முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / திறந்த வெளியில்.. அதுவும் மலை உச்சியில் ஸ்டார் ஹோட்டல் ரூம்களா..? எங்கு உள்ளது தெரியுமா.?

திறந்த வெளியில்.. அதுவும் மலை உச்சியில் ஸ்டார் ஹோட்டல் ரூம்களா..? எங்கு உள்ளது தெரியுமா.?

நல் ஸ்டெர்ன்

நல் ஸ்டெர்ன்

திறந்தவெளி ஹோட்டல் 2016 ஆம் ஆண்டு சுவிஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் திறக்கப்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

வாழ்க்கையில் எத்தனையோ வகையான ஹோட்டல்கள் பற்றி படித்திருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள், தங்கி இருப்பீர்கள். ஆனால் சுவர்களே இல்லாத திறந்த வெளி ஓட்டலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ​​சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு அரிய வகையான ஹோட்டல், எந்த இடையூரும் இல்லாமல் ஆல்ப் மலைகளின் திறந்த வெளியில் தங்க அனுமதிக்கிறது.

பட்ஜெட் ரூம், ஏசி ரூம், சூட் ரூம், டீலக்ஸ் ரூம் என்று எத்தனை வகை வகையான ஹோட்டல் அறை வகைகளை ஹோட்டல் நிர்வாகங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்க இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வித்யாசமான ஹோட்டல்கள் கட்ட பல யோசனைகள் உதிக்கத் தொடங்கியது.

'நல் ஸ்டெர்ன்' (Null Stern) என்று அழைக்கப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் ஒரு கலை நிறுவல் யோசனை எழுந்தது. 2009 ஆம் ஆண்டில், ஃபிராங்க் மற்றும் பேட்ரிக் ரிக்லின் என்ற கலைஞர்களால் இந்த பதுங்கு குழி கலை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் அதிக வரவேற்பு தந்தனர்.

இதை பார்த்த ஜீரோ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் டேனியல் சார்போனியர் இதேபோல பதுங்குகுழி தாங்கும் அறைகளை உருவாக்கினால் என்ன என்ற யோசனையை கையில் எடுத்தார்.சார்போனியர் மற்றும் இரண்டு கலைஞர்கள் சேர்ந்து பதுங்கு குழிகளில் ஒரு ஹோட்டலை உருவாக்கினர். அதற்கான கட்டணம் ஒரு இரவுக்கு £20 என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்த பதுங்கு குழி ஹோட்டல் மொத்தம் 14 படுக்கைகளை மட்டும் கொண்டிருந்தது. பதுங்கு குழிகளை என்றால் கூட இந்த ஹோட்டலுக்கு வர விருந்தினர்கள் தயாராக இருந்தனர். இந்த வித்யாசமான அனுபவத்திற்கு £20க்கு மேல் செலுத்த கூட தயாராக இருந்ததால் வணிகத் திட்டம் நேர்மறையான முடிவுகளைத் தந்தது.ஹோட்டலின் அடுத்தடுத்த பதிப்புகள் முன்னாள் அணுசக்தி பதுங்கு குழி மற்றும் மலை உச்சியில் உள்ள இடம் உட்பட மற்ற இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

திட்டம் வெற்றியடைந்தவுடன், அவர்கள் மூவரும் பதுங்குகுழி ஹோட்டலை மூடிவிட்டு தங்கள் திறந்தவெளி ஹோட்டல் யோசனையில் வேலை செய்யத் தொடங்கினர். திறந்தவெளி ஹோட்டல் 2016 ஆம் ஆண்டு சுவிஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,463 அடி உயரத்தில் திறக்கப்பட்டது.

ஜெர்மன் மொழியில் "பூஜ்ஜிய நட்சத்திர ஹோட்டல்" என்று பொருள்படும் Null Stern Hotel ஜன்னல் , கதவு, சுவர் என்று எதுவும் இல்லாமல் மலையில் தாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. மலையில் இருந்து மாலை சூரியனை பார்ப்பதில் தொடங்கி இரவு முழுவதும் திறந்த வெளியில் மலையின் சாரலில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இருக்கலாம். காலை கண்விழிக்கும்போதே சூரிய உதயத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும்.

படுக்கை மற்றும் இருந்தால் மற்ற தேவைகளுக்கு யாரை அழைப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதற்காகவே ஒரு 'நவீன பட்லர்' எனப் பயிற்சி பெற்ற உள்ளூர்வாசி ஒருவர், விருந்தாளிகளுக்குச் சேவை செய்வதற்கும், அதிகக் காற்றில் படுக்கைகளை உருவாக்குவதற்கும் எப்போதும் அருகிலுள்ள ஒரு குடிசையில் வசிக்கிறார். மேலும் இந்த ஹோட்டலின் குளியலறை படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது.

இதையும் பாருங்க: வெறும் 23,000 ரூபாயில் 5 மாநிலங்களுக்கு 11 நாள் IRCTC சுற்றுலா பேக்கேஜ்.. எங்கெங்கே தெரியுமா..?

இந்த ஹோட்டல் சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு இடங்களில் ஏழு படுக்கைகளை வழங்குகிறது. ஒரு இரவுக்கான விலை தோராயமாக £251 ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 16,000 ரூபாய் செலவாகும். வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் புக்கிங் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும். உங்களுக்கும் இது போன்ற ஒரு மலை தொடரில் திறந்த வெளியில் தங்க திட்டம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்!

First published:

Tags: Hotel, Travel, Travel Guide