முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த நூலகத்தில் புத்தகத்திற்கு பதிலாக 'மனிதர்களை' கடன் வாங்கலாம்..!

இந்த நூலகத்தில் புத்தகத்திற்கு பதிலாக 'மனிதர்களை' கடன் வாங்கலாம்..!

மனித நூலகம்

மனித நூலகம்

இந்த நூலகத்தில் உள்ள மக்களை 30 நிமிடங்கள் நீங்கள் இரவலாக பெற  முடியும்.

  • Last Updated :
  • Chennai |

கதைகளை தெரிந்துகொள்ள எண்ணினால் புத்தகங்களை தேடுவோம். புத்தகங்கள் கிடைக்காத சூழலில் இணைய புத்தகங்கள், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் ஆகிவற்றை பயன்படுத்துவோம். காதல் கதையோ அல்லது பேரழிவுகளில் இருந்து தப்பியவர்கள் வாழ்க்கை பற்றியோ கதைகளை அச்சடித்த காகிதங்களில் இருந்து வாசிக்காமல் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்தே கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

சுவாரசியமாக இருக்கும் தானே. அப்படி புத்தகங்களை அல்லாமல் மனிதர்களை இரவலாக பெரும் நூலகங்களும் இந்த உலகில் உள்ளதன. இப்படி மனிதர்களே புத்தகங்களாக விளங்கும் நூலகத்திற்கு மனித நூலகம் - Human library என்று பெயர். இந்த நூலகங்களில் உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்பு சார்ந்த மக்களிடம் பேசி அவர்களது அனுபவங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

'மனித நூலகம்' என்பது 2000 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் நடந்த ரோஸ்கில்ட் விழாவில் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய இயக்கமாகும். டேனிஷ் மனித உரிமை ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் ரோனி அபெர்கெல் மற்றும் அவரது கோபன்ஹேகன் நண்பர்களால்  "ஸ்டாப் தி வயலன்ஸ்" "Stop The Violence" என்ற இலட்சியவாத இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு  கல்வி மூலம் டென்மார்க் இளைஞர்களை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அணிதிரட்டுவதும் இலக்காக வைத்தது. அப்படி போரில் பாதிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக இந்த மனித நூலகத்தை கொண்டு வந்தனர். பின்னர் இந்த நூலக அமைப்பு 80 நாடுகளில் மனித நூலகங்களை நிறுவியுள்ளது. 

இந்த நூலகத்தில் உள்ள மக்களை 30 நிமிடங்கள் நீங்கள் இரவலாக பெற  முடியும்.அவர்களின் அனுபவம், வாழ்க்கை கதைகளை அவர்களோடு தனியாக பேசி தெரிந்து கொள்ளலாம். அவர்களிடம் எந்த கேள்வியையும் கேட்கும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. இதனால்  போர்,பேரிடர், கொடூர சமூக நிகழ்வுகளில் களத்தில் நின்ற நபர்களின் அனுபவங்களை உணர்வுபூர்வமாக தெரிந்துகொள்ள முடியும்.

OCD, PTSD, Misophonia, பாலுறவு பாதிக்கப்பட்டவர், பாலியல் துஷ்பிரயோகம், அபூர்வ ஊனமுற்றோர், இருபாலினம், மனிதத் தொடுதல் ஆசை, ஓய்வு பெற்றவர், உயர் IQ, மீட்கப்பட்ட மதுவிற்கு அடிமையானவர்கள், கொடுமைப்படுத்துதல் மற்றும் தத்தெடுப்பு போன்ற பல தலைப்புகளில் மக்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். அந்த தலைப்புகளின் அடிப்படையில் அவர்களை நாம் தேர்வு செய்யலாம் .

இது மற்ற மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும், எந்த மாந்தர், அல்லது மனித இனத்தின் மீதும் காழ்ப்புணர்வு, தவறான எண்ணம் வராமல் இருக்க பயன்படுகிறது. அதோடு மனித பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, பிரிவு மனப்பான்மை குறையும் என்றும் நம்புகின்றனர்.  

இதையும் பாருங்க: விலகாத மர்மம்.. குளிர்ந்த ஆறும், வெந்நீரும் ஒரே இடத்தில்.. ஆச்சரியங்கள் நிறைந்த சிவன் கோயில்!

top videos

    இன்று வரை, மனித நூலகம் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில்  அருங்காட்சியகங்கள், திருவிழாக்கள், மாநாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிகழ்வுகளை நடத்தியுள்ளது.டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உட்பட இந்தியா முழுவதும் ஒன்பது மனித நூலகங்கள் உள்ளன.

    First published:

    Tags: Book reading, Travel, Travel Guide