உலகின் மிக உயரமான சிவன் கோவிலான துங்கநாத் கோயில் 5 முதல் 6 டிகிரி வரை சாய்ந்துள்ளதாக , இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் இது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
கட்டிடம் செய்வது மட்டும் இல்லாமல் வளாகத்தில் உள்ள மற்ற சிறிய கட்டமைப்புகள் சிலைகள் உட்பட பலவும் பத்து டிகிரிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இது கோயிலின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. மேலும் இந்த கோவில் சீக்கிரம் அழிந்துவிடுமா என்ற பயத்தையும் எழுப்பி வருகிறது.
துங்கநாத் கோவில், எட்டாம் நூற்றாண்டில் கட்டியூர் மன்னர்களால் கட்டப்பட்ட பஞ்ச கேதாரங்களில் மூன்றாவது கேதாரமாக கருதப்படுகிறது. இந்த ஆலயம் ஒரு புனிதத் தலமாகவும், பிரமிக்க வைக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது, இங்கு ஆண்டு முழுவதும் பார்வையாளர்களும் பக்தர்களும் திரளுவார்கள்.
"மினி சுவிட்சர்லாந்து" என்று அழைக்கப்படும் துங்கநாத், உலகின் மிக உயரமான சிவன் கோயிலை கூடுதல் பெருமையாக வைத்துள்ளது. மேலும் இந்த கோவில் பத்ரி கேதார் கோயில் கமிட்டி (BKTC) ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்று தளமாகவும் உள்ளது.
கோவில் என்ற பக்தி கரணம் மட்டுமின்றி, இது ஒரு பிரபலமான மலையேற்ற பகுதியாகவும் உள்ளது. வடக்கு நோக்கிய இக்கோயில் கர்வால் இமயமலையின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 12,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ASI பிரதிநிதிகள் கண்டுபிடிப்புகளை மத்திய அரசுக்குத் தெரிவித்து, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.
கூடுதலாக, அரசாங்கம் அதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக நியமிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. நெறிமுறையின் ஒரு பகுதியாக பொது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளைக் கேட்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
top videos
அதுமட்டும் இன்றி கோவில் உள்ள நிலம் ஸ்திரத்தன்மை இன்றி சாய்ந்து வருவதால், அதை சோதிக்கவும் தனி குழு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், சேதத்தை உடனடியாக சரிசெய்ய முடிந்தால், அதன் அழிவை தடுக்கலாம் என்ற முனைப்பில், சாய்வின் முதன்மை காரணத்தை ASI ஆய்ந்து வருகிறது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.