முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி இந்திய ரயில்கள் எல்லாம் தூய்மையாக மட்டுமே இருக்கும்..! எப்படி தெரியுமா..?

இனி இந்திய ரயில்கள் எல்லாம் தூய்மையாக மட்டுமே இருக்கும்..! எப்படி தெரியுமா..?

ரயில் சுத்தம் செய்யும் டெக்னாலஜி

ரயில் சுத்தம் செய்யும் டெக்னாலஜி

அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 புதிய மெட்ரோ பராமரிப்பு டிப்போக்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai |

இந்திய பொது போக்குவரத்தை பொறுத்தவரை பெரும்பாலான அரசு நடத்தும் போக்குவரத்துக்கு  சரியான பராமரிப்பு  இல்லாமல் இருப்பது தான் மக்களின் கவலையாக உள்ளது. என்ஜின் முதல் சீட் வரை எல்லாவற்றிற்கும் இன்னும் கொஞ்சம் அக்கறை கொடுத்து கவனித்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைப்பார்கள்.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் ரயில்களை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் சவாலான விஷயம் தான். அந்த வகையில் இந்திய ரயில்வே தன்னால் ஆன பணியை சிறப்பாக செய்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். 1836 ஆம் வருடத்தில் இருந்து இயங்கி வரும் இந்திய ரயில்வே ரயில்களை சுத்தம் செய்ய பல வழிகளை இதுவரை பின்பற்றியுள்ளது.

அந்த வரிசையில்  இப்போது புது விதமாக ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய ரயில்களையும் மெட்ரோக்களையும் சுத்தம் செய்ய இருக்கிறது. பசுமை இந்தியா, தூமை பாரதம் என்று நாட்டை எப்போதும் தூய்மையாக மாற்ற போராடும் அரசு தனது ரயில்களை 100% வரை தூய்மையாக வைத்திருக்க  இந்த முன்னெடுப்பை வைத்துள்ளது.

மின்சார ரயில் காந்த சக்தியால் இயங்கும் ரயில் என்று ரயிலின் வேகத்தை மேம்படுத்த மட்டும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், இருக்கும் ரயில்களை எப்போதும் தூய்மையாக பராமரிக்க இப்போது புதிய ஜப்பான் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

வாகனத்தை சுத்தம் செய்யும் இயந்திரங்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான JCW ஜப்பானுடன், இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோவிற்கான தானியங்கி மற்றும் நிலையான தூய்மை செய்யும் அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு ரயில்வே மற்றும் மெட்ரோ பெட்டிகளின் பராமரிப்பு மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்த, கோத்ரெஜ் குழுமத்துடன் பொற்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்களை வைத்து கைகளாலும் சிறிய இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்து வந்த ரயில்களை இனி தானியங்கி , தனித்துவ புது டெக்னலாஜி இயந்திரங்கள் சுத்தம் செய்ய இருக்கின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 புதிய மெட்ரோ பராமரிப்பு டிப்போக்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு ரயில்வே மற்றும் மெட்ரோ பெட்டிகளை சுத்தம் செய்வதற்கான வாஷிங் அமைப்புகளுக்கான தேவை இந்திய சந்தையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவைகளை இப்போது இருக்கும் சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தால் ஈடுகட்ட முடியாது. அதனால் தான் புதிய டெக்னோலஜி உள்ளே வருகிறது. இது நேரத்தையும் வளங்களையும் திறமையாக கையாள உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்த புதிய தானியங்கி ரயில் கழுவும் ஆலை வழியாக ஒரு ரயில் செல்லும் போது, அது ஊறவைத்தல், சோப் நுரைகளால் அலசுதல், கழுவுதல் மற்றும் உலர்த்துதல் என்ற முறையில் சுத்தப்படுத்த உள்ளது. ரயிலின் நீளத்தைப் பொறுத்து, முழு சுத்தம் செயல்முறையும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இதையும் பாருங்க : கேரளாவின் புதிய வந்தே பாரத் ரயிலில் ஏறினால் எந்தெந்த இடங்களை பார்க்கலாம்..?

top videos

    அதோடு மட்டுமல்லாமல் தானியங்கி சலவை அமைப்புகள் அதிக நீரரைப் பயன்படுத்தாமல் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த இருக்கின்றனர். அதோடு குறைந்த ஆற்றல் நுகர்வு, மற்றும் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Indian Railways, Technology, Train, Travel, Travel Guide