இந்தியாவிற்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அதற்கான இடங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. அதை எல்லாம் எப்படி அடைவது சரியான பயண திட்டத்தை எப்படி போடுவது? தங்குமிடம், பயணம் என்று எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். புதிதாக போகும் இடத்தில் இதை எல்லாம் எப்படி கண்டுபிடிப்பது என்று கஷ்டப்படுபவர்களுக்காகவே ஐஆர்சிடிசி பல்வேறு பேக்கேஜ்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி இப்போது ஒரு அற்புதமான புதிய பேக்கேஜ்ஜை பயணிகளுக்காக கொண்டு வந்துள்ளது. வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கு 11 நாட்கள் செல்லும் பயணமாக இது இருக்க போகிறது. 3ஆம் வகுப்பு ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் பாரத் கௌரவ் ஸ்பெஷல் டூரிஸ்ட்ஸ் ரயிலின் மூலம் "ஹைதராபாத் மற்றும் கோவாவுடன் கோல்டன் டிரையாங்கிள்" என்ற ரயில் பயணத் தொகுப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பயண விபரம்:
10 இரவுகள் மற்றும் 11 நாட்கள் நாட்டின் பெரும்பாலான முக்கிய கலாச்சார மற்றும் சுற்றுலா தலங்களான ஹைதராபாத், ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு இந்த பேக்கேஜின் மூலம் பயணிக்கலாம். கேரளாவில் உள்ள கொச்சுவேலி எனும் இடத்தில் தொடங்கும் இந்த பயணம், கொச்சுவேலி - ஹைதராபாத் - ஆக்ரா - டெல்லி - ஜெய்ப்பூர் - கோவா - கொச்சுவேலி என்ற வரிசையில் நிறைவுபெறும்.
கேரளாவில் தொடங்கும் இந்த பயணத்தில் நாங்கள் எப்படி போக முடியும். இதற்காக கேரளா வரை பயணிக்க வேண்டுமா என்று கேட்டால் , அது தான் இல்லை. நீங்கள் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய தமிழ்நாட்டு ரயில் நிலையத்தில் இருந்து இந்த பயணத்தைத் தொடங்கலாம்.
இந்த பயணத்தின் போர்டிங் புள்ளிகளாக, கொச்சுவேலி - கொல்லம் - கோட்டயம் - எர்ங்குளம் டவுன் - திருச்சூர் - ஒட்டப்பாலம் - பாலக்காடு - கோவை(போத்தனூர்) - ஈரோடு - சேலம் ஆகிய இடங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து அங்கே நீங்கள் ரயில் ஏறிக்கொள்ளலாம்.
திரும்ப வரும் பொழுது மட்டும் கோவா - கேரளா வழி என்பதால், மங்களூர் சந்திப்பு - கண்ணூர்-கோழிக்கோடு-ஷோரனூர்-திருச்சூர்-எர்ணாகுளம் டவுன்-கோட்டயம்-கொல்லம்-கொச்சுவேலி ஆகியவை இறங்கு புள்ளிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நம் நகரத்திற்கு டிக்கெட் போட வேண்டி இருக்கும்.
19.05.2023 அன்று கொச்சுவேலியில் இருந்து தொடங்கும் இந்த பயணத்தில் எந்தெந்த இடங்களை பார்க்க போகிறீர்கள் தெரியுமா? இடங்களின் அணிவகுப்பை கீழே பாருங்க:
ஹைதராபாத் : - ராமோஜி பிலிம் சிட்டி, சார்மினார், சாலர்ஜங் மியூசியம், கோல்கொண்டா
ஆக்ரா : - தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை
டெல்லி : - செங்கோட்டை, ராஜ்காட், தாமரை கோயில், குதுப்மினார்
ஜெய்ப்பூர் : - சிட்டி பேலஸ், ஜந்தர் மந்தர், ஹவா மஹால், அமர் கோட்டை
கோவா : - கலங்குட் பீச், வாகேட்டர், பாம் ஜீசஸ் பசிலிக்கா, சே கதீட்ரல்
இதையும் பாருங்க : ரூ.37,000 கட்டணத்தில் கோவை டூ காசி, கயா.. 6 நாள் பக்தி சுற்றுலா செல்ல IRCTC பேக்கேஜ் விவரம்..!
பேக்கேஜின் விலை:
10 இரவுகள் 11 நாட்கள் பேக்கேஜின் விலையானது, அடிப்படை மற்றும் வசதியான பயண பேக்கேஜ் என்று இறங்கிடு பிரிவுகளில் தரப்படுகிறது. அடிப்படை பேக்கேஜில் ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பு, இடமாற்றங்களுக்கான ஏசி அல்லாத வாகனங்கள் மற்றும் இரவு தங்கும் இடங்களில் தங்குவதற்கு டிரிபிள் ஷேரிங் அடிப்படையில் ஏசி அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, பெரியவர்களுக்கு ரூ.22,893/- குழந்தைகளுக்கு ரூ.21,318/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வசதியான சொகுசு பேக்கேஜில் ரயிலில் ஏசி 3 அடுக்கு, இடமாற்றங்களுக்கான ஏசி வாகனங்கள் மற்றும் டிரிபிள் ஷேரிங் அடிப்படையில் இரவு தங்குவதற்கு பட்ஜெட் ஹோட்டல்களில் ஏசி அறைகள்.ஆகியவற்றை உள்ளடக்கி, பெரியவர்களுக்கு ரூ.36,040/- குழந்தைகளுக்கு ரூ.34,150/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டத்திற்குள் காலை உணவு மற்றும் இரவு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
இந்த பயணம் 19.05.2023 அன்று கொச்சுவேலியில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் குறைந்த விலையில் பார்க்க விரும்பினால் இப்போதே https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SZBG02 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Travel, Travel Guide