இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் இருந்து பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீருக்கு IRCTC ஒரு அசத்தலான சுற்றுலா திட்டத்தை கொண்டுள்ளது. 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் நீடிக்கும் இந்த பயண திட்டத்தில் காஷ்மீரின் முக்கிய இடங்களை விமானம் மற்றும் பேருந்து வழியாக சுற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.
விமான விவரங்கள்: -
விமான எண் | கிளம்பும் இடம் | கிளம்பும் நேரம் | சேரும் நேரம் |
எஸ்ஜி 678 | சென்னை | 07.00 மணி | 12.45 மணி நேரம் |
எஸ்ஜி-8961/8103 | ஸ்ரீநகர் | 11.35 மணி நேரம் | 21:10 மணி |
பயண திட்ட விபரங்கள்;
இந்த பயணத்தின் முதல் நாள் சென்னையில் இருந்து ககாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் அளித்து செல்லப்படுவர். முதல் நாள் அங்குள்ள ஏரிகள் மற்றும் இமயமலை சிகரங்களை பார்க்க அழைத்து செல்லப்படுவர். அடுத்த நாள் ஸ்ரீநகரில் உள்ள 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஆசிப் கான் ஜஹாங்கீரால் கட்டப்பட்ட ஷாலிமார் (காதலின் உறைவிடம்) மற்றும் நிஷாத்பாக் (இன்பத்தின் தோட்டம்) மற்றும் புகழ்பெற்ற முகலாய தோட்டங்களை பார்க்கலாம்.
அடுத்த நாள் குங்குமப்பூ வயல்களைப் பார்வையிட்டுக்கொண்டே 2440 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகவும் பிரபலமான பஹல்காம்மில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை அடைவீர்கள். இரவு பள்ளத்தாக்கில் தங்கி அதன் அழகை ரசிக்கலாம்.
நான்காம் நாள் காஷ்மீரின் குல்மார்க்கிற்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள். பனுய் பொழியும் மலைகளின் இடையே அமைந்துள்ள பூக்களின் பள்ளத்தாக்கை காணும் வாய்ப்பு கிடாவுக்கும். நீங்கள் விருப்பத்தால் இங்கு உங்கள் சொந்த செலவில், ஜீலம் நதியில் கோண்டோலா சவாரியை அனுபவிக்கலாம். ஐந்தாம் நாள் முழுக்க சோன்மார்க்காய் சுற்றி பார்க்கலாம். அடுத்த நாள் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவீர்கள்.
பேக்கேஜின் விலை:
5 இரவுகள் 6 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 41000 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹54700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹ 33500மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹ 30100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க :1 லட்சம் செலவில் துபாய்க்கு 6 நாட்கள் சுற்றுலா பேக்கேஜ்ஜை அறிமுகம் செய்துள்ள IRCTC!
அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
இந்த பயணம் இந்த மாதம் 26 அன்று சென்னையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் காஷ்மீரை பார்க்க விரும்பினால் இப்போதே https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMA24 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Kashmir, Travel, Travel Guide