முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்.. கேரளாவில் கெத்துகாட்டும் கண்ணூர்.. சாத்தியமானது எப்படி தெரியுமா?

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்.. கேரளாவில் கெத்துகாட்டும் கண்ணூர்.. சாத்தியமானது எப்படி தெரியுமா?

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம்

ஏப்ரல் 2017 இல், மாவட்டம் இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கண்ணூர் அறிவிக்கப்பட்டது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஜூன் 5 உலக சுற்றுசூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதுவும் இந்த ஆண்டு  பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதை தான் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நாளில் சுற்றுசூலுக்கு எந்த தீங்கும் செய்யாமல் இயற்கையோடு இயங்கி வரும் தனித்துவமான இடங்களை பற்றித் தெரிந்து கொள்வது முக்கியம் தானே. அப்படியான ஒரு இடத்தைப் பற்றி தான் இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் போது, ​​இந்தியாவில் உள்ள இடங்களில், மற்றவற்றை விட  ஒரு இடம் தனித்து நிற்கிறது.அப்படி என்ன தனித்துவம் என்ன இடமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதன் சிறப்பே பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திகழ்வது.

பொதுவாக நம் ஊர் தெரு ஒன்றிற்குள் நுழைந்தால் குப்பைத்தொட்டி, வீட்டிற்கு முன், கடைகளுக்கு  அருகில், கழிவு நீர் செல்லும் கால்வாயில், கரண்டு கம்பத்தின் அருகே கூட பிளாஸ்டிக் மைக்கல், காகிதங்கள், பிளாஸ்டிக் குடுவைகள் என்று கிடப்பதை பார்க்க முடியும். எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் எதாவது ஒரு ரூபத்தில் இருக்கும்.

ஆனால் சில காலத்திற்கு முன்பு , கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிராக நல்ல நாடு, நல்ல மண் என்ற முழக்கத்துடன் ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் வீசப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை மக்களுக்கு சொல்லி அதன் பயன்பாட்டை குறைப்பது தான் நோக்கம்  .

பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான நீண்ட கால மற்றும் கடினமான போராட்டத்தை முடித்தே ஆகா வேண்டும் என்ற முனைப்புடை மாவட்ட  எடுத்தது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கேரி பேக்குகள்,  பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் பாட்டில்கள் போன்ற  பிளாஸ்டிக் பயன்பாட்டை முறையாக படிப்படியாக நிறுத்தும் ஆனைக்காய் வெளியிட்டது.அதற்கு பதிலாக  கைத்தறியில் தயாரிக்கப்பட்ட பைகளை பயன்படுத்த உள்ளூர் மக்களை ஊக்குவித்தனர்.

இந்த திட்டம் கொண்டு வரும் போது, பிளாஸ்டிக்கை நாம் சார்ந்திருக்கும் நிலையை வைத்து இதை முற்றிலும் ஒலிப்பது என்பது முடியாத காரியமாகத் தான் தோன்றியது. ஆனால் இந்தத் திட்டத்திற்கான இடைவிடாத முயற்சிகள், பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீமைகள் பற்றி மக்களுக்குக் கற்பித்தல், இந்த இலக்கை அடைய மாவட்டத்திற்கு உதவியுள்ளது. இதை  குறுகிய காலத்திற்கு மட்டும் இல்லாமல் இன்று வரை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

 மேலும், ஏப்ரல் 2017 இல், மாவட்டம் இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கண்ணூர் அறிவிக்கப்பட்டது. கேரள என்றாலே நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் அதிக நீர்நிலைகள் உள்ள பகுதி என்பது நமக்கு தெரியும். அதனால் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதையும் சரி செய்யும் திட்டத்தை அவர்கள் செயல்படுத்தியுள்ளனர்.

சாலையோரங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இடங்கள், குப்பைகள் கொட்டப்படுகிறதா என கடுமையாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்போதும் கண்காணிக்கப்படுகிறது. நீர்நிலைகள் முழுக்க பிளாஸ்டிக் குப்பைகல் அகற்றப்பட்டுள்ளது.  பிளாஸ்டிக் கேரி பேக்குகள் விற்பனை மற்றும் வாங்குவதற்கு தடை விதித்திருப்பது மாவட்டத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்துள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி கண்ணூர் எவ்வாறு ஊக்கமளிக்கிறது என்பது இங்கே

இது மட்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாது என்பதனால் அந்த மாவட்டத்தில் எந்த பொதுக்கூட்டம் அல்லது விழாக்கள் நடந்தாலும் அதில் ஒரு முறை பயன்படுத்தி எறியக்கூடிய எந்த பொருட்களை பயன்படுத்துவதற்கும் மாவட்ட அலுவலகங்களில் அனுமதி பெற வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. இதனால் குப்பைகளை கண்காணிக்கவும் அதை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் எளிதாக இருந்துள்ளன.

இவை அனைத்தும் உள்ளோர் மக்களுக்கு மட்டும் இல்லது சுற்றுலாப் பயணிகளுக்கும் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா வரும் போதே அவர்களுக்கு பிளாஸ்டிக் குப்பைகளுக்கான விதிமுறைகள் சொல்லப்படுகின்றன. இதனால் தான் இன்றும் இந்த மாவட்டத்தின் சுத்தம் பராமரிக்கப்படுகிறது.

இதையும் பாருங்க: உலக சுற்றுச்சூழல் தினம் 2023: பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க 10 எளிய வழிகள்!

இந்தியாவில் முதல் கிராமமாக கண்ணூர் மாறியதை போல இந்தியாவில் பல கிராமங்கள் மாறி வருகிறது. ஆசியாவின் தூய்மையான கிராமங்களில் ஒன்றாக தற்போது சிக்கிம் மாநிலத்தின் மாவ்லின்னாங் கிராமம் மாறியுள்ளது. இதனால் அந்த மாநிலம் முழுவதையும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள மாநிலமாக மாற்ற நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்,

அது மட்டும் இல்லாமல் இப்போதுள்ள பிளாஸ்டிக்  தடைகளுக்கு முன்னர், சிக்கிமில் உள்ள லாச்சுங் கிராமம் ஒருமுறை தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை தடை செய்வதில் முன்னோடியாக இருந்துள்ளது. அதுவும் இந்த  முயற்சிகள் எல்லாம் 1990களின் பிற்பகுதியில்லேயே நடந்துள்ளது.

First published:

Tags: Kerala, Plastic pollution, Tourism, Travel Guide, World Environment Day