கேரவேன் பயணங்கள் என்பது மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் குடும்பமாகவோ நண்பர்களாகவோ செல்லும் போது மேம்பட்ட வசதிகளோடு இருக்க கேரவேன் பயணங்களை மேற்கொள்ளுகின்றனர். தனிப்பட்ட பயணங்களாக இருக்கும் இந்த முறையை நம் நாட்டில் சில மாநில அரசே எடுத்து நடத்த முயன்று வருகிறது.
மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் சென்ற ஆண்டு 'கேரவேன் டூரிஸத்தை' அறிமுகம் செய்துள்ளனர். அதில் கர்நாடக அரசின் 'கேரவேன் டூரிஸத்தை' பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.
கோவிட் காலத்தில் சுருங்கிய சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து வசதிகளுடன் கூடிய கேரவேனில் மக்களை அழைத்துச்செல்லும் சுற்றுலா முன்மொழியப்பட்டது. கர்நாடகாவின் பிரபல சுற்றுலாத்தலமான ஹம்பி, கோகர்ணா போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடிய சுற்றுலா பேக்கேஜுகளை அறிமுகம் செய்துள்ளன.
கர்நாடக அரசு 'கேரவேன் டூரிஸம்' திட்டத்தின் கீழ் தற்போது கேம்பர்வன் கேம்ப்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் இந்த சேவையை வழங்குகிறது. கர்நாடகாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு பேக்கேஜ்களில் சேவைகளை வழங்கிவருகிறது.
பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கர்நாடகா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (KSTDC) ஹோட்டல்களில் இந்த கேரவேன்களுக்கான பார்க்கிங் வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது. முதல் கட்டமாக 20 முக்கிய சுற்றுலா தலங்களுக்கு பக்கத்தில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு இணையத்தில் முன்பதிவு செய்துகொண்டால் போதுமானது.
பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் கேம்பர்வன் கேம்ப்ஸ் மற்றும் ஹாலிடேஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் லக்ஸ்கேம்பர் எனப்படும் வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பிரீமியம் மோட்டார் ஹோம்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரவேன்களில் பயணிக்கும் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகளில் தங்கும் விடுதிகள் கட்ட முடியாது என்பதால், இயற்கையை பாதிக்காமல் இந்த கேரவேன் மூலம் சிறந்த முறையில் பயணிக்க முடியும் என்று அதன் நிறுவனர் டைகர் ரமேஷ் கூறியுள்ளார்.
சுற்றி பார்க்கும் இடங்கள், உணவு, சாகச முயற்சிகள் என்று Luxe Camper ஒரு முழுமையான பயண பேக்கேஜை வழங்குகிறது. லாஜிஸ்டிக் காரணங்களால், செல்ஃப்-டிரைவ் தற்போதுவழங்கப்படுவது இல்லை. எனவே ஒவ்வொரு கேம்பர்வானும் ஒரு ஓட்டுநர் மற்றும் வழிகாட்டி நம்முடன் வருகிறார்கள். எனவே பயணிகள் பரிந்துரைக்கப்பட்ட பயணத்திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
தற்போது பேலூர்- ஹலேபிட் அல்லது ஹம்பி போன்ற வரலாற்று தளங்கள், கடற்கரை பிரியர்களுக்காக கோகர்ணா, வனவிலங்கு ஆர்வலர்களுக்கு கபினி, பந்திப்பூர் மற்றும் சீதாநதி போன்ற இடங்களுக்குச் செல்லலாம். இவை தவிர பாதாமி, குத்ரேமுக், சகலேஷ்புரா, சக்ரேபைலு மற்றும் கூர்க் போன்ற இடங்களும் கர்நாடகாவில் கேரவேன் சுற்றுலாவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த கேரவேனில் ஓட்டுநருக்கு தனி கேபின், 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு பொருந்தும் 200 சதுர அடி இடம் கொண்ட கேரவேனில் சீட் பெல்ட்கள், வசதியான சோஃபாக்கள் மற்றும் மெத்தைகள், ஸ்மார்ட் டிவிகள், அடுப்பு, ஏசி, ஒரு தனி ஷவர் மற்றும் இன்சினரேட்டர் டாய்லெட், சைக்கிள் ரேக் என்று அணைத்து வசதிகளும் உள்ளது.
அடுத்த முறை கர்நாடக செல்லும் பொது தனியாக பயணிக்க டாக்ஸிகளை தேடாமல் சொகுசாக இந்த கேரவேன் ட்ரிப்பை மேற்கொள்ளுங்கள். 5000 ரூபாயில் இருந்து பேக்கேஜுகள் இருக்கின்றன.
கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள https://luxecamper.com/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தை பாருங்க..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka, Travel, Travel Guide, Trip