பட்ஜெட் விலையில் அனைத்து தரப்பு மக்களும் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை IRCTC ஏற்படுத்தி தருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைத்து சுற்றுலா பேக்கேஜ் போடுவதோடு இந்திய எல்லையைத் தாண்டி நேபாளம், இலங்கை, வங்கதேசம் , துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் பட்ஜெட் விலையில் சுற்றுலா திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிற்கு அற்புதமான சுற்றுலாத் திட்டத்தை பற்றி உங்களுக்கு சொல்கிறோம்.
அதுவும் கோடை விடுமுறை வரும் நேரத்தில் மதுரை வெயிலில் காயாமல் குளுகுளுவென்று குடகு மலைக்கு செல்லும் சூப்பர் ஆஃபர் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இந்த பயணத்திற்கு பயணிகள் ஏறிக் கொள்ளலாம்.4 இரவுகள்மற்றும் 5 நாட்கள் நீடிக்கும் இந்த பயண திட்டத்தில் குடகுமலை மற்றும் மைசூரின் முக்கிய இடங்களை பார்க்க முடியும்.
பயண திட்ட விபரங்கள்;
முதல் நாள் மாலை 4.25 க்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பும் 16235 TN மைசூர் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்து அடுத்த நாள் காலை 10.20 மணிக்கு மைசூர் சந்திப்பு அடைவீர்கள். அங்கு கலைக்கூடம், மகாராஜா அரண்மனை, மைசூர் மிருகக்காட்சிசாலை மற்றும் செயின்ட் பிலோமினா தேவாலயம் ஆகியவற்றைப் பார்வையிட்ட பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினம், தரியா தௌலத், திப்புவின் கோடைகால அரண்மனை, திப்பு இறந்த இடம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதசாமி கோவில். பிருந்தாவன் தோட்டத்திற்கு மாலை அழைத்து செல்ல படுவீர்கள். பின்னர் மைசூரில் இரவு தங்க வைக்கப்படுவீர்கள்.
இரண்டாம் நாள் சாமுண்டி மலைக்கு அழைத்து செல்ல படுவீர்கள். அங்கிருந்து குடகுமலை செல்லும் வழியில் குஷால் நகரில் உள்ள பொற்கோவில் மற்றும் நிசர்கதாமாவுக்கு அழைத்து செல்வர். மதியம் மடிக்கேரிக்கு அருகே உள்ள அபே நீர்வீழ்ச்சி, ஓம்காரேஷ்வர் கோவில் மற்றும் ராஜாவின் இருக்கை போன்ற பகுதிகளில் மாலை நேர சுற்றுலாவை அனுபவிக்கலாம். குறிப்பாக ராஜா சீட் என்று சொல்லப்படும் இடத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது அற்புதமாக இருக்கும்.
இரவு குடகு மலை அடிவாரத்தில் தங்கிவிட்டு காலை காவேரி நதியில் பிறப்பிடமான தலைக்காவேரி மற்றும் பாகமண்டலத்திற்கு செல்லலாம். அங்குள்ள கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு காவிரி நதியின் தெரிவான நீரில் விளையாடிவிட்டு மைசூருக்கு திரும்ப அழைத்து வரப்படுவர். அங்கிருந்து மாலை கிளம்பி அடுத்த நாள் காலை மதுரையில் பயணம் முடியும்.
பேக்கேஜின் விலை:
4 இரவுகள் 5 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் தலா ₹7900 முதல் தொடங்குகிறது, ஏசி படுக்கைகள் வேண்டும் என்றால் அது ₹10310 முதல் தொடங்குகிறது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹₹ 7570 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹ 6520 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்க உணவு தான் கொடுக்கப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட எண்ணினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
இதையும் பாருங்க ; 40,000 ரூபாயில் சென்னை டூ காஷ்மீர் - 6 நாள் சுற்றுலா செல்லும் IRCTC பேக்கேஜ் இதோ!
இந்த பயணம் ஒவ்வொரு வியாழன் அன்றும் தூத்துக்குடி-மதுரையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் குடகுமலையை பார்க்க விரும்பினால் இப்போதே https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR032 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mysore, Travel, Travel Guide