விமானத்தில் தனியாக பயணம் செய்ய விரும்பாதவர் யார்? அது பலருக்கும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். முழு விமானத்தையும் நீங்களே வைத்திருந்தால் இது சாத்தியமாகும். ஆனால், அதற்கு நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும் அல்லது மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு அதிஷ்டம் இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு கிடைத்துள்ளது. போர்ச்சுகலில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கு 3 மணி நேர விமானத்தில் ஒரே பயணி என்ற 'வித்தியாசமான அனுபவத்தை'பெற்ற சம்பவத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
65 வயதான பால் வில்கின்சன், தனது குடும்பத்தை சந்திப்பதற்காக போர்ச்சுகலில் இருந்து வடக்கு அயர்லாந்திற்கு தனது Jet2 விமானத்தில் ஏறிய போது இந்த இனிமையான சம்பவம் நடந்தது. அவர் எரிய ஜெட்2 விமானத்தில் வேறு ஆட்களே இல்லை. அந்த அவ்விமானத்தின் ஒரே பயணி அவர் தான்,
ஆரம்பத்தில் விமான நிலைய வாயிலில் லைன் இல்லாததைக் கண்டு சற்று குழப்பமடைந்த அவர், விமானம் தாமதமாகிவிட்டதா அல்லது ரத்து செய்யப்பட்டதா என்று விசாரித்தபோது, விமானத்தில் பயணிக்க இருப்பது அவர் மட்டுமே என அந்த விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில், வில்கின்சன் இது ஒரு வகையான பிராங்க் போல . மற்றவர்கள் பின்னர் வர இருக்கிறார்கள் என்று நினைத்துள்ளார். ஆனால் விமானம் தரையில் இருந்து கிளம்பிய பின்னும் யாரும் வராதபோது தான் அதன் உண்மை அவருக்கு விளங்கியுள்ளது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் அது அவரது சொந்த ஜெட் விமானம் போல் அவரை நினைக்க செய்துள்ளது.
இந்த பயணத்தில், விமானப் பணிப்பெண்கள் அவரை ‘கிங் பால்’ என்று அழைத்து, அவருக்கு பிரத்யேக உபசரிப்பு வழங்கியதையும் அதே போல அந்த மொத்த விமானத்தில் அவருக்கு பிடித்த இருக்கையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டதையும் பெருமையாக பகிர்ந்து கொண்டார். புறப்படுவதற்கு முன் கேப்டனுடன் நட்பு ரீதியாக உரையாடியதாகவும், விமானத்தை சுற்றி நடக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
வில்கின்சன் விமானத்தில் இருந்து வெளியேறும் ஒரே பயணியாக இருந்ததாகவும், பாஸ்போர்ட் சோதனை முகவர்கள் அவரது ஆவணங்களை செயலாக்கும்போது ஒற்றை பயணி என்ற நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
மொத்த விமானத்தில் தனியா சொகுசா பயணித்தாலும், அவரது இந்த முழு பயணத்திற்கு அவருக்கு வெறும் $162 (தோராயமாக ₹13,000) செலவாகியுள்ளது. தனி பயணி என்பதற்காக எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. தனி ஒருவருக்கு விஐபி பாணியில் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏர்லைன்ஸ் நிறுவனம் தனித்துவமான இந்த விமான பயண சூழ்நிலையைப் பற்றி கருத்துத் தெரிவித்தது, மேலும் பால் வில்கின்சனை ஹோஸ்ட் செய்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும், அவருக்கு சிறந்த வாடிக்கையாளர் சேவையை உண்மையான விஐபி பாணியில் வழங்கியதாகவும் கூறினர்.
ஒரே ஆள் தான் புக்கிங் செய்தியிருக்கிறார். எதற்கு ஒருவருக்காக விமானத்தை இயக்க வேண்டும். விமானத்தை ரத்து செய்துவிடலாம் என்று விமான நிறுவனம் நினைக்கவில்லை. ஒருவர் இருந்தாலும் அவருக்காக அனைத்து ஊழியர்களுடன் விமானத்தை அயர்லாந்துவரை இயக்கியுள்ளனர். அதனால் தான் இந்த அற்புதமான சரித்திரம் பதிவாகியுள்ளது. இது பாராட்டுக்கு உரியது தானே? என்ன சொல்றிங்க !
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight travel, Travel