முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அமைதி பாலம் பற்றி தெரியுமா..?

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அமைதி பாலம் பற்றி தெரியுமா..?

அமைதி பாலம்

அமைதி பாலம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) பிரிக்கும் ஒரு சிறிய நதியான காலின்-டா-காஸ் நல்லாவின்(Khalin-Da-Khas Nalla) மீது கட்டப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Jammu and Kashmir, India

2019 இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது.

அந்த வகையில் ஸ்ரீநகர் கடந்த ஆண்டில் அதன் முதல் ஐநாக்ஸ்(INOX) மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை பெற்றது. அதன் பின்னர் இந்த ஆண்டில் Emaar என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பில்  'மால் ஆஃப் ஸ்ரீநகர்' (Mall of srinagar) , 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்ட் வகை பொழுதுபோக்குப் பூங்கா எல்லாம் வர உள்ளது. இந்நிலையில் மற்றொரு இடமும் பயணிகளை ஈர்க்கும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் குண்டு வெடிப்பு, தாக்குதல், ராணுவத்தினர் சண்டை, ஊடுருவல் எல்லை பாதுகாப்பு, எல்லை விதிமீறல் என்ற செய்திகளை தான் அதிகம் கேட்டிருப்போம். ஆனால் 2016 இல் துல்லியத் தாக்குதல் (surgical strike) நடந்த உரி பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LOC) பகுதியில் கமான் போஸ்ட் / கமான் அமன் சேது என்ற இடம் இருப்பது தெரியுமா?அதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

கமான் போஸ்ட், அமைதிப் பாலம் என்று அழைக்கப்படுகிறது. உரியில் அமைந்திருக்கும் இது, பாரமுல்லா மாவட்டத்தில் மெல்ல மெல்ல பிரபலமான பகுதியாக மாறி வருகிறது. இது காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) பிரிக்கும் ஒரு சிறிய நதியான காலின்-டா-காஸ் நல்லாவின்(Khalin-Da-Khas Nalla) மீது கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீகரில் இருந்து பாகிஸ்தானின் முசாபராபாத் வரை செல்லும் பேருந்து இந்த பாலம் வழியாகத்தான் செல்லும்.

இந்த பாலம், இந்தியப் பக்கத்தில் இந்தியக் கொடிகளையும், அதன் பாகிஸ்தான் பக்கத்தில் பாகிஸ்தான் கொடிகளையும் தாங்கி நிற்கிறது. இந்த இடத்தை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவும், இந்த இடத்திற்கு மக்களை அதிகம் வரவழைக்கவும் இந்திய ராணுவம் இந்த இடத்தை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. 

 இராணுவம் இந்திய  பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு களப்பயணங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் சுற்றுப்பயண இடமாக இதை மாற்றியுள்ளது. இந்த சுற்றுப்பயணங்களில், மாணவர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டின் முக்கியத்துவம், பிராந்திய வரலாறு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் வரலாறு மற்றும் கமான் போஸ்டின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ல வழிசெய்கின்றனர்.

மேலும், இப்பகுதியை பாதுகாப்பதன் மூலம் தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்த ஊக்குவிக்கின்றனர். இளைஞர்களை பெரியளவில் ஈர்ப்பதற்காக இங்கு அட்டகாசமான உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கமான் போஸ்ட்டும் அதன் கடைகளும் பார்வையாளர்கள் அதிகம் இங்கு வர விரும்பப்படுவதற்குக் காரணம்.

பல ஆண்டுகளாக,எல்லை கட்டுப்பாடு கோட்டில் உள்ள இந்த சுற்றுலாத் தலத்தை ராணுவம் புதுப்பித்து வருகிறது. பார்வையாளர்கள் மட்டுமல்ல, உள்ளூர் மக்களும் கூட கமான் போஸ்ட்டை முழு மனதுடன் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த சுற்றுலா தலத்தை தாங்களாகவே பார்வையிட ஆரம்பித்துள்ளனர். 

இதையும் பாருங்க: 56 நாட்கள், 22 நாடுகள்.. உலகின் மிக நீண்ட பேருந்து பயணம் பற்றி தெரியுமா..?

top videos

    மாணவர்கள் கூட தங்கள் பாடப்புத்தகங்களிலிருந்து வரலாற்றைப் படிப்பதோடு நம் நாட்டிற்காக போராடிய, போராடிக்கொண்டு இருக்கும் எல்லை காவலர்களை நேரில் சந்திக்கவும், பாரம்பரியம் தாங்கும் இந்திய  வரலாற்றைக் காணக்கூடிய இது போன்ற இடத்திற்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீங்கள் ஜம்மு காஷ்மீர் பக்கம் பயண திட்டம் போட்டால் இந்த இடத்தை நிச்சயம் மறந்துவிடாதீர்கள்!

    First published:

    Tags: Indian army, Jammu, Travel Guide