முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம்..! எங்கு இருக்கு தெரியுமா..?

இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம்..! எங்கு இருக்கு தெரியுமா..?

அஞ்சி பாலம்

அஞ்சி பாலம்

ஆற்றின் படுகையில் இருந்து  331 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள ஒற்றை தூண் மேல் நிற்கிறது

  • Last Updated :
  • jammu |

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கேபிள் தாங்கு ரயில் பாலமான அஞ்சி பாலம் தயாராகி வருகிறது. ஏற்கனவே 47 பிரிவுகளில் 41 பிரிவுகளில் வேலைகள் முடிவடைந்த நிலையில் பாலத்திற்கான முழு பணிகள் மே 2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுவாக ரயில் பாலங்கள் என்று யோசிக்கும்போது இரும்பு தண்டவாளங்கள், ஜல்லிகள் தான் கண்முன் தோன்றும். மலைப்பகுதி அல்லது ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாதை என்று சொன்னால் அது உறுதியான கருங்கல், செங்கல், சிமெண்ட் வைத்து கட்டப்பட்டதாக இருக்கும். இல்லையேல் உறுதியான இரும்பு பீம்கள் கொண்டு இணைக்கப்பட்டதாக இருக்கும்.

ஆனால், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் தற்போது உருவாக்கி வரும் ரயில் பாலம் முழுக்க முழுக்க கேபிள்களால் மட்டுமே தாங்கப்படும் இந்திய ரயில் பாலமாக உருவாகி வருகிறது.  இந்த ரயில் பாலம்  கத்ரா-பனியால் ரயில் பிரிவில் T2 மற்றும் T3 சுரங்கங்களை இணைக்கிறது. அதோடு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ரயில் பாலமாக அமைகிறது.

செனாப் நதியின் மேல் உள்ள வளைவுப் பாலம் கட்டுவதற்கு தான்  ஆரம்பத்தில் திட்டமிட்டபட்டது. ஆனால் ஜம்முவில் உள்ள இப்பகுதியின் சிக்கலான, உடையக்கூடிய மற்றும் அச்சுறுத்தலான புவியியல் காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டு கேபிள் இணைப்பு பாலத்தை வடிவமைத்தனர். புவியியல் சிக்கல்களால் பாலம் மிகவும் சிரமத்துடன் கட்டப்படுகிறது. இப்பகுதி நிலநடுக்கங்களுக்கும் எளிதாக ஆளாவதால் பாலம் கட்டுவதில் சவால்கள் அதிகரிக்கிறது.

"கேபிள் தாங்கும் அஞ்சி பாலத்தின் மொத்த நீளம் 473.25 மீட்டர், பிரதான இடைவெளி 290 மீட்டர் ஆகும். ஆற்றின் படுகையில் இருந்து  331 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள ஒற்றை தூண் மேல் நிற்கிறது. தூண் மீது 193 மீட்டர் உயரமுள்ள ஒரு பிரதான கோபுரம் நிறுவப்பட்டு அதில் சேர்க்கப்பட்ட 96 கேபிள்களால் ஆதரிக்கப்படுகிறது.  இது  100 KMPH வேகத்தில் ஓடும் ரயில்களுக்கு ஏற்றது," என்று வடக்கு ரயில்வே அதிகாரி கூறினார்.

அஞ்சி காட் பாலம் ஜம்மு யூனியன் பிரதேசத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா கோட்டின் ஒரு பகுதியான பாலத்தின் கட்டுமானத்தில் நிறைய நிபுணத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான உச்சநிலை  வானிலைகளையும் தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சமச்சீரற்ற கேபிள்-தாங்கும் பாலமாகும், இது ஒரு மையக் கோபுரத்தின் அச்சில் சமநிலையில் உள்ளது. இந்த பாலம் ஒற்றை ரயில் பாதை மற்றும் 3.75 மீ அகலம் கொண்ட சர்வீஸ் சாலையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாலத்தின்  இருபுறமும் 1.5 மீ அகலமுள்ள நடைபாதை உள்ளது, இதன் விளைவாக பாலத்தின் ஒட்டுமொத்த அகலம் 15 மீ ஆக உள்ளது.

இதையும் பாருங்க: இந்த சுரங்கத்தில் நீங்கள் தோண்டி எடுக்கும் எல்லா வைரமும் உங்களுக்கே...!

top videos

    இந்த பாலத்திற்கான உத்வேகம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மிகவும் பிரபலமான பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாலத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது சுவாரஸ்யமானது. கேபிள்களை டியூனிங் செய்யும் பணி முடிந்ததும் பயன்பாட்டிற்கு வரும்.

    First published:

    Tags: River bridge construction, Travel