முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மூத்த குடிமக்களும் பயணம் செய்ய 5 சிறந்த யோசனைகள்..!

மூத்த குடிமக்களும் பயணம் செய்ய 5 சிறந்த யோசனைகள்..!

முதிவர்களுக்கான சுற்றுலா

முதிவர்களுக்கான சுற்றுலா

வயது என்பது எதற்கும் தடை அல்ல. இளைஞர்கள் செய்யும் எல்லா சாகசங்களையும் தங்களாலும் செய்ய  காட்டி வருகின்றனர்.

  • Last Updated :
  • chennai |

பயணம் இளைஞர்களுக்கு மட்டுமானது என்று யார் சொன்னது? பயணம் என்பதற்கு வயதே கிடையாது. புதிய இடங்களை ஆராயவும் , நினைவுகளை உருவாக்கவும், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும் ஒரு பையை தூக்கிக்கொண்டு எந்த வயதிலும் பயணம் செய்ய தொடங்கலாம்.  வயது என்பது ஒரு எண் மட்டுமே.

முதியவர்கள் வேடிக்கை மற்றும் சாகசப் பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை . இன்று நிறைய வயது மூத்தவர்கள்,  இதுபோன்ற கட்டுக்கதைகளை உடைத்து, வயது என்பது எதற்கும் தடை அல்ல. இளைஞர்கள் செய்யும் எல்லா சாகசங்களையும் தங்களாலும் செய்ய முடியும் என காட்டி வருகின்றனர்.

ஒரு புத்துணர்ச்சியூட்டும் சாகசப் பயணத்திற்கு நீங்கள் கவனிக்க  வேண்டியதெல்லாம் குறைந்தபட்ச உடல் நிலை மற்றும் மன வலிமை மட்டும் தான். அது இருந்துவிட்டால் எந்த வயதிலும் சாகச பயணம் மேற்கொள்ளலாம். அப்படி வயது மூத்த மக்கள் செய்யக்கூடிய சாகச பயண ஐடியாக்களை இங்கே சொல்கிறோம் அதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

1. ரிவர் ராஃப்டிங் (River rafting) முழு விசையுடன் பாயும் ஆற்றின் ஆர்ப்பரிக்கும் அலைகளில் சவாரி செய்வதில் உள்ள சிலிர்ப்பும் உற்சாகமும் எதற்கும் ஈடாகாது. நதிகளில் செல்லும் வரியில் பல வகைகள் உள்ளன. நதியின் வேகத்தை பொறுத்து இது வகைப்படுத்தப்படும். ரிஷிகேஷ் , மகாராஷ்டிரா, போன்ற இடங்களில் அதிக வேகத்துடன் ஆர்ப்பரிக்கும்.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் உள்ள ஓர்ச்சா போன்ற இடங்களில் நதியின் வேகம் மிதமாக இருக்கும். ஆனால் அதே உற்சாகம் இருக்கும். மூத்தவர்கள் அதிக ரிஸ்க் இன்றி அதே நேரம் துடிப்பான சாகச பயணம் மேற்கொள்ள இவை சிறந்த இடங்களாக இருக்கும்.

2. ஒட்டக சஃபாரிகள்: எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிசா பிரமிடுகளில் ஒட்டகச் சவாரி செய்தாலும் சரி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரின் தங்க நகரத்தின் தங்க மணல் திட்டுகளை ஆராய்வதாயினும் சரி,  லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில்  உள்ள வெள்ளை மணல் திட்டுகளை ஆராய்வதாயினும், ஒட்டகச் சவாரி தான் அதற்கு சரியான தேர்வாக இருக்கும்.  சமவெளியில் வாழ்ந்து போர் அடித்த மூத்தவர்களுக்கு ஒட்டக சவாரி நல்ல சாகச முயற்சியாக இருக்கும்.

3. மலையேற்றம்: உலகெங்கிலும் அதிகம் விரும்பப்படும் சாகச நடவடிக்கைகளில் ஒன்றான மலையேற்றத்திற்கு குறைந்தபட்ச உடல் தகுதி இருந்தால் போதும். மூச்சு விடுவதில் சிரமம் இருபவர்கள் கால் வலி  உள்ளவர்கள் 3000 மீ உயரம் வரை உயரம் உள்ள  மலைப்பகுதிகள் நம் ஊரிலேயே நிறைய உள்ளது. அதை ஏறி பயணம் செய்யலாம்.

இயற்கை அன்னையின் அற்புதங்களை ஆராய்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் இது சிறந்த வழியாகும்! இன்னும் சொல்ல போனால் நம் ஊரு அருகே இருக்கும் சிறிய குன்றுகள், மலை கோவில்களை மலைப்பாதை வழியாக ஏறலாம்.

4. கடலுக்கடியில் நடைபயணம்:  தரையிலும் மலையிலும் நடப்பது மட்டும் சாகசம் இல்லை. அதை விட சுவாரசிய சாகசம் ஒன்று உள்ளது. இது நடக்க முடியாத மூத்த மக்களுக்கு கூட ஏற்ற சிறந்த சாகச பயண அனுபவத்தை தரவல்லது. அது தான் கடலுக்கு அடியில் நடைபயணம். கடலின் அடிப்பகுதியில் நடக்கவும், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? டைவிங்கிற்கான அசாதாரணமான மற்றும் பாதுகாப்பான அணுகுமுறையுடன், கடல் நடைப்பயண அனுபவத்தையும் இதன் மூலம் பெறலாம்.

இதையும் பாருங்க : விமான பயணத்தில் 30% வரை தள்ளுபடி பெற இதை பண்ணுங்க மக்களே!

இதை முயற்சிக்க பாலி போன்ற வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்ல தேவை இல்லை. நம் அருகே உள்ள ராமேஸ்வரம், பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் டைவிங் செய்யவும், கடலுக்கு அடியில் நடக்கவும் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றனர்.

5. காட்டு பயணம் மற்றும் தேசிய பூங்காக்களை ஆய்வு செய்தல்: உங்கள் பார்வை, செவிப்புலன், வாசனை அல்லது தொடுதல் ஆகியவற்றின் மூலம் நீங்கள் சுற்றுச்சூழலில் ஊறும்போது இயற்கையானது நமது ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  நீங்கள் நிதானமாக நடக்கவோ, நடைபயணம் செய்யவோ அல்லது விலங்குகளை அதன் பொக்ளிக்கில் பார்க்க விரும்பினால் இது சரியான தேர்வாக இருக்கும்.

top videos

    இயற்கை ஆர்வலர்களுக்கும் பறவை விலங்குகளை பொறுமையாக வேடிக்கை  பார்க்க விரும்பும் மூத்த மக்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். இயற்கையோடு உறவாடவும் நம்மை சுற்றி உள்ள உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும். பேர்ட் வாட்சிங்(bird watching), அனிமல் வாட்சிங் (animal watching)  என்று  தனியாக குழுக்களே இருக்கிறார்கள். அவர்களோடு காடு , அடர் வனங்களில் வாழும் விலங்கு, பறவைகளை பற்றி கற்றுக்கொள்ளலாம்.

    First published:

    Tags: Travel, Travel Guide