முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹன்சிகா மோத்வானி ஹாலிடே கொண்டாடிய தாய்லாந்தின் கிராபி கரை.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

ஹன்சிகா மோத்வானி ஹாலிடே கொண்டாடிய தாய்லாந்தின் கிராபி கரை.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

தனது வாழ்க்கையில் முதன் முறையாக ஸ்கூபா டைவிங் செய்ய இருப்பதாக சொல்லிய ஹன்சிகா அதற்கான பயிற்சிகளை முதலில் எடுத்துக் கொண்டார்.

  • Last Updated :
  • Chennai, India

 தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கேற்ற பப்ளியான கதாபாத்திரங்கள் ஏற்று தனது நடிப்பு திறமையால் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கை வசம் வைத்திருக்கும் ஆள்தான் ஹன்சிகா மோத்வானி. தமிழ் , தெலுங்கு படங்களில் அதிகம் வலம்வந்த இவர், எங்கேயும் காதல் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மான்கராத்தே, ரோமியோ ஜூலியட், போகன், சிங்கம் 2 போன்ற  படங்கள் மூலம் பிரபலம் ஆனார்.

டிசம்பர் 4, 2022 அன்று தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் காதலரான சோஹேல் கதுரியாவை மணந்தார். தனது திருமண விழா முழுவதையும்  டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் “லவ், ஷாதி, ட்ராமா” என்ற ஆவண படமாகவும் வெளியிட்டார். எப்போதும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் தனது விடுமுறை மற்றும் பிற பயண தருணங்களின் படங்களை தற்போது  பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தாய்லாந்தில் உள்ள கிராபி பகுதிக்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருக்கும் ஹன்சிகா அங்கு அனுபவித்த பயண அனுபவங்களை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்திலும், பயண படங்களை தனது சமூக ஊடங்களிலும் வெளியிட்டுள்ளார்.  அங்கிருந்து தனது கணவருக்கு ஒரு அழகான பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை எடுத்து அதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தமான் கடலின் கிழக்கு கரையோரம் தாய்லாந்து கடற்கரை பகுதியில் கிராபி(krabi) அமைந்துள்ளது. உயரமான மணல் கற்களால் ஆன பாறைகள், மலை பகுதிகள், கடலுக்கு இடையிடையே உள்ள பெரிய பாறைகள்,  பவளப்பாறைகள் அமைந்துள்ள  இந்த இடத்தில் ஹன்சிகா தனது டீமுடன் 2 நாட்கள் ஜாலியாக கழித்துள்ளார். முதல் நாள் கிராபி கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் செய்துள்ளார்.

தனது வாழ்க்கையில் முதன் முறையாக ஸ்கூபா டைவிங் செய்ய இருப்பதாக சொல்லிய ஹன்சிகா அதற்கான பயிற்சிகளை முதலில் எடுத்துக் கொண்டார். கடலுக்கு அடியில் சென்ற பிறகு அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அசைவுகரியங்களை சொல்லி மேலே இழுக்க சொல்லும் சைகை முறைகளை பயிற்றுனர் சொல்லிக் கொடுக்கிறார். குழந்தை போல சுட்டித்தனமாக அதை விளையாடிக்கொண்டே கற்றுக்கொள்ளும் ஹன்சிகா தனது ஸ்கூபா அனுபவங்களை வீடியோவில் பகிர்கிறார். 

கிராபி சுற்றி தெளிந்த நீர் மற்றும் பவள பாறைகள் இருப்பதால் இது ஸ்கூபா டைவிங் செய்ய ஏற்ற இடமாகும். கரையில் இருந்து 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களுக்குள் இந்த ஸ்பாட்களை அடைந்து விடலாம். அயோ நாங் உள்ளூர் தீவுகள் (Ao Nang Local Islands) , கோ ஹா யாய் ( Koh Haa Yai), ஹின் டேங் ஹின் முவாங் (Hin Daeng Hin Muang), ஃபை ஃபை தீவுகள்(Phi Phi Islands), சிமிலன் தீவுகள் (Similan Islands) எல்லாம் இங்குள்ள சிறந்த ஸ்கூபா ஸ்பாட்கள்.

அதற்கு அடுத்தபடியாக ஹன்சிகா கிராபி கரைகளில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை கண்டார். பொதுவாகவே தாய்லாந்து கடற்கரைகள் ரம்யமான காட்சி அளிக்கும். அதிலும் சிறந்த தெளிவான நீர் கொண்ட சுத்தமான கடற்கரையை கிராபி கொண்டிருக்கும். தாய்லாந்துக்கு திட்டமிடும்போது கிராபி கடற்கரைகளை மிஸ் செய்து விடாதீர்கள். 

' isDesktop="true" id="919245" youtubeid="2g7J5Ts83HY" category="travel">

அதே போல ஹன்சிகா செய்த மற்றொரு பயணம் கிராபி கரையில் இருந்து படகு மூலம் அந்தமான் கடலில் சுற்றி வந்தது. மக்கள் அதிகம் பயணிக்காததால் கூட்டம் குறைவாகவும் அதே நேரம் அழகிய பசுமையான காட்சிகள் சூழ்ந்த இந்த பயணம் நிச்சயம் பயணியின் மனதை சிலிர்க்கவைக்கும். அங்கிருந்து ஸ்நோர்கெலிங் ஸ்பாட் களுக்கு செல்லும் வாய்ப்புகளும் இருக்கும். அது மட்டும் அல்லாமல் படகில் செல்லும் போது கடலில் உள்ள மீன்களுக்கு உணவு வழங்கி கொண்டு அவை சாப்பிடும் அழகையும் ரசிக்கலாம். 

இதையும் பாருங்க :வெளிநாட்டில் பயணித்து கொண்டே வேலை செய்யும் டிஜிட்டல் நாடோடி விசா பற்றி தெரியுமா?

இது போக கிராபியில் வேறென்னவெல்லாம் செய்யலாம் என்று நங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இங்குள்ள ரெய்லே பீச், ராக் க்ளைம்பிங் சாகசம் செய்ய பிடித்தவர்களுக்கு கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்களுக்கும் ஏற்றது. காவ் கானாப் நாம் (Khao Khanap Nam)எனும் இடத்தில் வரலாற்றுக்கு முந்தைய குகைகளை காணலாம்.

அதுமட்டும் இல்லாமல் இங்குள்ள இரவு முழுவதும் இருக்கும் சந்தைகள் மிஸ் செய்துவிடவே கூடாதவை. அதேபோல தாய்லாந்து போனால் அதன் தெருவோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள். குறிப்பாக கோ லந்தா யாயில் உள்ள உள்ளூர் உணவு சந்தையை விட சிறந்த ஸ்பாட் இருக்கவே முடியாது. ஒரே இடத்தில் ஸ்கியூவர்ட் (skewered) மற்றும் நாவில் எச்சி ஊற வைக்கும் பார்பிக்கியு உணவுகளை ருசிக்கலாம்.

ஹன்சிகா தனது 2 நாள் பயண அனுபவங்களை Krabi Getaway 2023 என்ற தலைப்பில் தனது யூடியூபில் பயண vloug வெளியிட்டு மக்களையும் இந்த அனுபவங்களை நேரில் சென்று பார்க்கும் படி கேட்டுள்ளார். நீங்கள் தாய்லாந்து போகும் திட்டம் இருந்தால் கிராபி கடற்கரையில் இந்த செயல்களை எல்லாம் அனுபவிக்க மறந்துவிடாதீர்கள் மக்களே!

First published:

Tags: Hansika, Travel, Travel Guide