முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நட்சத்திர வானத்தை ரசிக்க ஆசையா..? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

நட்சத்திர வானத்தை ரசிக்க ஆசையா..? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இரவு வான சுற்றுலா

இரவு வான சுற்றுலா

பெனிட்டல் நகரத்தை விட்டுத் தொலைவில் இருப்பதாலும், அதிக உயரம் மற்றும் ஒளி மாசுபாடு இல்லாததாலும் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு சிறந்த இடமாகும்

  • Last Updated :
  • Uttarakhand (Uttaranchal), India

வானத்தை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான். சின்ன வயதில் நாம் பார்த்த வானத்திற்கும் இன்றைய வானத்திற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்றைக்கும் லட்சக்கணக்கில் பார்த்த வானத்தில் இன்றைய ஒளி மாசு காரணமாக சில நூறு நட்சத்திரங்கள் தான் தெரிகின்றன.

வரும் தலைமுறையினர் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை பார்க்க மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கும் இடங்களில் தற்போது நட்சத்திர வானத்தை பார்க்கும் தனித்துவ சுற்றுலாத்தலங்களை உலக நாடுகள் உருவாக்கி வருகின்றன.

இந்தியாவிலும், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், லடாக், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் இதற்கான தனித்துவமான இடங்கள் உள்ளன. அதோடு கூடுதல் சிறப்பாக மே 19-21 தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள பெனிட்டால், விண்வெளி மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு அஸ்ட்ரோ பார்ட்டியை  ஏற்பாடு செய்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் , இந்தியாவின் முதல் ஆஸ்ட்ரோ கிராமமாக பெனிடாலை உருவாக்க உத்தரகாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெனிட்டல் ஆஸ்ட்ரோ முகாம் என்று அழைக்கப்படும் ஒரு மாத கால ஆஸ்ட்ரோ முகாம், ஸ்டார்ஸ்கேப் எனப்படும் நட்சத்திர வானத்தை வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லாமல்  பல நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்.

பெனிட்டல் நகரத்தை விட்டுத் தொலைவில் இருப்பதாலும், அதிக உயரம் மற்றும் ஒளி மாசுபாடு இல்லாததாலும் நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு சிறந்த இடமாகும். தெளிவான வானம் மற்றும் செயற்கை விளக்குகள் இல்லாதது நட்சத்திரங்கள், விண்மீன்கள் மற்றும் பிற வான உடல்களைப் பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைகிறது. இருண்ட வானத்தை நாம் அனுபவிக்கக்கூடிய இந்தியாவில் உள்ள சில இடங்களில் பெனிட்டல் ஒன்றாகும்.

இரவில், பெனிடலில் உள்ள வானம் பொதுவாக பால்வெளி உட்பட நட்சத்திரங்களின் கண்கவர் காட்சியால் நிரம்பியுள்ளது, இது தெளிவான இரவுகளில் தெரியும். மே  மாதத்தில் வெயில் மற்றும் தெளிந்த வானம் காணப்படுவதால் இந்த நேரத்தில் பால்வெளி மண்டலத்தை பார்ப்பதற்கு சரியான நேரமாக அமைகிறது. அதனால் தான்  அஸ்ட்ரோ பார்ட்டியை  இந்த மாதத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிறப்பு நிகழ்வுக்கு  உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் வானியல் நிபுணர்களின் உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தொலைநோக்கிகள், வானியல் உபகரணங்களை கொண்டு வானத்தில் உள்ள  நட்சத்திரங்களை கண்காணிக்கலாம்.  அது மட்டும் இல்லாமல் கிரகங்கள், விண்மீன்கள், நட்சத்திரங்கள், பல்வேறு அண்ட நிகழ்வுகளை பார்ப்பது, ஆஸ்ட்ரோ-ஃபோட்டோகிராபி கற்றல், சூரியன்-டயல்களை எவ்வாறு உருவாக்குவது போன்றவற்றை கற்றுக்கொள்ளலாம்.

இந்த கோடை விடுமுறையை வித்தியாசமாக கொண்டாட விரும்பினால், எப்போதும் போகும் இடங்களுக்கு போகாமல் இது போன்ற புதுமையான அனுபவங்களை முயற்சி செய்து பார்க்கலாம். குழந்தைகளுக்கும் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். நிச்சயம் முயற்சி செய்து பாருங்க..இதற்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

இதையும் பாருங்க : பெர்முடா முக்கோணம் போல, மர்மங்கள் நிறைந்த உலகின் அமானுஷ்ய காடு பற்றி தெரியுமா..?

ஆஸ்ட்ரோ முகாமிற்கான பதிவு தொடங்கிவிட்டது மற்றும் நிகழ்வுக்கான டிக்கெட்டை  இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் . பதிவு செய்ய https://starscapes.zone/benital-registration/ என்ற இணையதளத்தில் கிளிக் செய்து  இப்போதே பதிவு செய்துகொள்ளுங்கள்.

First published:

Tags: Astronomy, Travel Guide