இன்று ஒரு விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் உள்ளூர் விமானங்களுக்கு டிக்கெட், போர்டிங் பாஸ், அடையாள அட்டை எல்லாம் தேவைப்படும். அதுவே வெளிநாட்டுக்கு செல்லும்போது, பாஸ்போஸ்ட், விசா, பயணத்திற்கான காரணம், அடையாள அட்டை என்று நிறைய ஆவணங்கள் தேவைப்படும். எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு தான் விமானத்தில் பயணிக்க அனுமதி அளிப்பார்கள்.
ஆனால் இந்த நிலை விரைவில் மாறப்போகிறது. எப்படி நம் அடையாளங்களை உறுதி செய்ய ஆதாரில் கைரேகை மற்றும் கண் விழியை பதிவு செய்வதை போல இனி நம் இதயத்துடிப்பு பாஸ்போர்டுக்கு அடையாளமாக மாற இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் உண்மையாக இது நடக்க போகிறது.
காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்களும் வளர்ச்சிகளும் வந்துகொண்டே இருக்கும். முதலில் மாட்டு வண்டியில் போவதே ராஜபோகமாக இருந்தது. ஆனால் இன்று அசால்டாக தனிநபர் விமானங்கள், பறக்கும் ஹெலிபோட்கள் வரை நம்மை இட்டுச்சென்றுள்ளது. அப்படி இருக்கும்போது அடையாளங்களை கண்டறிய புதிய தொழில் நுட்பங்கள் வருவது அதிசயம் அல்லவே.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட விமானக் குழுவான ஈஸிஜெட்டின் 'எதிர்காலப் பயணம்' என்ற தலைப்பில் விமான பயணத்தில் விரைவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்கால விமான நிலையங்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக மக்களின் இதயத்துடிப்பு மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை ஸ்கேன் செய்யும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பிர்க்பெக் கல்லூரியின் பேராசிரியர் பிர்கிட் ஆண்டர்சன் கூறுகையில், "முன்னோக்கிச் செல்லும்போது, நாம் பறக்கும் இடங்கள், தங்கியிருக்கும் தங்குமிடங்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு மாற்றப்படும்.
கைரேகைகள் மற்றும் விழித்திரையைப் போலவே, ஒவ்வொரு நபரின் இதய துடிப்பும் தனித்துவமானது என்று அறிக்கை கூறியது. இன்று கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பம் செயல்படுவதைப் போலவே பயணிகளின் இதயத் துடிப்புகள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் உலகளாவிய அமைப்பில் பதிவு செய்யப்படும்.
அதேபோல ஓடுபாதையில் விமானத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான நிலைய ஷட்டில் பேருந்துகள், e-VTOL பறக்கும் விமான டாக்சிகளால் மாற்றப்படும். அதேசமயம் விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அம்சத்திற்கான படங்கள் மற்றும் பாடல்கள் திரைகளில் அல்லாமல் பயணிகளின் கண்களில் நேரடியாக ஒளிரும் அம்சங்கள் வர உள்ளது.
இதையும் பாருங்க: சென்னையில் இன்னும் மூன்று மாதங்களில் அழகிய மிதக்கும் உணவகம் வரப்போகுது..!
விர்ச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துதல், பயணிகளை முற்றிலும் புதிய வழியில் விமான பயண அனுபவங்களை பெற அனுமதிக்கும். அதே நேரத்தில் இந்த வளர்ச்சிகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் உள்ளூர் வணிகங்களை ஆதரிக்கும் வகையில் அமையும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Passport, Technology