முகப்பு /lifestyle /

ஊட்டியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்ஸ் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

ஊட்டியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்ஸ் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

X
ஊட்டியில்

ஊட்டியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்ஸ்

Udhagamandalam | தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை வரவேற்பதுபோல் இருபுறமும் மே மலர்கள் சாலை எங்கும் சிவப்பு கம்பளம் போர்த்தியது போல குலுங்குகின்றன.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மே ஃப்ளவர்ஸ் பூத்து குலுங்குவதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டம் என்பதால், இங்கு அரிய வகை பூக்கள் செடி, கொடிகள் காணப்படுகின்றன. இவை சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவரக்கூடியதாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் மே மாதத்தில் அதிக அளவாக பூக்கும் மே ஃப்ளவர்ஸ் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பூத்து குலுங்கி வருகிறன. அதன்படி, தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை வரவேற்பதுபோல் இருபுறமும் மே மலர்கள் சாலை எங்கும் சிவப்பு கம்பளம் போர்த்தியது போல குலுங்குகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வரவேற்பது போல காட்சியளிக்கின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இயற்கை எழில் மிகுந்த முதுமலை வனப்பகுதியில், வனவிலங்குகளை காண வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு கூடுதல் விருந்தாக அமைந்துள்ளது.

top videos

    சாலை எங்கிலும் காட்சியளிக்கும் இந்த மே ஃப்ளவர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty