கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும். சாதாரண இடத்தை கூட அசத்தலாக மாற்றும் இருக்கிறது. ஒரு வெள்ளை சுவரின் மீது ஓவியம் வரைந்த பின்னர் அந்த சுவரின் தோற்றமே முற்றிலும் மாறிவிடும். ஒரு சுவருக்கே இப்படி என்றால் ஒரு நகரமே கலைநயத்துடன் இருந்தால் எப்படி இருக்கும்.
அப்படி ஒரு அழகிய நகரம் நம் நாட்டில் உள்ளது. ராஜபோக வாழ்க்கை முறைகளை பார்க்க விரும்பினால் அதற்கு தீனி போடும் பல இடங்களைக்கொண்டது தான் ராஜஸ்தான். அந்த ராஜஸ்தானின் மையப்பகுதியில் உள்ள ஷேகாவதி நகரம் தான், இந்தியாவின் வளமான கடந்த காலத்திற்கும் கலைத் திறமைக்கும் சான்றாக விளங்குகிறது. அதன் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் மற்றும் அழகான சுவரோவியங்களுக்காக குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானின் இந்த பிரமிக்க வைக்கும் ஷேகாவதி பகுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் போது வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் வண்ணம் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே இடத்தில் இருப்பதைக் காணலாம். இது போன்ற ஒரு கலவை வேறு எங்கு என்று தெரியாது. அப்படி ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.
ஷேகாவதி , உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கலைக்கூடம் என்று அழைக்கப்படுகிறது . இந்த முழுப் பகுதியும் விசித்திரமான நகரங்கள் மற்றும் குக்கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள எல்லா இடங்களுக்கும் தனக்கென அதனை கலை மரபு உண்டு. ஷேகாவதியில் உள்ள ஹவேலிகள் அல்லது மாளிகைகள் அழகிய சுவரோவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
அவை கடந்த காலத்தின் கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிற்கின்றன . இந்த பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் என்று தேடும் போது மாண்டவா, நவல்கர் மற்றும் ஃபதேபூர் ஆகியவை அதில் முதன்மையான இடத்தை பிடிக்கும். நகரத்தின் எந்த பக்கம் திரும்பினாலும் ஓவியம், நுணுக்கமான கட்டிடக்கலை, வித்தியாசமான கட்டிட வேலைப்பாடுகள் என்று எல்லாவற்றையும் பார்க்கலாம்.
ஷெகாவதியின் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் அவற்றின் விரிவான ஓவியங்கள் மற்றும் அற்புதமான முற்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஷெகாவதி பணக்கார வணிகர்களின் தாயகமாக இருந்தது. இந்த மாளிகைகள் அந்த வணிகர்களால் கட்டப்பட்டது, அவர்கள் அவற்றை அழகுபடுத்துவதற்கு நிறைய பணம் செலவழித்தனர்.
ஒவ்வொரு மாளிகையும் இந்திய புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்களால் சூழப்பட்டிருப்பதை பார்க்க முடியும். ஓவியங்களின் வண்ணங்கள் இயற்கையான நிறமிகளைக் கொண்டு திறமையான கைவினைஞர்களால் செய்யப்பட்டு வரையப்பட்டுள்ளது. இன்றும், ஷேகாவதி கலை மற்றும் கலைஞர்களின் மையமாக உள்ளது. இந்த ஹவேலிகள் கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதையும் பாருங்க: கோவையில் இருந்து ஒரு நாள் பயணம் செய்ய இந்த 'மினி திபெத்' சரியான ஸ்பாட்..!
ஒவ்வொரு ஆண்டும், ஷெகாவதி பல கலை விழாக்கள் மற்றும் கலை கற்றல் பட்டறைகள் நடத்தப்படுகிறது. இது உலகளாவிய கலைஞர்களை தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஷேகாவதியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் ராஜஸ்தானின் செழுமையான கடந்த காலத்தின் சாரத்துடன் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajasthan, Travel Guide