இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் திட்டங்கள் உள்ளன. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஐஆர்சிடிசி, எர்ணாகுளம் சார்பில் கோயம்புத்தூரில் இருந்து புனித காசி, அலகாபாத் மற்றும் போத்கயா ஆகிய புனித நகரங்களுக்கு விமானம் மூலம் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. அதற்காக ஐஆர்சிடிசி அட்டகாசமான, அதே நேரம் மலிவான சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 6 நாட்கள், 5 இரவுகள் நீளும் இந்த பயணத்தை பற்றிய விபரங்களை பார்ப்போம்
விமான விவரங்கள்
விமான எண் | புறப்படும் இடம் | புறப்படும் தேதி | நேரம் | சேருமிடம் | சேரும் நேரம் |
6E- 2276/2231 | கோயம்புத்தூர் | 16.04.2023 | 09.30 மணி | வாரணாசி | 16.15 மணி |
6E- 6362/2346 | வாரணாசி | 21.04.2023 | 13.05 மணி | கோயம்புத்தூர் | 20.45 மணி |
பயண விபரங்கள்:
16.04.2023 முதல் 21.04.2023 வரை நீடிக்கும் இந்த பயணம் கோவை விமான நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. வாரணாசியில் இறங்கியபின் ஓய்வு எடுத்துவிட்டு 17 அன்று வாரணாசியில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் சென்று அங்கே கங்கை- யமுனையின் திரிவேணி சங்கம், அலகாபாத் கோட்டை, பாடல்புரி கோயில் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.
மூன்றாம் நாள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அன்னபூர்ணா கோயிலுக்குச் சென்று சிவனையும் பார்வதியையும் தரிசிக்கலாம். அங்கிருந்து அடுத்து கௌதம புத்தர் தனது முதல் போதனையான 'தர்மம்' என்பதைப் போதித்த சாரநாத்துக்குச் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்குள்ள கோவிலை பார்த்துவிட்டு மாலை கங்கை ஆர்த்தி பார்க்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கும்.
நான்காம் நாள் வாரணாசியில் உள்ள மற்ற இடங்களை பார்த்துவிட்டு அங்கிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள பீகாரின் போத்கயாவுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். தோராயமாக 5 மணிநேர பயணத்திற்கு பிறகு அங்கு இரவு தங்கிய பின்னால் ஐந்தாம் நாள் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் அமைந்துள்ள கயாவில் மஹாபோதி கோவிலை நாள் முழுக்க பொறுமையாக காணலாம். புத்த தரிசனம் முடிந்தபின்னர் மீண்டும் வாரணாசிக்கு அழைத்து வரப்படுவீர். அடுத்த நாள் கிளம்பி மீண்டும் கோவை விமான நிலையத்தில் இறக்கிவிடுவீர்கள்.
பேக்கேஜின் விலை:
5 இரவுகள் 6 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 37,320 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹ 44,805 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹ 34,700 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹ 27,470 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 02 முதல் 04 வயது வரையிலான குழந்தைகளுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி முன்பதிவு கவுன்டர்களில் மட்டுமே செய்ய முடியும்.
இதையும் பாருங்க : ரயிலில் இரவு பயணம் செய்ய ரூல்ஸ்.. ரயில்வே வெளியிட்ட விதிமுறைகள் தெரியுமா?
இந்த கட்டணத்தில் பொருளாதார வகுப்பில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகள் (கோவை-வாரணாசி-கோவை), வாரணாசி, கயாவில் 05 இரவு ஹோட்டல் தங்குமிடம் (ஏசி அறைகள்) காலை உணவு மற்றும் இரவு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
இந்த பயணம் 16.04.2023 அன்று கோவையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் காஷ்மீரை பார்க்க விரும்பினால் இப்போதே https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SEA16 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.