முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ஸ்தூபி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கோங்க..!

உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான ஸ்தூபி பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கோங்க..!

கேசரியா ஸ்தூபி

கேசரியா ஸ்தூபி

400 அடி சுற்றளவுடன் சுமார் 104 அடி உயரம் கொண்ட இந்த ஸ்தூபி பௌத்தர்களின் முக்கியமான மத ஸ்தலமாகக் கருதப்படுகிறது

  • Last Updated :
  • chennai |

இந்திய நாடு என்பது இந்து மதம் தாண்டி, பெளத்தம், சமணம், ஆகிய மாதங்களின் பிறப்பிடமாக இருந்துள்ளது. இங்கிருந்து பெளத்த மதம், சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் என்று பல நாடுகளுக்கு  பரவியது.  இந்தியாவில் அதை பின்பற்றுபவர்கள் குறைந்தாலும் ஏராளமான நினைவு சின்னங்கள் உள்ளன.

அப்படி இந்தியாவில் உள்ள பிரபலமான அதே நேரம் முக்கியமான புத்த ஸ்துபியை பற்றிய சுவாரசிய தகவல்களை தான் இப்பொது பார்க்க இருக்கிறோம். பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கேசரியா ஸ்தூபி, உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய புத்த ஸ்தூபி என்று நம்பப்படுகிறது.

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் பாட்னா நகருக்கு வடக்கே சுமார் 110 கிமீ தொலைவில் உள்ள கேசரியா நகரில் இந்த மாபெரும் ஸ்தூபியை நீங்கள் காணலாம். இந்த ஸ்தூபி மௌரியர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது; இன்று, இது ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் தொல்பொருள் தளமாக விளங்குகிறது.இந்த முக்கியத்துவம் வாய்ந்த புத்த ஸ்துபியை பார்ப்பதற்கு  உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள்  பிஹார் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

இன்று அதிகம் பேசப்படும்  கேசரிய ஸ்தூபம்  நடுவில் கொஞ்ச காலம் யாருக்கு தெரியாமல் காணாமல் போனது என்றே சொல்லலாம்.  இது பல நூற்றாண்டுகளாக அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களுக்குத் தெரிந்த இடம் ஆனால் யாரும் பெரிதாக கண்டுக்காத, செல்லாத இடமாக இருந்து.

முக்கிய பகுதி புதையவும் ஆரம்பித்தது.  அது பின்னர் தோண்டப்படாமல் விடப்பட்டது. 25 ஆடுகளுக்கு முன்  1998 ஆம் ஆண்டில் சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் முறையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபோதுதான், இது, உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய ஸ்தூபி என்றே அறியப்பட்டது.

இந்த ஸ்தூபி சுமார் 104 அடி உயரமும் சுமார் 400 அடி சுற்றளவும் கொண்டது. உலக பாரம்பரிய நினைவுச் சின்னமான ஜாவாவில் உள்ள புகழ்பெற்ற போரோபோதூர் ஸ்தூபியை விட இது ஒரு அடி உயரமானது. அதனால் தான் இது உலகின் உயரமான ஸ்தூபியாக அறிவிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி உண்மையில் இது இன்னும் உயரமாக கட்டப்பட்இருந்தது.

1934 ஆம் ஆண்டு பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன் கேசரியா ஸ்தூபி 123 அடி உயரத்தில் இருந்தது. இந்தியாவில் பௌத்தம் செழித்தோங்கிய காலத்தில், கேசரியா ஸ்தூபி 150 அடியும், போரோபோதூர் ஸ்தூபி 138 அடி உயரமும் இருந்ததாக தொல்லியல் துறை  அறிக்கை கூறுகிறது. தற்போது கேசரியாவின் உயரம் 104 அடியாகவும், போரோபோதூர் 103 அடியாகவும் உள்ளது.

இயற்கை சீற்றத்தால் சேதப்படைந்த இந்த இடத்திற்கு ஒரு சுவாரசிய கடையும் உள்ளது. புத்த மரபுப்படி, புத்தர் இறப்பதற்கு முன் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்த தலங்களில் ஸ்தூபியும் ஒன்று. எனவே, உலகம் முழுவதிலுமிருந்து வரும் பௌத்தர்களின் புனித யாத்திரை இது உள்ளது.

இதையும் பாருங்க : 'முதல் இந்திய கிராமம்' மானா- அறிவிப்புப் பலகை வைத்த BRO! காரணம் என்ன ?

"ராஜா பென் கா தியோரா" என்று மக்களால் அறியப்படும் கேசரியாவில் உள்ள ஸ்தூபி, புத்தர் நிர்வாணத்தை அடைவதற்கு முன்பு வைஷாலியின் லிச்சிவி வம்சத்தினரால் கட்டப்பட்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சீன யாத்ரீகரான ஹியூன் சாங் ஏழாம் நூற்றாண்டில் அவரது நாட்குறிப்பின்படி ஸ்தூபியின் இந்த தளத்தை பார்வையிட்டார்.

top videos

    மேலும் கேசரியா ஸ்தூபியும் அதன் தனித்துவமான கட்டிடக்கலை காரணமாக பிரபலமானது. மற்ற  அல்லாமல் இந்த ஸ்தூபி ஒரு தனித்துவமான வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது. அதன் குவிமாடம் செங்கற்கள் மற்றும் கல்லால் ஆனது. ஸ்தூபியில் புத்தரின் சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    First published:

    Tags: Bihar, Travel, Travel Guide