நான்கு புனித தலங்கள், அல்லது சார் தாம் என்பது இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்துள்ள இந்துக்களின் நான்கு புனித தலங்களை குறிக்கிறது. சார் தாம் எனும் வடமொழி சொல்லிற்கு நான்கு தலங்கள் எனப் பொருளாகும். பத்ரிநாத் , துவாரகா , பூரி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய நான்கு தலங்களுக்குச் செல்வது மோட்சத்தை (முக்தி) அடைய உதவும் என்று நம்பப்படுகிறது .
அதே போல உத்தரகண்ட் மாநிலம் அங்கு உள்ள 4 புனித தளங்களான ஹரித்வார், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு இந்து பக்தர்கள் செல்வதற்காக சார் தான் யாத்திரை ஏற்பாடு செய்துள்ளது. சார்தாம் யாத்திரை உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோயில்களுக்கு செல்கிறது.
இறுதியாக, பத்ரிநாத் கோவிலை அடைகிறது, இது நான்கு சார் தாம்களிலும் மிகவும் இளையது. இந்த யாத்திரையின் மொத்த தூரம் சுமார் 2500 கிலோமீட்டர்கள்.இந்த இடங்களுக்கு செல்லும் வழியில், யாத்ரீகர்கள் ரிஷிகேஷ், ஹரித்வார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல புனித ஸ்தலங்களுக்கும் அழைத்து செல்லப்படுவர்.
உத்தரகாண்ட் சார்தாம் யாத்திரை கால் நடை அல்லது குதிரை மூலம் செய்யப்படலாம். நேரம் குறைவாக இருக்கிறது அனால் செலவு செய்ய ரேடிய என்றால் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் இருந்து பயணிக்கலாம். சார் தாம் யாத்திரைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில அரசு மகாசிவராத்திரி தினத்தன்று சார் தாம் யாத்திரைக்கான தேதிகளை அறிவித்தது. மேலும் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித தலங்களின் கதவுகள் முறையே ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகளில் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாமின் நுழைவாயில்கள் பாரம்பரியத்தின்படி ஏப்ரல் 22 ஆம் தேதி திறக்கப்படும்.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, உத்தரகாண்ட் அரசாங்கம் இந்த ஆண்டுக்கான சார் தாம் யாத்திரைக்கான புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சார் தாம் யாத்திரைக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சார் தாம் யாத்திரைக்காகஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களும் கட்டாயப் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலாத் துறை ஆன்லைன் பதிவு முறையைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் பயணிகள் தங்களை எளிதாக பதிவு செய்யலாம். நீங்களும் அடுத்த மாத சார் தாம் யாத்திரையில் கலந்துகொள்ள விரும்பினால், https://registrationandtouristcare.uk.gov.in/signin.php இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 8394833833 என்ற வாட்டஸ் எண்ணுக்கு yatra என்ற செய்தி அனுப்புவதன் மூலம் பதிவு செய்யும் முறையையும் கொண்டுவந்துள்ளது.
இதையும் பாருங்க: மூத்த குடிமக்களும் பயணம் செய்ய 5 சிறந்த யோசனைகள்..!
கட்டாய பதிவு இல்லாமல் யாரும் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முதற்கட்டமாக இந்த ஆண்டு அட்சய திருதியை தினமான ஏப்ரல் 22 அன்று திறக்கப்படும் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாமுக்கான முன்பதிவு போர்டலை உத்தரகண்ட் மாநில சுற்றுலாத் துறைத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 4.17 லட்சம் யாத்ரீகர்கள் யாத்திரைக்கு பதிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Registration, Travel, Uttarkhand