உலகம் முழுவதும் இயற்கை, கட்டிடக்கலை, கோவில்கள், விலங்கியல் பூங்காக்கள் போன்ற பல காரணங்களுக்காக பல இடங்கள் பிரபலமாகி உள்ளன. அவற்றின் அழகிய காட்சிகளைக் காண நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். ஆனால் மக்கள் வந்து போக இன்றும் ஒரு சாலை கூட இல்லாத ஊரை கேட்டிருக்கிறீர்களா? அதைப் பற்றி தான் சொல்ல போகிறோம்.
அது எப்படி நடக்கும்? இன்றைய நகரங்களில் அகலமான தார் சாலைகள் இருந்தாலே வண்டிகள் தேங்கி நின்று ட்ராபிக் ஜாம் பண்ணிக்கிடக்கும். சாலைகள் இல்லாமல் மக்கள் எப்படி பயணிப்பார்கள் என்று இப்போது நீங்கள் யோசிப்பது தெரிகிறது. .இங்கு எல்லா மக்களும் கார் பைக்கிற்கு பதிலாக சொந்த படகுகளை வைத்திருக்கிறார்கள். தங்கள் படகில் நகரை சுற்றி வருகிறார்கள்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்தில் கிதோர்ன் (giethoorn) என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் தான் சாலைகளுக்கு பதிலாக நீர்வழிப் பாதையை போக்குவரத்திற்காக பயன்படுத்துகிறது. இதன் நிதர்சன நிகழ்வுகளை கவனிக்கும்போது இதன் சிறப்புகள் தெரியும்.நெதர்லாந்தில் உள்ள கிதோர்ன் கிராமம் அதன் இயற்கை அழகால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளைத் தன்பால் ஈர்க்கும் இடமாக உள்ளது.
ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து அதன் அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் ஊரை சுற்றி பார்க்க இந்த கிராமத்தில் ஒரு மோட்டார் வாகனம் கூட இல்லை. கிராமத்திற்குள் எங்காவது செல்ல விரும்புபவர்கள் படகு உதவியுடன்தான் செல்ல முடியும். இதற்காகவே இங்குள்ள கால்வாய்களில் மின்மோட்டார் மூலம் படகுகள் இயக்கப்பட்டு,வருகின்றன.
கார்பன் உமிழ்வு, நாய்ஸ் பொல்லுஷன் , ஓசோன் ஓட்டை என்று பல சுற்றுசூழல் பாதிப்புகள் இருந்து வரும் நிலையில். இதற்கு எல்லாம் சரியான தீர்வாக கிதோர்ன் கிராமம் உள்ளது. இங்கு கால்வாய்களில் ஒட்டப்படும் படகுகள் மிகக் குறைந்த சத்தம் மட்டுமே எழுப்புகின்றன. மேலும் எந்த புகையையும் அவை உமிழ்வதில்லை.
நெதர்லாந்தில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 3000 பேர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு சொந்தமாக தனித் தீவுகள் போல் வீடுகள் இருப்பதால் கால்வாய்கள் வழியாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லா வீடுகளுக்கும் சொந்த படகு உள்ளது.
அதே சமயம் கிராமத்தின் வழியாக செல்லும் கால்வாயில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அங்காங்கே மரப்பாலங்களை சிலர் அமைத்துள்ளனர். அப்படி இந்த கிராமத்தில் 180க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. கால்வாய் வழியாக செல்லும் அளவுக்கு தூரம் இல்லாத இடங்களை மரபாலங்கள் வழியாக மக்கள் கடக்கின்றனர்.
இந்த கிராமம் 1230 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, ஆரம்பத்தில் அதன் பெயர் கேடன்ஹார்ன் என்று இருந்தது. ஆனால், பின்னர் அதன் பெயர் கிதோர்ன் ஆனது. கிராமத்தில் கால்வாய் கட்டப்பட்டதற்கும் ஒரு வரலாறு உண்டு. இந்த 1 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்கள் ஒரு காலத்தில் எரிபொருளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை கறியை கிராமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் குழந்தைகள் பெயரா..? கர்நாடகாவின் விசித்திரமாக பெயர் சூட்டும் கிராமம்..!
அகழ்வாராய்ச்சியின் போது பல குளங்கள் மற்றும் ஏரிகள் இங்கு உருவாக்கப்பட்டன. அப்போது, கரியைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களால், இந்த இடம் ஒரு அழகான சுற்றுலாத் தலமாக உலக வரைபடத்தில் இடம் பெறும் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.நீங்கள் ஐரோப்பா செல்லும் வாய்ப்பு அமைந்தால், இந்த இடத்தை மறந்து விடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boats, Travel, Travel Guide