நாம் பெரும்பாலும் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களை பயன்படுத்துவோம். ஆனால் அது எப்படி இயங்குகிறது, எப்படி இயக்கப்படுகிறது, எப்படி எளிதாக புக்கிங் செய்யலாம், என்னென்ன சலுகைகள் இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் உண்மையில் ரயில்கள் சார்ந்த பல சுவாரசிய தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் எங்களுக்குத் உங்களுக்கு சொல்கிறோம்.
ரயில்களில் பயணிக்கும் போது ஒரு சில இடங்களில் படுவேகமாக செல்லும் , ஒரு சில இடங்களில் மெதுவாக ஊர்ந்து போவது போல தெரியும். எந்த இடங்களில் இப்படி செல்கிறது. இந்த வேகத்தை யார் நிர்ணயிப்பது? எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று எல்லாம் சிந்ததுண்டா? அதற்கான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
சாலைகளில் உள்ள ட்ராபிக் சைனல்களை போலவே ரயில் பாதையிலும் சிவப்பு மஞ்சள் பச்சை என்று இருப்பதை பார்த்திருப்பீர்கள்.அந்த சிக்னல் விளக்குகள் ரயிலின் வேகமாற்றத்தில் பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அதைத்தாண்டி . ரயிலின் அதிகபட்ச வேகத்தை லோகோ பைலட் எப்படி முடிவு செய்கிறார் என்பது மிகச் சிலருக்கே தெரியும்.
இது முக்கியமாக 2 விஷயங்களைப் பொறுத்தது, முதலாவதாக, ரயிலின் வேகம் அந்த பகுதி ரயில் தடத்தில் இயக்க அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகத்தைப் பொறுத்து அமையும். ஒரு பிரிவில் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் மட்டுமே இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிலோமீட்டராக இருந்தாலும் அந்த தடத்தின் அதிகபட்ச வேகமான 90 இல் மட்டுமே இயக்கப்படும். ரயில் தடம் மற்றும் அந்த தடத்திற்கான அதிகபட்ச வேகம் குறித்த அனைத்து தகவல்களும் ரயிலில் செல்வதற்கு முன் டைம் டேபிளில் லோகோ பைலட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு காரணி ரயிலின் அதிகபட்ச வேகம். ஒரு ரயில்வே பிரிவின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 130 கிமீ, ஆனால் ரயிலின் சொந்த அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ மட்டுமே என்றால். ரயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.
சிக்கினால் கணக்கிற்கு வந்தால் ஒரு ரயில் நிலையத்தை கணக்கும் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தால் ரயில் முழு வேகத்தில் அந்த ஆயில் நிலையத்தையோ ரயில்வே கேட்டையோ கடந்துவிடும். அதேசமயம், மஞ்சள் சமிக்ஞை என்பது வேகத்தைக் குறைக்க கொடுக்கும் அலெர்ட். அடுத்த சிக்னலில் சிவப்பு சமிக்ஞை வந்ததும் நிறுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்.
இதையும் பாருங்க: நொடியில் தட்கல் டிக்கெட் புக் பண்ணனுமா..? அதற்கான டெக்னிக்கை நாங்க சொல்லி தருகிறோம்..!
இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, தானியங்கி சிக்னல்கள்
வேலை செய்யும் இடத்தில், லோகோ பைலட் மஞ்சள் சிக்னலைப் பார்த்தவுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தை குறைக்க வேண்டும். பச்சை நிற சிக்னல் கிடைக்கும் வரை அவர் ரயிலை அதே வேகத்தில் இயக்க வேண்டும். மூடுபனி இருந்தால், தானியங்கி சமிக்ஞை கொண்ட பாதையில் ரயிலின் வேகம் கிரீன் சிக்னல் இருந்தாலும் மணிக்கு 60 கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Travel, Travel Guide