முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சார்ட் தயாரித்த பிறகும் ரயிலில் கன்பார்ம் டிக்கெட்டைப் பெற இந்த வழி இருக்கு..!

சார்ட் தயாரித்த பிறகும் ரயிலில் கன்பார்ம் டிக்கெட்டைப் பெற இந்த வழி இருக்கு..!

கன்பார்ம் டிக்கெட் எளிதாக பெறலாம்

கன்பார்ம் டிக்கெட் எளிதாக பெறலாம்

பிரீமியம் தட்கலில் இடம் கிடைக்காதவர்கள் கூட இந்த முறையை பயன்படுத்தி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Last Updated :
  • CHENNAI |

பொதுவாக குடும்பங்கள், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போவதாக இருந்தால் சேர்ந்து போக பேருந்து அல்லது ரயில் தான் சரியான தேர்வாகவும் இருக்கும். விலையை பார்க்கும் போது கூட ரயில் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்றதாகவும் இருக்கும். நீண்ட தூரம் போகும் போது ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடந்து கொண்டு ஓய்வெடுக்கவும் ரயில் பயணங்கள் சரியாக இருக்கும்.

ஆனால் ரயில் பயணத்திலிருக்கும் ஒரே பிரச்சனை டிக்கெட் தான்.  அல்லது விடுமுறை நேரம் என்றால் டிக்கெட் கிடைப்பது சிரமம். ஒரு மாதம் முன்னர் பார்த்தால் கூட வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். எப்படி உறுதி செய்யப்பட்ட - அதாவது கன்பார்ம் டிக்கெட் பெறுவது என்ற குழப்பம் எழும்.

சில சமயங்களில் நூறு நூற்றைம்பது என்று வெயிட்டிங் லிஸ்ட் இருக்கும்போது கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது எல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். தட்கல், பிரீமியம் தட்கல் எல்லாம் 10 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. இப்படி இருக்கும் போது பயணிகளுக்கான சார்ட் தயாரான பிறகு கூட கன்பார்ம் டிக்கெட் எடுக்க கூடிய ஒரு வழியை உங்களுக்கு இப்போது நாங்கள் சொல்ல இருக்கிறோம்.

ரயில் கிளம்புவதற்கு சில மணி நேரங்கள் முன்பு சார்ட் என்பது தயாரிக்கப்படுகிறது. அதில் கன்பார்ம் டிக்கெட்தவிர்த்து வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ஒரு சிலருக்கு பாதி அல்லது முழு கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும். கடைசி நேரத்தில் யாரேனும் டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு உறுதி செய்யப்படும்.

அப்போதும் உங்களது பதிவு காத்திருப்பு பட்டியலிலேயே இருந்தால் அடுத்த முறை நாங்கள் சொல்வதை முயற்சி செய்து பாருங்க. சார்ட் தயாரான பின்னர் சில டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படலாம். அல்லது இருக்கைகள் காலியாக விடுபடலாம். இது போன்ற நேரங்களில் உறுதி செய்யப்படும் கன்பார்ம் டிக்கெட்களே கிடைக்க வாய்ப்புண்டு.

IRCTC வலைத்தளம் அல்லது செயலியில் பார்த்தாலே AVAILABLE என்று காலியாக உள்ள கன்பார்ம் டிக்கெட் வாய்ப்புக்கான சீட் எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்போது அதில் நீங்கள் பதிவு செய்தால் உறுதி செய்யப்பட்ட - கன்பார்ம் டிக்கெட்களையே நீங்கள் பெற முடியும். அதோடு அதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த இடங்கள் எல்லாம் காலியாக உள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

பிரீமியம் தட்கலில் இடம் கிடைக்காதவர்கள் கூட இந்த முறையை பயன்படுத்தி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இது எல்லா தருணங்களிலும் கன்பார்ம் டிக்கெட்டுகளை வழங்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் சில சமயங்களில் இது கை கொடுக்கும். நாம் குழுவாக போகும் போது ஒரு சிலருக்கு மட்டும் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், அதே கோச் முன்னுரிமை கொடுத்து  பதிவு செய்தால் டிக்கெட் கிடைத்துவிடும்.

இதையும் பாருங்க : ரயில் பயணிகளுக்கு இலவச உணவு கிடைக்கும்... ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது..!

இணையத்தில் பதிவு செய்வதென்றால் IRCTC வலைத்தளம் அல்லது செயலியில் சார்ட் தரன பின்னர் புக்கிங் ஆப்ஷனை பார்த்து டிக்கெட் புக் செய்யலாம். அல்லது chart / vacancy என்ற பிரிவில் சென்று பார்த்தல் எத்தனை காலி இடங்கள் இருக்கிறது என்று தெரிந்துவிடும். நேரடியாக ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் இந்த டிக்கெட்டுகள் கிடைக்கும்.

top videos

    ரயில் புறப்படுவதற்கு முன்பு காலியாக உள்ள இருக்கைகளை இதன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதற்காக, நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்களில் தற்போதைய டிக்கெட் கவுன்டர்களை இந்திய ரயில்வே திறந்துள்ளது. இங்கு கடைசி நேரத்தில் காலியாக உள்ள இடங்களுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    First published:

    Tags: IRCTC, Train