முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ரயில் ஓட்டுநர்கள் எவ்வளவு நேரம் ரயிலை இயக்குவார்கள்..? ஏன் ரயிலுக்கு மட்டும் 2 ஓட்டுநர்கள் கொடுக்கப்படுகிறது.?

ரயில் ஓட்டுநர்கள் எவ்வளவு நேரம் ரயிலை இயக்குவார்கள்..? ஏன் ரயிலுக்கு மட்டும் 2 ஓட்டுநர்கள் கொடுக்கப்படுகிறது.?

ரயில் ஓட்டுனர்கள்

ரயில் ஓட்டுனர்கள்

2 மணிநேரம் தொடர்ச்சியாக சரண வண்டி அல்லது கார் ஓட்டினாலே முதுகுவலி, கால் வலி உடம்பு வலி எல்லாம் வந்து விடும். ரயில் பயணம் முழுக்க ஒரே ஓட்டுனரால் ஓட்ட முடியுமா?

  • Last Updated :
  • Chennai [Madras], India

இந்திய இரயில்வே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பயணிகளை தங்களது ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு போகிறது.  இதில் புதிய தொழில்நுட்பங்களின் பங்களிப்பு இருந்தாலும், ரயில் ஓட்டுனர்களின் பங்களிப்பும் அதிகம் தான். என்ன தான் தான் இயங்கி என்ஜின்களை கண்டுபிடித்தாலும் மனிதர்கள் இயக்குவது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

அப்படி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலை ஓட்டும்  ஓட்டுநர்கள் லோகோ பைலட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 2 டிரைவர்கள் இருப்பர்.  தலைமை லோகோ பைலட் மற்றும்  உதவி லோகோ பைலட் என்று அவர்கள் அழைக்கப்படுவர். ஆனால் இந்த இரண்டு டிரைவர்கள் மட்டும் ரயிலை ஆரம்பம் முதல் இறுதி வரை இயக்குவதில்லை.

நினைத்துப்பாருங்கள் 2 மணிநேரம் தொடர்ச்சியாக சரண வண்டி அல்லது கார் ஓட்டினாலே முதுகுவலி, கால் வலி உடம்பு வலி எல்லாம் வந்து விடும். சாதாரண சுற்றுலா செல்லும் போதே அடிக்கடி ஆள் மாற்றிக்கொண்டு கார் ஓட்டுவோம். அத்தனை நூறு கிலோமீட்டர்கள் போகும் ரயிலை எப்படி இருவர் மட்டும் ஓட்டிக்கொண்டு போகமுடியும். அதற்காகத்தான் இடையில் டிரைவர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

இருவர் மட்டும் தொடர்ந்து ரயிலை இயக்கிச் சென்றால் சோர்வு காரணமாக ஏதேனும் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, அது பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். பின்னால் இருப்பது ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகள். அதனால் அவர்கள் பாதுகாப்பு கருதி ஓட்டுனர்கள் மாற்றப்படுவார்கள். ஆனால் எவ்வளவு தூரத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நியூஸ் 18 இன் சிறப்பு நிருபர் ஷரத் பாண்டே, வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ தீபக் குமாருடன், ரயில் ஓட்டுநர்கள் ஷிப்டை எவ்வளவு நேரம் மாற்றுகிறார்கள் என்பது குறித்து ஒரு பேட்டியை எடுத்துள்ளார். ரயிலின் டிரைவர் மற்றும் பாதுகாவலர்களின் ஷிப்ட் முறைகள் பற்றி தீபக் குமார் சொல்லிய முக்கிய விஷயங்களைத் தான் இப்பொது உங்களுக்கு விளக்கமாக சொல்ல இருக்கிறோம்.

மற்ற எல்லா வேலைகள் செய்யும் ஊழியர்கள் போலவே ரயில் ஓட்டும் லோக்கோ பைக்லேட்டுக்கும் ஒரு நாளில் 8 மணிநேரம் மட்டுமே வேலை என்றாலும், தேவைக்கு ஏற்ப, நேரம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் ஓட்டுநர்கள் 4 மணி நேர ஷிப்ட் மட்டுமே செய்வார்கள். அதே ஓட்டுநர்  சில சமயங்களில்  9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கூட வேலை செய்ய நேரிடுமாம். ஆனால் கூடுதல் நேர வேளைக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்படுகிறது.

டிரைவர்கள் எத்தனை முறை மாறுகிறார்கள்? 

பயணிகள் ரயிலின் டிரைவர் ஷிப்ட் 8 மணி  நேரத்திற்கு மேல் ஒரு சில சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்படும். உதாரணத்திற்கு , டெல்லியில் இருந்து மாலை 4 மணிக்கு பாட்னாவுக்கு ஒரு ரயில் புறப்பட்டு 8 மணி நேரம் கழித்து லக்னோவை அடைந்துவிடும்..

அங்கு இறங்கிய பின், அதற்கு அப்பால் 8 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தை மற்றொரு குழுவினர் கடப்பார்கள். மீண்டும் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு  8 மணி நேரத்திற்கு முன் வந்துவிட்டால், மற்ற குழுவினரின் ஷிப்ட் குறைவாக இருக்கும். இது அவர்கள் பெறும் ஓய்வு நேரத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

8 மணி நேரத்தில் எந்த ஸ்டேஷனுக்கும் வரவில்லை என்றால்...?

பல நேரங்களில் 8 மணி நேரம் முடிந்துவிட்டாலும், இடையில்  நிர்ணயிக்கப்பட்ட எந்த நிலையத்தையும் ரயில் இன்னும் அடையவில்லை என்ற சூழல் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில், லோகோ பைலட் ரயிலை நடுவழியில் விட்டுச் செல்வாரா? கண்டிப்பாக அது முடியாத காரியம்

இதையும் பாருங்க: சார்ட் தயாரித்த பிறகும் ரயிலில் கன்பார்ம் டிக்கெட்டைப் பெற இந்த வழி இருக்கு..!

அப்படி இருக்கும் நேரத்தில் டிரைவர் ஷிப்ட் முடிந்து விட்டாலும் அடுத்த நிர்ணயிக்கப்பட்ட  ஸ்டேஷன் வரும் வரை அவர்கள் தான் வண்டியை ஓட்டி செல்வர். அடுத்த நிறுத்தம் வரும் வரையான கூடுதல் நேரம் ஓவர் டைம் என்று கணக்கிடப்படும். இந்த கூடுதல் நேரத்துக்கு ஓட்டுநருக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.

top videos

    இப்படி தான் நீண்ட நேரம் நீண்ட தூர ரயில்கள் எல்லாம் இயக்கப்படுகிறது. நாட்கணக்கில் போகும் ரயில்களுக்கு எல்லாம் அப்போ எத்தனை ஓட்டுனர்கள் மாறுவார்கள் என்று நினைத்து பாருங்க.

    First published:

    Tags: Train, Travel Guide