முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிறுவர் பூங்கா கேள்விப்பட்டிருப்பீங்க...'பிங்க் பூங்கா' பற்றி தெரியுமா..?

சிறுவர் பூங்கா கேள்விப்பட்டிருப்பீங்க...'பிங்க் பூங்கா' பற்றி தெரியுமா..?

பிங்க் பூங்கா

பிங்க் பூங்கா

மாதா சுந்தரி சாலையில் ஒரு முன்னோடித் திட்டமாக 'பிங்க் பார்க்' அமைக்கப்பட்டதாகவும்,நல்ல வரவேற்பு பெற்றதாகவும் துணை ஆளுநர் குறிப்பிட்டார்.

  • Last Updated :
  • chennai |

ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது ஒரு சிறுவர் பூங்காவையாவது கிராம பஞ்சாயத்து அல்லது முனிசிபாலிடி அலுவலர்கள் உருவாக்கி இருப்பர். ஒரு சில நல்ல நிலையில் இருக்கும். ஒரு சில ஒழுங்காக கவனிக்கப்படாமல் புத்தர் மண்டி கிடைக்கும். அதை சீர் செய்து தருமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் பார்த்திருப்போம். 

பொதுவாக பூங்கா என்று சொன்னால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வந்து விளையாடும் , நடை பயிற்சி செய்யும் இடமாக தான் அது அமையும். ஆனால் ஒரு இலை நேரங்களில் பொது இடத்தில பெண்கள் உடற்பயிற்சி செய்யவும் விளையாடவும் தயங்குவர்,

இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில்  பெண்களுக்கென பிரத்யேகமான பிங்க் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த முயற்சியின் நோக்கம் பெண்களுக்கு மிகவும் வசதியான அதே நேரம் அமைதியான இடங்களை வழங்குவதாகும்.

அறிக்கைகளின்படி, அனைத்து டெல்லி முனிசிபாலிட்டி  வார்டுகளிலும் இந்த பூங்காக்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.இவை பெண் குழந்தைகளுக்கான தனித்துவமான பொன்னகவாக அமைய இருக்கிறது.  இதை டெல்லி துணை மேயர் ஆலே முகமது இக்பால் தான் முதலில் முன்மொழிந்துள்ளார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பின் போது, ​​தனது வார்டான சாந்தினி மஹாலில் இதுபோன்ற 'பிங்க் பார்க்' மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியபோது, ​​டெல்லி முழுக்க இதே போன்ற பூங்காக்கள் அமைக்கும்  யோசனை உருவாகியுள்ளது. பின்னர் இதுபோன்ற பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகளை முதல்வர் தொடங்கியுள்ளார்.

பின்னர் டெல்லியில் உள்ள தோட்டக்கலைத் துறையின் கூட்டத்தில், ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது ஒரு பூங்காவையாவது பிங்க் பூங்காவாக மாற்ற வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார், தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (MCD)  அதிகார வரம்பில் சுமார் 250 வார்டுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் எல்லாம் சரியான இடங்களை தேர்வு செய்யும் பனி நடந்து வருகிறது.

திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவித்த திரு இக்பால், மாதா சுந்தரி சாலையில் ஒரு முன்னோடித் திட்டமாக 'பிங்க் பார்க்' அமைக்கப்பட்டதாகவும், அங்கு 10 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பெண்கள்  அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார். நல்ல வரவேற்பை பெற்றதால்  இதேபோல், மற்ற வார்டுகளிலும்செய்தால் என்ன என்ற எண்ணம் வந்து முன்மொழியப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : 'ஜைனர்களின்' காசி என்று அழைக்கப்படும் மூடபித்ரி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

top videos

    மேலும் இந்த 'பிங்க் பார்க்'களில் சிசிடிவி கேமராக்கள், கழிப்பறைகள், சுவர்களில் கிராஃபிட்டிகள் மற்றும் ஜிம் வசதிகள் மற்றும்  பெண்களுக்கு அமைதியைத் தரும்  தோட்டக்கலை அமைப்புகளை இந்த  இடங்கள் வழங்குகின்றன. பொதுப் பூங்காக்களில் பெண்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான இடங்களை வழங்குவதே இந்த முன்முயற்சி.  நம் ஊருக்கு இந்த திட்டம் வந்தால் கூட நன்றாக இருக்கும்ல..

    First published: