பார்ட்டி என்று சொன்னதும் நம் ஊர் ஆட்கள் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது பாண்டிச்சேரி. அதற்கு அடுத்தப்படியாக நினைவுக்கு வரும் நகரம் கோவா. கடற்கரைகள், மது, பார்ட்டி என்று குதூகலமாக இருக்கும் நடராம் அது. அதுமட்டும் இல்லாமல் பல கலாச்சாரங்கள் சங்கமிக்கும் இடம் அது.
பாண்டிச்சேரி அரசு தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிதா சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரை ஒரு நாள் சுற்றுலா செல்வதற்கான பீர் பஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் பாண்டிச்சேரி அரசு அனுமதித்த இடங்களில் பீர் கூட பயணத்தில் கிடைக்கும் . அதுபோல இப்போது கோவா அரசு ஒரு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவா சுற்றுலாத் துறையானது ஏப்ரல் 21-23 வரை 'ஸ்பிரிட் ஆஃப் கோவா' என்ற திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கோவாவில் பாரம்பரியமாக முந்திரி மற்றும் தேங்காய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உள்ளூர் மதுபானங்களை சார்ந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த திருவிழா கோவாவின் மறுபக்கத்தைக் காண உங்களை அழைத்துச் செல்லும்.
இந்த 3-நாள் நிகழ்வு தெற்கு கோவாவில் கோல்வா கடற்கரையில் நடைபெறும். மேலும் தேங்காய் மற்றும் முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள், பானங்கள், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் வீட்டில் செய்யப்படும் 'உரக்' மற்றும் 'ஃபெனி' போன்றவற்றைக் காட்சிப்படுத்தும் .
அதே போல இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற சமையல்காரர்களால் நடத்தப்படும் சமையல் செயல் விளக்கம், கோவா உணவு வகைகளைக் காட்சிப்படுத்துதல், கோவாவின் பாரம்பரிய மதுவான ஃபெனிக்கு முந்திரி மற்றும் தேங்காய் பால் வடித்தல் மற்றும் அவற்றை தயாரிப்பதற்கான மாஸ்டர் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்புகளில் சுற்றுலா பயணிகள் பங்கேற்கலாம்.
3 நாள் திருவிழாவானது மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பார்வையாளர்கள் சிறந்த கோவா உணவு வகைகளை ரசிக்க பல உணவுக் கடைகளையும் காணலாம், அதேசமயம் பொழுதுபோக்கிற்காக, இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மிமிக்ரி, நடன நிகழ்ச்சிகள் மற்றும் இன்னும் நிறைய இருக்கும்.
கோடை காலத்தில் பீச் பாரதி மட்டும் இல்லாமல் கோவாவின் பாரம்பரித்தை பற்றி தெரிந்துகொள்ளவும் உள்நாட்டு மதுக்களை செய்ய கற்றுக்கொள்ளவும் இந்த திருவிழா சிறந்த வாய்ப்பாக அமையும். அதோடு கோவாவின் சுவையான கடல் உணவுகளை உண்பது, சர்ஃபிங் செய்வது, பவளப்பாறைகளை நீருக்கடியில் சென்று பார்க்கும் ஸ்நோர்க்லிங் என்று எல்லா சாகசங்களையும் செய்யலாம்
மிகவும் சுவையான கோவா உணவு வகைகளை ரசிப்பது முதல் அற்புதமான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருப்பது வரை, ஸ்பிரிட் ஆஃப் கோவா திருவிழா இந்த ஆண்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். கோவாவில் மிஸ் செய்யக்கூடாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Goa, Travel, Travel Guide