சைவ மதத்தை பின்பற்றும் மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது காசியும் ராமேஸ்வரமும் செல்ல வேண்டும் என்று விரும்புவர். காசி நகரில் ஓடும் கங்கையின் புனித நீரில் குளித்துவிட்டு அங்குள்ள இறைவனை வணங்கினால் தங்கள் வாழ்வில் செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல சமண சமயம் என்று சொல்லப்படும் ஜைன மதத்தின் முக்கிய இடத்தைப் பற்றித்தான் சொல்ல இருக்கிறோம்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள மூடபித்ரி என்ற சிறிய நகரம், இந்தியாவில் உள்ள ஜெயின் சமூகத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நகரம் அதன் வளமான கலாச்சார பாரம்பர்யம், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் ஏராளமான ஜெயின் கோவில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் காரணமாக "ஜெயின்களின் காசி" என்று அழைக்கப்படுகிறது.
மங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூடபித்ரியின் வரலாறு கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அந்த காலத்தில் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் சேர்ந்த இடத்தை அலுப்பா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் செழித்து வளர்ந்த நகரம் வணிகம் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியது. பின்னர், 16 ஆம் நூற்றாண்டில், இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.
பின்னர் கேளடி நாயக்கர்கள், 14 ஆம் நூற்றாண்டில் பைரராசா வம்சத்தின் கீழ் என்று கைமாறிக்கொண்டே இருந்தது. பைரராசா வம்சத்தின் சமண மன்னர்களின் ஆட்சியின் போதுதான் மூடபித்ரி சமணத்தின் முக்கிய மையமாக உருவெடுத்தது. பைரராச மன்னர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் ஆதலால் பல சமணக் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை நகரத்தில் கட்டினர்.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மூடபித்ரி ஜெயின் / சமண மதக் கலாச்சாரத்தின் மையமாக மாறியது. மூடபித்ரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஆயிரம் தூண் மண்டபம். 15 ஆம் நூற்றாண்டில் பைரராச மன்னர் தேவராய உடையார் என்பவரால் கட்டப்பட்ட இது சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான சந்திரநாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். அதன் செறிவான செதுக்கல்கள் மற்றும் கட்டிடக்கலை இந்த கோவிலுக்கு கூடுதல் புகழ் சேர்க்கிறது. 1,000 தூண்களில், ஒவ்வொன்றும் தனித்துவ டிசைன்களோடு செதுக்கப்பட்ட சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
மூடபித்ரியில் உள்ள மற்றொரு முக்கியமான கோயில் திரிபுவன திலக சூடாமணி மண்டபம். இது 16 ஆம் நூற்றாண்டில் ஜைன மன்னன் இம்மதி பைரவ I என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோயில் ஜைன மதத்தின் மற்றொரு தீர்த்தங்கரரான நேமிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் ஓவியங்களுக்கு பெயர் பெற்றது. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டது மற்றும் பல சிற்பங்கள் மற்றும் ஜெயின் புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கோயில்களைத் தவிர, குரு பசாதி, மகாதேவ பசாதி மற்றும் சாந்திநாத பசாதி உள்ளிட்ட பல ஜெயின் கோயில்களும் நினைவுச் சின்னங்களும் மூடபித்ரியில் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான ஜைன மத வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. மதத் தலங்கள் தாண்டி இந்த நகரம் ஜெயின் பள்ளி மற்றும் ஜெயின் கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களுக்கு தாயகமாக உள்ளது,
இந்த நிறுவனங்கள் பொதுவான துறை பாடங்களைத் தாண்டி, சமண சமயத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன. மூடபித்ரியின் கலாச்சார பாரம்பரியத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் உணவு வகைகளாகும். பாரம்பரிய ஜெயின் சமையல் நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சைவ உணவுகள் தான் இங்கு ஸ்பெஷல்.
குறிப்பாக கடுபு - ஒரு வகை வேகவைத்த அரிசி கேக், மசாலா தோசை, காரமான உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட மிருதுவான பான்கேக் ஆகியவை கட்டாயம் முயற்சிக்க வேண்டிய சில உணவுகளில் அடங்கும். இவை மட்டும் இல்லாமல் மூடபித்ரியில் கார்கலா நீர்வீழ்ச்சி, குதிரைமூக் தேசிய பூங்கா மற்றும் மணிப்பால் ஏரி உள்ளிட்ட பல இயற்கை இடங்ககளும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களில் மலையேற்றம், ட்ரெக்கிங் ,முகாம் மற்றும் பறவைகளைப் பார்க்கும் பார்ட் வாட்சிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம்
இதையும் பாருங்க: 28,000 ரூபாயில் அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோவில் என எல்லாம் பார்க்க சூப்பர் IRCTC பேக்கேஜ் !
அதுமட்டும் இல்லாமல் இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமஸ்தகாபிஷேக விழா மிகவும் விசேஷமான ஒன்று. சமண சமய திருவிழாக்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆர்வம் இருந்தால் நிச்சயம் இந்த திருவிழாவில் கலந்துகொள்ளலாம். இந்த விழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.