன் ஏரியை பார்க்க மறந்துவிடாதீர்கள். பிறை சந்திரன் போல வளைந்து இருக்கும். மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த ஏரியை காண ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
எப்போது பார்வையிட வேண்டும்
குளிர்காலத்தில், இந்த இடம் பணியாள் உறைந்து அணுக முடியாததாக இருக்கும். அதனால் இந்த கிராப்[மத்தை பார்க்க விரும்பும் மக்கள் பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கும் மார்ச் , ஏப்ரல் மாதத்தில் செல்லலாம். இது பனி விலகி வெப்பம் ஏறும் அற்புதமாக காலநிலையை உங்களுக்கு ஏற்படுத்து தரும்.
இதையும் பாருங்க; ஐரோப்பா செல்ல ஆசையா ? இப்படி செய்தால் குறைந்த செலவில் சென்று வரலாம்..!
காசா கிராமம் :
லோசர் கிராமத்தில் இருந்து தோராயமாக 57 கிலோமீட்டர் தூரத்தில் காசா என்ற கிராமம் உள்ளது. இது மலையேற்றம் மற்றும் பனி சறுக்கு சாகசங்கள் செய்ய பிரபலமான இடங்களில் ஒன்று. லோசார் மற்றும் பினோ ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் இயற்கை அழகு லடாக்குடன் ஒப்பிடப்படுகிறது. இங்கு செல்ல சுற்றுலா பயணிகள் குஞ்சம் கணவாயை கடக்க வேண்டும். இந்த காட்சிகள் எல்லாம் மிக அழகானவை.
நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்து, இன்னும் இந்த ஹிமாச்சல் கிராமத்திற்குச் செல்லவில்லை என்றால், இந்த கோடையில் சுற்றுலா செல்ல இந்த இரு கிராமங்களுக்குத் திட்டமிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Summer Vacation, Travel Guide