உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்க்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சுற்றுலாத் தலங்கள் உள்ள நாடுகள் அதற்கு மக்களை ஈர்க்க பலவிதமான ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகின்றனர். பெரிய அளவிலான சுற்றுலா தளங்கள் இல்லாத நாடுங்கள், பிரத்யேக சுற்றுலா இடங்களையே உருவாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் உலக அதிசயமான பிரமிடு உள்ள எகிப்து நாடு, அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முதன்முறையாக பல நுழைவு விசாவை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதே போல எகிப்து சென்று இறங்கியபின் வாங்கக்கூடிய விசா-ஆன்-அரைவல் தகுதியில் அதிக நாட்டினரைச் சேர்ப்பதாகவும் எகிப்திய சுற்றுலா அமைச்சர் அறிவித்துள்ளார்.
எகிப்து அரசின் சமீபத்திய அறிக்கைகளின்படி, அந்த நாட்டில் ஐந்தாண்டு காலத்தில் பலமுறை நுழைய அனுமதி அளிக்கும் விசாவை, $700 அதாவது இந்திய மதிப்பில் 57,500 ரூபாய் கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதே சமயம் 30 நாள் எகிப்தில் தங்கக்கூடிய ஒற்றை நுழைவு விசா $25 - இந்திய மதிப்பின் 2056 ரூபாய்க்கு கிடைக்கும்.
இந்த ஒற்றை நுழைவு விசா இப்போது 180க்கும் மேற்பட்ட நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் துறை அமைச்சர் அகமது இசா மேலும் கூறுகையில், பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளில் சீனாவும் இந்தியாவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் பின்னடைவைச் சந்தித்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பல நுழைவு விசாக்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
எகிப்தின் சுற்றுலா வர்த்தகம் என்று எடுத்துக்கொள்ளும்போது, கடந்த ஆண்டு நாடு 11.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும் இதை 2028 ஆம் ஆண்டில் 30 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதை அடைய இது ஆண்டுக்கு தனது சுற்றுலா பயணிகளின் வருகையை 25 முதல் 30% வரை அதிகரிக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எகிப்தின் பிரமிடுகள், நூற்றாண்டுகள் பழைய கெய்ரோ நகரம், நைல் நதியில் விசைப்படகு சவாரி, ராஸ் முஹம்மது தேசிய பூங்கா, சிவா உப்புக்குளம், கிப்டுன் தீவுகள், லக்சர், அலெக்ஸாண்ட்ரியா பழைய நகரம் என்று எகிப்தில் பார்க்க எக்கச்சக்கமான இடம் உள்ளது.
கடந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் சுமார் 30% சுற்றுலா பயணிகள் வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு உலகின் இரண்டு முன்னணி சுற்றுலா ஆதாரங்களான - ரஷ்யா மற்றும் உக்ரைன், சுற்றுலா என்பது முறையே 40% மற்றும் 80% சரிந்துள்ளது. அதே நேரம் மற்ற நாட்டினர் இழப்பை ஈடுசெய்துள்ளனர். இந்நிலையில் எகிப்தும் இந்த பட்டியலில் குதித்துள்ளது.
இதையும் பாருங்க: பிறந்த ஆமைக்குஞ்சுகள் முதன்முறை கடலுக்குள் போகும் காட்சியைப் பார்க்க சிறந்த இடங்களின் பட்டியல்..!
2023 ஆண்டு முடிவதற்குள் பெரும்பாலான நாடுகளில் இருந்து மக்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு படியாக, எகிப்தின் அருகில் உள்ள நாடுகளான மொராக்கோ, துருக்கியர்கள், இஸ்ரேலியர்கள், அல்ஜீரியர்கள் மற்றும் ஈரானியர்களுக்கு நுழைவு நடைமுறைகளை எளிதாக்க எகிப்து முயற்சிகளை மேற்கொள்ளும். இது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Egypt, Tourism, Travel Guide