இன்று தான் படங்களில் உள்ள பாடல்காட்சிகளை எல்லாம் காட்சிப்படுத்த, வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்கிறார்கள். பழைய படங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால் அதில் உள்ள பாடல் காட்சிகள் பெரும்பாலும் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டிருக்கும். காஷ்மீரின் அழகுகள் எல்லாம் படங்களில் நிறைந்திருக்கும்.
இப்பொது அந்த இடங்களில் சில சுற்றுலாத் தலமாகவும் ஒரு சில கண்டுக்கப்படாமலும் போய்விட்டது. ஆனால் முன்னர், ஜம்மு மற்றும் காஷ்மீர் திரைப்படத் துறையின் முதன்மையான இடமாகத் திகழ்ந்தது. அந்த இடங்களைத் திரட்டி, திரைப்பட படப்பிடிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆராயப்படாத சுமார் 300 இடங்களை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
1960கள் மற்றும் 1970களில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் முக்கிய இடமாக இருந்த ஜம்மு மற்றும் காஷ்மீரின் அழகை விளம்பரப்படுத்த யூனியன் பிரதேச அரசும் சுற்றுலாத் துறையும் சேர்த்து இந்த முயற்சியை எடுத்துள்ளன. இதுவரை படமாக்கப்பட்ட இடங்கள் மட்டும் அல்லாது, படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களையும் சேர்த்து ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளனர்.
மாநிலத்தில் திரைப்பட சுற்றுலாவின் மறுமலர்ச்சியுடன், திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் சீரியல்களை ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் படமாக்க தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சியை மாநில அரசு எடுத்துள்ளது.
"படப் படப்பிடிப்பிற்காக 300 இடங்களை நாங்கள் திட்டமிடுகிறோம், இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படப்பிடிப்புக்கு எந்த இடத்தையும் தேர்வு செய்யலாம். அரசாங்கம் அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் வசதி செய்யும்" என்று ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறையின் நிர்வாகச் செயலாளர் சையத் அபித் ரஷீத் ஷா கூறினார்.
கடந்த ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் சீரியல்கள் படமாக்கப்பட்டன. இது காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவின் மறுமலர்ச்சிக்கான சிறந்த அறிகுறியாகும். திரைப்பட படப்பிடிப்பிற்கான அனுமதி மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் அங்கு படப்பிடிப்பு நடத்த சில சிக்கல்களை உருவாக்குகின்றன.
அதை எளிதாக்கி திரைப்படங்களின் படப்பிடிப்பை எளிதாக்குவதற்கு ஒரு முறையான அமைப்பை அரசாங்கம் உறுதி செய்து இந்த முயற்சியை முன்வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வசதியாக ஆன்லைன் போர்ட்டலையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் விவகாரம், குறித்த 'வெல்கம் டு காஷ்மீர்' என்ற காஷ்மீரில் படமாக்கப்பட்ட படத்தின் டிரெய்லரிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஷா, "போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாகும், இது உலக அளவில் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் நிலவி வருகிறது. இதற்கு சமூகத்தின் கூட்டு அணுகுமுறை தேவை, மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க நமது சமூகம் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும்" என்று ஷா மேலும் கூறினார்.
'வெல்கம் டு காஷ்மீர்' திரைப்படம் காஷ்மீரி கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் அதன் அழகையும் கலாச்சாரத்தையும் அதை உலகிற்கு வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குனர் தாரிக் பட், தனது முதல் திரைப்படத்தின் மூலம் காஷ்மீர் வழியாக பார்வையாளர்களை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்.
இதையும் பாருங்க : இந்தியாவில் மிகவும் முன்னேறிய இந்த 6 கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
அதில் காஷ்மீரின் அழகு அதன் குடிமக்களின் அரவணைப்பு மற்றும் நெகிழ்ச்சியை பி=வெளிப்படையாக காட்டுகிறது. பெண்களின் அதிகாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பழக்கம் மற்றும் ஜே.கே காவல்துறையின் பங்கு போன்ற காஷ்மீரை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளை படம் ஆராய்கிறது.
சுற்றுலா தொடர்பான G20 உச்சிமாநாடு ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள நிலையில், JK இல் சுற்றுலாவை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று ஷா கூறினார். மேலும் இப்பொது ஜம்மு காஷ்மீர், சாகச சுற்றுலா , குளிர்கால சுற்றுலா என்பதைத் தாண்டி திரைப்பட சுற்றுலாவிற்கும் ஏற்ற இடமாக மாறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight travel, Jammu and Kashmir, Travel