இப்போது எல்லாம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் கலாச்சாரம் தாண்டி, ஆன்லைனில் நமக்கு பிடித்த பொருட்களை தேடி வீட்டிற்கு ஆர்டர் போட்டுவிடுகிறோம். பொருட்கள் வீட்டுக்கு வந்த பின்னர் அதற்கான பணத்தை செலுத்தினால் போதும் என்ற முறை தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெளி ஊருக்கு டிக்கெட் புக்பண்ணும் போது அப்படி 1 வாய்ப்பு இருந்தால் எப்படி யோசித்திருக்கிறீர்களா?
இப்போது ஒரு தனியார் நிறுவனம் சுற்றுலா செல்லும் முன்னர் ரூம் புக் செய்துவிட்டு பின்னர் கட்டணம் செலுத்தும் ஆஃப்ஷன் தருவதை பார்த்திருப்போம். அது போல இப்போது ரயில் டிக்கெட்டையும் பணம் இல்லாமல் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டு பிறகு காசு கொடுக்கலாம் தெரியுமா?
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) இப்போது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கிரெடிட் லைன் செயலியான CASHe உடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்து புதிய திட்டம் இன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி IRCTC Rail Connect பயன்பாட்டில் "இப்போது பயணம் செய்யுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்" (TNPL) என்ற அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த அற்புதமான அம்சம் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட் தொகையை EMI களாக மாற்றி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தவணைகளில் செலுத்திக்கொள்ளலாம். இதனால் பயணம் திட்டமிடும்போது பெரிய பட்ஜெட் என்ற பாரம் இருக்காது. பொறுமையாக பயணம் முடித்துவிட்டு கட்டிக்கொள்ளலாம்.
இதே போல Paytm செயலியுடன் சேர்ந்து மற்றொரு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. அதில் paytm பயனர்கள் 'இப்போதே வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்' (Buy now, pay later) என்பதை பயன்படுத்தி முதலில் பயணம் செய்து, பின்னர் பணம் செலுத்தலாம். இது தற்போது ரயில் பயணிகளிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு Paytm போஸ்ட்பெய்ட் அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், 30 நாட்களுக்கு நீங்கள் ரூ.60,000 வரை வட்டியில்லா கிரெடிட்டைப் பயன்படுத்த முடியும் . ஒவ்வொரு பில்லிங் சுழற்சியின் முடிவிலும் பயன்படுத்தப்பட்ட தொகை பில் செய்யப்படும், மேலும் நீங்கள் அதை முழுமையாக செலுத்த வேண்டும்.
Paytm போஸ்ட்பெய்டைப் பயன்படுத்தி IRCTC இல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கானவழியை சொல்கிறோம். தெரிந்துகொள்ளுங்க:
IRCTC போர்ட்டலுக்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
தேதி மற்றும் சேருமிடம் உட்பட உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும்.
உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.
கட்டணப் பிரிவின் கீழ் "பின்னர் பணம் செலுத்து" என்பதைத் தேர்வு செய்து, "Paytm போஸ்ட்பெய்டு" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் Paytm அக்கவுண்ட் விபரங்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து OTP ஐ உள்ளிடவும். உங்கள் முன்பதிவு நிறைவடையும்.
எளிய வழிமுறையாகத் தானே இருக்கிறது? இனிமேல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி பணம் இல்லாமல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள், பயணம் முடித்த பிறகு பணம் செலுத்திக் கொள்ளலாம்! இனி ஜாலியா எங்க வேணும்னாலும் ட்ரிப் போகலாம் தானே?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.