நம்மில் நிறைய பேர் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வோம். ஆனால் ரயில் சார்ந்த நிறைய விஷயங்கள் நமக்கு தெரியாது. சார்ட் தயாரித்த பின்னர் கன்பார்ம் டிக்கெட் வாங்க வழி உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது போல ரயில் அமைப்புகள் மற்றும் நடைமுறைகளில் பல விஷயங்கள் தெரியாது. அவற்றை உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்.
இந்திய ரயில்வே வழக்கமாக மில்லியன் கணக்கான பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்கிறது. இந்திய ரயில்வே இதற்காக மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்பை இயக்குகிறது என்பது நமக்கு தெரியும். இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை இயக்க அதன் பின்னால் மிகப்பெரிய அமைப்பு தேவைப்படுகிறது.
பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே பல்வேறு வகையான பெட்டிகளை தயாரித்து வருகிறது. போக்குவரத்தைப் பொறுத்து, அந்த பெட்டிகள் ரயில்களோடு சேர்க்கப்படுகிறது. அந்த வழித்தடத்தில் வரும் கூட்டம், பேட்டி தேவைகளை பொறுத்து ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.
பொதுவாக ரயிலில் ஸ்லீப்பர், மூன்றாம் டயர் ஏசி, இரண்டாவது டயர் ஏசி, ஜெனரல் கோச்களில் இருந்து முதல் ஏசி போன்ற பெட்டிகளை பார்த்திருப்போம். ஒவ்வொரு பெட்டியில் பயணிப்பதற்கு அந்த பெட்டியின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? எல்லா ரயிலிலும் பொதுப் பெட்டிகள் (general compartment) ரயிலின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே இருக்கும். ஏசி பெட்டிகள் நடுவில் இருக்கும். அதை அடுத்து ஸ்லீப்பர் இருக்கும். இதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா என்று யோசித்ததுண்டா ? ஏன் இந்த அமைப்பு என்பதற்கான காரணத்தை சொல்கிறோம்.
ரயிலில் வெவ்வேறு வகுப்பு பெட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மனதில் கொள்கின்றனர். ஆனால், ரயிலின் முன்புறம் அல்லது பின்புறம் ரெயில்வே பொதுப் பெட்டிகளை ஏற்பாடு செய்வதால், விபத்து ஏற்படும்போது ஏழைப் பயணிகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ட்விட்டரில் மக்கள் குற்றம் சாட்டுவது தெரிந்ததே.
எனினும், இந்திய ரயில்வே இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. ஒவ்வொரு பெட்டியின் நிலையும் ரயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில்வேயால் தீர்மானிக்கப்படுகிறது, இது கோச் வகுப்பைப் பொருட்படுத்தாது என்றும் ரயிலின் நடுவில் ஏசி பெட்டிகளும், பொதுப் பெட்டிகள் கடைசியிலும் இருப்பது ஏன் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட ரயிலின் வழக்கமான பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நிலையத்திலும் பொதுப் பெட்டிகள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. எனவே எந்த ரயிலின் முன் மற்றும் பின்பகுதியில் பொது பெட்டிகளை வைப்பது பயணிகளின் போக்குவரத்தை சமமாக பிரிக்கும் என்கின்றனர்.
அப்படி இல்லாமல் ஒரே பகுதியில் ஜெனரல் கம்பார்ட்மெண்டுகளை வைக்கும் பட்சத்தில் ரயிலின் ஒரே பகுதியில் மக்கள் திரண்டால் எடை சமநிலை இல்லாமல், ஒட்டுமொத்த ரயில் அமைப்பும் நிலை குலைய வாய்ப்புள்ளது. ரயிலின் முன் மற்றும் பின்புறத்தில் ஜெனரல் கோச்சுகளை வைப்பதன் மூலம், ரயிலின் சமநிலையும் சரியாக இருக்கும். முன்னர் அடுத்துடுத்து தான் ஜெனரல் கோச்சுகள் இருந்துள்ளன .
இதையும் பாருங்க : தெரியாத இடங்களுக்கு பயணம் செல்லும் முன் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
இதனால் ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போல ஒரே இடத்தில இருந்தால் பயணிகள் உருவத்தில் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் பயணிகளின் வசதிக்காக இரயிலின் இரு முனைகளிலும் பொதுப் பெட்டிகளை ரயில்வே ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றவை பெட்டிகள் குறிப்பிட்ட அளவு பயணிகளுடன் நிலையான எடையுடன் வருவதால், அதன் வசதி வாரியாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Travel Guide