ரயிலில் பயணிப்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எவ்வளவு தூரமான ஐடத்திற்கு செல்லவேண்டும் என்றாலும் சிரமம் இல்லாமல் பயணிக்க ரயில்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதேநேரம் அங்கு சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். அதுதான் ரயில்கள் மற்றும் பிளாட்பாரம்களில் விற்கப்படும் பொருட்களின் விலை.
ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உதவ இந்திய ரயில்வே பல்வேறு விதிகளைக் கொண்டுள்ளது. இந்த விதிகளில் ஒன்று ரயில் மற்றும் பிளாட்பாரத்தில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் விலையிலும் உள்ளது. ஒவ்வொரு பொருள்களுக்கும் அதற்கென அதிகபட்ச விற்பனை விலையை(MRP) அரசு நிர்ணயித்து வழங்கியுள்ளது. அதை அந்த பொருட்களின் அட்டை அல்லது கவரில் அச்சிட்டு இருப்பார்கள்.
அதை விட அதிக விலைக்கு விற்பது சட்டப்படி குற்றமாகும். அதேபோல், ரயில் நிலையம் அல்லது ரயிலில் எம்ஆர்பியை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பதும் குற்றம். ஆனால், ரயில் நிலைய நடைமேடையில் அமைந்துள்ள உணவுக்கடை நடத்துபவர்கள், எம்ஆர்பியை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது பலமுறை நடந்து வருகிறது.
பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கடைகளில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பயணிகள் என்பதால் அவர்கள் அவசரத்தில் கேட்கும் விலையை கொடுத்து விடுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்ய விரும்புவதில்லை. அப்படி செய்தால் ரயில்களை விட்டுவிடுவோம் என்று அமைதியாக பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
ஆனால், ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நேர்ந்தால், அத்தகைய கடைக்காரர்கள் மீது நீங்கள் புகார் செய்யலாம். உங்கள் புகாரின் பேரில், ரயில்வே விதிகளின்படி எம்ஆர்பியை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு குறைவான நேரம் தான் ஆகும். அதன் வழிகளை உங்களுக்கு சொல்கிறோம்.
புகாரைப் பதிவு செய்யும் போது கடைக்காரருக்கு எதிராக இந்த முக்கியமான விவரங்களை மட்டும் கொடுத்தால் போதுமானது. எடுத்துக்காட்டாக, MRPயை விட அதிகமான விலையில் பொருட்களை விற்கும் கடைக்காரரின் உணவுக் கடையின் பெயர், நடத்துபவரின் பெயர், கடை இருக்கும் ரயில் நிலையத்தின் பெயர், நடைமேடை எண், ஸ்டால் எண் மற்றும் பொருள் விற்கப்பட்ட நேரம் ஆகியவற்றைக் குறித்துக்கொள்ளவும். இந்த விவரங்கள் அனைத்தும் புகாரைப் பதிவு செய்வதற்கு மிகவும் முக்கியம்.
இவற்றை வைத்து ரயில் நிலையம் அல்லது ரயிலில் MRP ஐ விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைக்காரர்கள், உணவுக் கடைகள் அல்லது விற்பனையாளர்கள் மீது ரயில்வே உதவி எண் 139 இல் புகார் அளிக்கலாம் .
இதையும் பாருங்க: விமான நிலையத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் மலை பிரதேசங்கள் பற்றி தெரியுமா..?
இது தவிர, ரயில்வேயின் அதிகாரபூர்வ மொபைல் செயலியிலும், railmadad.indianrailways.gov.in/madad/ என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம். இதனுடன், இதுபோன்ற கடைக்காரர் அல்லது விற்பனையாளர் மீது ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, IRCTC, Train, Travel Guide