முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வேலையை விட்டுவிட்டு, 21 நாடுகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்த ஜெர்மன் இளைஞர்!

வேலையை விட்டுவிட்டு, 21 நாடுகளுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்த ஜெர்மன் இளைஞர்!

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

15 மாதங்களில் தனது சைக்கிளுடன் இதுவரை 21 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

  • Last Updated :
  • chennai |

டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்து கொஞ்ச நாள் நிம்மதியாக வேறு இடத்திற்கு சென்று வரத்தான் பெரும்பாலும் பயணம் என்பது செய்யப்படுகிறது. அப்படி பயணத்தைத் திட்டமிடும்போது அதிக பட்சம் 15 நாட்கள் வரையான பயணத்தை திட்டமிடுவோம். 2 , 3 நகரங்களை அதற்குள் பார்த்து வருவோம். ஆனால் ஒருவர் வேலையை விட்டுவிட்டு உலகத்தை சுற்றி வருகிறார்...

ஆமாம் மக்களே. வேலை செய்து கொண்டே இருந்து என்ன செய்ய போகிறோம் வாழ்க்கையை எப்போதுதான் அனுபவிப்பது என்று நினைத்துவிட்டார் போலும்.ஜெர்மனியை சேர்ந்த  26 வயதான அலெக்ஸ் கெம்ப்டோர்ஃப், என்ற இளைஞர், தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள தான் செய்துகொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு கிளம்பியுள்ளார்.

ஜெர்மனியில் இருந்து கிளம்பிய அலெக்ஸ் ஜெர்மனியைத் தாண்டி பல நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது திட்டப்படி ஐரோப்பிய கண்டம் முதல் ஆஸ்திரேலியா வரை செல்வதே அவரது ஆசை.  சுதந்திரமாக உலாவுவதற்காக அதிக பணம் செலவழித்து விமானத்திலோ, ரயிலிலோ அவர் பயணிக்கவில்லை. அவர் தேர்தெடுத்து சைக்கிள்.

உண்மையிலேயே ஜெர்மனியில் இருந்து கிளம்பி சைக்கிள் மூலம் உலகை அளந்து வருகிறார். இதுவரை, அலெக்ஸ்  21 நாடுகளுக்கு சைக்கிள் மூலம் பயணம் செய்துள்ளார். இப்போது,  அலெக்ஸுக்கு சைக்கிள் ஓட்டுவது ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.  அலெக்ஸின் கூற்றுப்படி, முடிந்தவரை, அவர் தனது பயணத்தை எந்தத்  தடையும் இல்லாமல் இருக்கவே சைக்கிளில் ஊர் சுற்றத் தீர்மானிக்கிறார்.

அலெக்ஸ் கூறுகையில், 15 மாதங்களில் தனது சைக்கிளுடன் இதுவரை 21 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார். ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரேலியா வரை உலகம் முழுவதும் பயணம் செய்து தற்போது ராஜஸ்தானில் இருப்பதாக அலெக்ஸ் கூறுகிறார்.

அலெக்ஸ் அமிர்தசரஸின் வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவில், அவர் கோல்டன் டெம்பிள், ஆக்ரா, செங்கோட்டை மற்றும் தாஜ்மஹாலைப் பார்வையிட்ட பிறகு, இப்போது ரணதம்பூர் தேசிய பூங்காவிற்குச் சென்றுள்ளார்.  இதன் பிறகு கோவா , கொச்சி, மற்றும் சென்னையை பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

மேலும் அலெக்ஸ் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பதால் சைக்கிளில் பயணம் செய்யத் தீர்மானித்துள்ளார். மிதிவண்டியில் பயணிக்கும் போது இயற்கையோடும் மனிதர்களோடும் நெருக்கமாக இருப்பதாகவும், சைக்கிளில் தனியாக பயணம் செய்யும்போது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக அலையலாம்.  இயற்கையான காட்சிகளை அனுபவிக்க முடியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இவ்வளவு அழகான இயற்கை காட்சிகளை எதிர்பார்க்கவில்லை என்றும்  அலெக்ஸ் கூறியுள்ளார். இந்த காட்சியைக் காண சைக்கிளில் வந்தது தான் சரியான தேர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்து அருகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க: நட்சத்திர வானத்தை ரசிக்க ஆசையா..? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

top videos

    சைக்கிள் பயணம் செய்வதற்கு முன்பு, அவர் ஒரு ஐ.டி ஊழியராக இருந்துள்ளார். சைக்கிள் ஓட்டும் மோகத்தால் அவர் வேலையை விட்டுவிட்டு தனது பொழுதுபோக்கோடு சேர்த்து உலகம் சுற்றுவதற்குக் கிளம்பியுள்ளார். சைக்கிள் பயணத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி செய்யப்படும் என்ற செய்தியை அலெக்ஸ் பரப்பி வருகிறார்.

    First published:

    Tags: Germany, Solo Travel, Travel, Trip