2019 இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் கம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பல வளர்ச்சி திட்டங்கள் அங் கொண்டுவரப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் ஸ்ரீநகர் கடந்த ஆண்டில் அதன் முதல் ஐநாக்ஸ்(INOX) மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை பெற்றது. அதன் பின்னர் இந்த ஆண்டில் Emaar என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் சார்பில் 'மால் ஆஃப் ஸ்ரீநகர்' (Mall of srinagar) என்ற ஷாப்பிங் காம்பேக்ஸ் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்து அந்த வரிசையில் ஸ்ரீநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்ட் வகை பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தான் இந்த புதிய தீம் பார்க் உருவாக்குவதற்கான நோக்கமாகும்.மேலும் ஜம்மு காஷ்மீர் தொழில்கள் மற்றும் வர்த்தக இயக்குநரகம் இந்த திட்டத்தை மேற்கொள்ளும் மற்றும் அதற்காக ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை (SPV) அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஸ்ரீநகரில் ஒரு தீம் கேளிக்கை பகுதியை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க உள்ளது. தேசிய அளவிலும், உலக அளவிலும் உள்ள தீம் பூங்காக்களால் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பற்றிய புரிதலைச் சேகரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர் 'தீம் பார்க் தரப்படுத்தல் ஆய்வு அறிக்கை' ஒன்றைத் தயாரிப்பார் என்று ஆவணம் கூறுகிறது.
இந்த ஆய்வு பட்டியலில், யுனிவர்சல் ஆர்லாண்டோ ரிசார்ட், புஷ் கார்டன்ஸ் தீம் பார்க், சிக்ஸ் ஃபிளாக்ஸ் டிஸ்கவரி கிங்டம், டோர்னி பார்க் & வைல்ட் வாட்டர் கிங்டம், சிக்ஸ் ஃபிளாக்ஸ் மெக்ஸிகோ, அட்லாண்டிஸ் பாரடைஸ் ஐலேண்ட் ரிசார்ட்- பஹாமாஸ், மவுண்ட் ஒலிம்பஸ் வாட்டர் பார்க், யு ரிவர்சல்ட்,ஸ்டுடியோ சிங்கப்பூர், சென்டோசா ஸ்கைலைன் லுஜ் & ஸ்கைரைடு போன்ற உலகளாவிய தீம் பூங்காக்கள் அடங்கும்.
மகாராஷ்டிராவில் உள்ள Adlabs Imagica, கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸ்-குர்கான், வொண்டர்லா பெங்களூர், ராமோஜி ஃபிலிம் சிட்டி மற்றும் மும்பையில் உள்ள எஸ்செல்வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம் போன்ற தேசிய தீம் பூங்காக்களையும் ஆலோசனை ஆய்வில் காண உள்ளனர்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கும், விரிவான ஆய்வு அறிக்கையைத் தயாரிப்பதற்கும் அரசு அதிகாரிகள் மற்றும் மூன்று ஆலோசகர்களைக் கொண்ட குழு இரண்டு உலகளாவிய மற்றும் இரண்டு தேசிய தீம் பூங்காக்களுக்குச் செல்லும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர், திட்ட ஊக்குவிப்புத் திட்டத்தைத் தயாரித்து, சுற்றுலாப் பயணிகளிடையே தீம் பூங்காவை மேம்படுத்துவதற்கான உத்தியை வகுத்து, உலகளாவிய முதலீட்டாளர்களைச் சென்றடைவதில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவர்.
இதையும் பாருங்க: உலகின் மிகப் பழமையான முத்து நகரம் கண்டுபிடிப்பு! - 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தகவல்!
டாட்டூ மைதானம்
ஜம்மு அரசாங்கம், பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் வசம் இருந்த படாமலூ பகுதியில் உள்ள டாட்டூ மைதானத்தில் 'சிட்டிசன் பார்க்' ஒன்றைக் கட்டி வருகிறது. முன்னாள் ஜம்மு முதல்வர் முஃப்தி முஹம்மது சயீத் 2015 ஆம் ஆண்டில் இராணுவம் ஒரு பகுதியை காலி செய்த பின்னர் 17 ஏக்கரில் 'சிட்டிசன் பார்க்' அடிக்கல் நாட்டினார். அவரது மகளும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கடந்த ஆண்டு, புற்றுநோய் மருத்துவமனை மற்றும் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு டாட்டூ மைதானத்தைப் பயன்படுத்துமாறு ஜம்மு நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Theme parks