சென்னையின் எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கு ஒரு வித்தியாசமான உணவகம் இருக்கும். மற்ற உணவகங்களை விட தங்கள் உணவகம் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லா கடை உரிமையாளர்களும் முனைப்பாக இருப்பர். தங்கள் உணவகத்திற்கு மக்களை ஈர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று தேடி தேடி செய்வர்.
குழந்தைகளை ஈர்க்க பூங்காக்கள் , விலங்கியல் பூங்கா, கார்ட்டூன் தீம் கொண்ட உணவன்கண்கள் உள்ளன. அதே வேளையில் கொன்றேன் ட்ராமாக்கல் பார்க்கும் மக்களை ஈர்ப்பதற்காக கொன்றேன் உணவகங்கள், அது சார்ந்த நபர்களின் ஓவியங்கள், படங்கள், போட்டோ ஸ்பாட்கள் அடங்கிய உணவகங்கள் உள்ளன.
அதே நேரம் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு ஏற்ற தலைவர் தீம் கடைகள், சினிமா சார்ந்த பொருள்களுடன் கூடிய கடைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொண்ணும் ரக ரகமாய் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும். இப்படி இருக்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக சுற்றுலாத்துறை ஏற்கனவே தொடங்கியுள்ளது.
வார இறுதி ஆனால் சிங்கிள்ஸ் முதல் குடும்பங்கள் வரை எல்லாரும் கிளம்புவது இந்த ECR சாலைக்கு தன. அதுவும் கொளுத்தும் வெயிலுக்கு முட்டுக்காடு சதுப்புநிலத்தில் ஒளிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இந்த எண்ணத்தை கப்பென்று பற்றிக்கொண்ட சுற்றுலாத்துறை இங்கேயே மிதக்கும் உணவகத்தை போடத் திட்டம் வகுத்துள்ளது.
சென்னை ECR சாலையில் முட்டுக்காடு படகு இல்லம் அருகே இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் 25 அடி அகலமும் 125 அடி நீளமும் கொண்ட உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை எளிதாக உணவருந்த முடியும். படகின் கீழ்த்தளத்தில் குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலும், சிறு சிறு தனி அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் திறந்தவெளி ரெஸ்டாரன்ட் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
காலையில் முட்டுக்காட்டில் சவாரி செய்து விட்டு மாலை நேரத்தில் அந்தி சாயும் நேரம் இந்த மிதக்கும் கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்தப்படியே உணவருந்தினால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எப்போது தீர்ப்பார்கள் என்ற ஆர்வம் பொங்கத் தொடங்கும்
படகு அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மார்ச் 24 அன்று தொடங்கி வைத்தார். மாநிலத்தின் முதல் மிதக்கும் உணவகமாக இது அமையும், மேலும் மூன்று மாதங்களில் இதனை கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதையும் பாருங்க: திறந்த வெளியில்.. அதுவும் மலை உச்சியில் ஸ்டார் ஹோட்டல் ரூம்களா..? எங்கு உள்ளது தெரியுமா.?
இதற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இத்திட்டத்தை மற்ற சுற்றுலா தலங்களுக்கும் விரிவுபடுத்துகிறோம் என்றார். சிறிய சமூக விழாக்கள் மற்றும் அரசாங்கத் துறைகளின் கூட்டங்களை நடத்துவது சிறந்ததாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே அமைந்திருக்கும் முட்டுக்காடு ஒரு அழகிய கிராமமாகும். உப்பங்கழிகள், பசுமையான சூழலுக்கு மிகவும் பிரபலமான முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு படகு குழாம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு செல்லும் போது படகு சவாரி, கயாக்கிங், கேனோயிங், தக்ஷின் சித்ரா , VGP கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் போன்றவற்றை கண்டு வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Restaurant, Travel