முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு பயணத்தை தொழிலாக மாற்றிய டெல்லி பெண்..! எப்படி இது சாத்தியமானது..?

கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு பயணத்தை தொழிலாக மாற்றிய டெல்லி பெண்..! எப்படி இது சாத்தியமானது..?

பயணத்திற்காக வேலையை விட்ட பெண்

பயணத்திற்காக வேலையை விட்ட பெண்

இப்படியே வாழ்க்கையை கடத்துவது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தனக்கு பிடித்த பயணத்தைக் தொடங்கலாம் என்று யோசித்துள்ளார்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்,  சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.   இருப்பினும், பிரச்சினை என்னவென்றால், நம் பிஸியான வேலை பழுவிற்கு மத்தியில் எவ்வாறு பயணம் செய்வது என்ற தயக்கம் தான். பயணிப்பதற்கு காசு வேண்டும். வாழ்வதற்கும் காசு வேண்டும். என்று பணத்திற்காக வேலையின் பின்னல் ஓடும்போது பயண கனவுகள் எல்லாம் மங்கிப்போய் விடுகிறது.

அதற்கான வாய்ப்புகளும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண் , தனது  லிங்க்ட்இன் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உலகம் சுற்றக் கிளம்பிவிட்டார். ஆகான்ஷாவின் பயணங்கள் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது.

டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்ற பிறகு, அகன்ஷா 2020 இல் பெயின் & கம்பெனியில் ஆய்வாளராக சேர்ந்தார். அகன்ஷா ஒரு வருடம் ஆய்வாளராகப் பணியாற்றிய பிறகு லிங்க்ட்இனுக்கு மாறினார். அகன்ஷா அசோசியேட் கிரியேட்டர் மேனேஜராக ஒரு  ஆறு மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்.

கொஞ்ச நாளிலேயே அவரது வேலை மற்றும் வாழ்க்கையை நினைத்து ஒரு சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மனதில் ஒரு சோர்வும் ஏற்பட்டுள்ளது. இப்படியே வாழ்க்கையை கடத்துவது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தனக்கு பிடித்த பயணத்தைக் தொடங்கலாம் என்று யோசித்துள்ளார்.

நான் என் வேலையை விட்டு வெளியேறியபோது, ​​​​நான் சோர்வாக இருந்தேன். எல்லா வேலைகளையும் நான் தனியாகவே செய்து வந்தேன். அப்போது தான் பயணிக்கும் எண்ணம் தோன்றியதை. அதற்கான வேலைகளைத் தொடங்கினேன். தனது கனவுகளை நிறைவேற்ற ஒருமுறை புறப்பட்டால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று தனது த்விட்டேர் பக்கத்தில் சொல்கிறார்.

பயணத்தை முழுநேர வேலையாக மாற்ற முடிவு செய்ததிலிருந்து, அகன்ஷா சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். ஆகான்ஷாவின் சமூக ஊடகப் பக்கங்களில் தனிப் பயணங்களின் ஸ்னாப்ஷாட்கள், தனியாகப் பயணிப்பவர்களுக்கான குறிப்புகள் மற்றும் ஆஃப்-தி-பீட் இடங்களின் விளக்கங்களை எழுதி வருகிறார்.

லிங்க்ட்இனில் இருந்து ராஜினாமா செய்ததன் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அகன்ஷா தனது ட்விட்டரில் 'கடந்த ஆண்டு நான் லிங்க்ட்இனில் இருந்து விலகினேன். அங்கிருந்து வெளியே வந்ததும் எனக்குள் சில வாக்குறுதிகளை அளித்துக்கொண்டேன். எனது பயண ஆர்வத்தில் கவனம் செலுத்துவது மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் முழு நேரத்தை செலவிட மட்டும் பயன்படுத்தும் நேரம் என்று . அதைத் தான் இன்று வரை செய்து வருகிறேன் என்றார்.

தனது பயணத்தைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் பல நாடுகளைக் கண்டுள்ளார்.  சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, வியட்நாம், தாய்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை அவற்றில் சில. அகன்ஷா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

அவரது பயண குறிப்புகளை வைத்து பலர் தங்களது பயணங்களைத் திட்டமிடும் அளவிற்கு மாறியுள்ளார். பயணம் தொடங்கியதில் இருந்து மட்டுமே சுமல் ஐந்து லட்சம் பாலோவர்களை பெற்றுள்ளார். மேலும் 'பயணத்தின் சாராம்சம் புதிய கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களைக் கண்டறிந்து தெரிந்துகொள்வது. அடுத்த இடத்துக்குப் போவதில் எனக்கு எப்போதும் உற்சாகம் பிறக்கும்.

இதையும் பாருங்க: வானில் நட்சத்திரங்கள் பார்ப்பதை ரொம்ப மிஸ் பண்றீங்களா..? இந்த இடங்களுக்கு போனால் கண்டு ரசிக்கலாம்..!

எனது பயணங்கள் மற்றவர்களை அவர்களின் கஷ்டமான  கட்டங்களிலிருந்து வெளியேற ஊக்குவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், நம்மைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத எல்லைகளை உடைக்க பெண்களுக்கு இது ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும்.' அகன்ஷா மோங்கா LinkedIn இல் எழுதியுள்ளார்.

First published:

Tags: Solo Travel, Travel Guide