விசித்திரமான மற்றும் துரதிர்ஷ்டவசமான உலக நிகழ்வுகளின் வரலாற்று பக்கங்களில், நாம் எப்போதும் லாவோஸ்(Laos) என்ற தென்கிழக்கு ஆசிய நாட்டில் பெயரை கவனிக்க முடியும். டிசம்பர் 1964 முதல் மார்ச் 1973 வரை லாவோஸில் 260 மில்லியன் குண்டுகள் வீசப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றுவரை உலகில் அதிக குண்டுவீச்சு சம்பவங்களை எதிர்கொண்ட நாடு லாவோஸ் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தென்கிழக்கு முக்கிய நாடுகளான சீனா, மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து என்று 5 நாடுகள் சூழ்ந்த நிலத்தால் சூழப்பட்ட(landlocked ) நாடுதான் லாவோஸ்.
வரலாறு
வியட்நாம் போரின் போது, லாவோஸ் ஒரு மறைமுக பங்கேற்பாளராக இருந்தது. லாவோஸில் உள்ள ஒரு அரசியல் குழு அவர்களின் உள் விவகாரங்களில் வடக்கு வியட்நாமின் ஆதரவைப் பெற்றது. இந்த உறவின் காரணமாக, லாவோஸ் அறியாமலேயே அமெரிக்காவின் ரேடாரின் கீழ் வந்தது.
லாவோஸ் வடக்கு வியட்நாமின் சரக்கு மற்றும் ஆயுத விநியோக பாதைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக, லாவோ அரசியல் குழு மற்றும் வடக்கு வியட்நாமுக்கு எதிராக பல குண்டுவீச்சு நிகழ்வுகள் நடந்தன. இந்த குண்டுவீச்சு சம்பவங்கள் லாவோஸ் நாட்டில் பல உள்கட்டமைப்பிற்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர வைத்தது.
அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ, அந்த நாட்டின்மீது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்கவில்லை. ஆனால் ஆபத்துக்கு அசைபோடும் சம்பவம் என்னவென்றால், வெடிக்காத மில்லியன் கணக்கான குண்டுகள் இன்னும் லாவோஸ் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. ஒரு சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டாலும் அகற்றப்படாதவை எக்கச்சக்கமாக உள்ளன.
பாதுகாப்பாக அகற்றப்பட்டவை இப்போது UXO லாவோஸ் பார்வையாளர்கள் மையத்தில் எனும் காட்சியகத்தில் ஒரு பகுதியாக வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளந. இது நிச்சயமாக உலகில் உள்ள மற்ற எந்த அருங்காட்சியகத்தை விடவும் மிகவும் அசாதாரணது என்று சொல்லலாம். UXO லாவோஸ் பார்வையாளர்கள் மையம் லாவோஸ் தலைநகர் வியன்டியானில் அமைந்துள்ளது.
இந்த மையம் லாவோஸில் புதைந்து கிடைக்கும் வெடிக்காத வெடிகுண்டு (unexploded ordnance)(UXO) மற்றும் அதனால் எழக்கூடிய பிரச்சனைகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டில் உள்ள வெடிக்காத குண்டுகளை தேடி அப்புறப்படுத்த, UXO லாவோ, தேசிய அனுமதி அமைப்பு மற்றும் லாவோஸில் UXO களை அழிக்க பணிபுரியும் பிற அமைப்புகளின் பணி பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
இதையும் படிங்க: 11,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசிக்கும் உலகின் பழமையான நகரத்தைப் பற்றி தெரியுமா..?
UXO லாவோஸ் பார்வையாளர்கள் மையம் பார்வையாளர்களுக்கு வெடிக்காத குண்டுகளை பார்க்க மட்டும் அனுமதி தராமல் இதுபோன்ற வெடிக்காத குண்டுகளை தேடி எப்படி அகற்றுவது என்பதை பற்றியும் கற்றுக்கொடுக்கிறது. அது மட்டும் இல்லாமல் லாவோஸின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறியும் வாய்ப்பையும் பெறுவார்கள். இந்த மையம் வியன்டியனில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel