ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 10 ஆண்டுகள் தாண்டி வெளியிடப்படும் இதில் ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து இடம் பிடித்து வருகிறது.
சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய தரங்களின் அடிப்படையில் பட்டியலிடப்படும் 137 நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள பின்லாந்து அதை கொண்டாடும் வகையில் அட்டகாசமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், மகிழ்ச்சிக்கான ஃபின்னிஷ் ரகசியத்தை நீங்கள் இலவசமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
ஆம் மக்களே , ஃபின்லாந்து உலகம் முழுவதிலுமிருந்து 10 பேருக்கு இலவச நான்கு நாள் ஃபின்னிஷ் விடுமுறை பேக்கேஜை வழங்குகிறது மற்றும் மகிழ்ச்சியின் அடிப்படையில் அந்த நாடு ஏன் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பதை அறியும் வாய்ப்பையும் வழங்குகிறது.
பின்லாந்தின் மிகப்பெரிய ஏரிப் பகுதியான ஃபின்லாந்தின் லேக் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் ஃபின்லாந்தின் மாஸ்டர் கிளாஸ் ஆஃப் ஹேப்பினஸின்(Masterclass of Happiness) ஒரு பகுதியாக நீங்கள் மாறும் வாய்ப்பு தான் அது. பின்லாந்து நாட்டின் சுற்றுலா வலைத்தள அறிவிப்பின்படி, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான்.
சுற்றுலா வளைத்தளத்தில் பதிவுசெய்து, அவர்கள் கொடுக்கும் சமூக ஊடக சவாலை நிறைவுசெய்வது தான்.அவர்கள் அதை ஃபைண்டிங் யுவர் இன்னர் ஃபின்(Finding Your Inner Finn) என்று அழைக்கிறார்கள்.அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களது சுற்றுலா மற்றும் கற்றல் வகுப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இது ஒரு தனிப்பட்ட மாஸ்டர் கிளாஸாக இருக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான இயற்கையுடன் சமநிலையான வாழ்க்கை, உடலுக்கும் ஆன்மாவுக்கும் ஏற்ற கருத்துக்கள், உங்களைச் சுற்றியுள்ள காடுகளையும் இயற்கையையும் அனுபவிப்பதற்கான ஆரோக்கியமான வழி, உங்களை அமைதிப்படுத்தும் ஒலிகுறிப்புகள் மற்றும் இசை மற்றும் ஃபின்னிஷ் வாழ்க்கை முறையைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொடுகிறார்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பும் , அது பற்றி கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் https://www.visitfinland.com/en/find-your-inner-finn/apply-for-masterclass/ என்ற வலைத்தளத்தில் ஏப்ரல் 2, 2023 வரை விண்ணப்பிக்கலாம். இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு அவர்களது சவால்களை செய்வது மட்டும் தான் வேலை.
இதையும் பாருங்க: ஆசியாவில் உள்ள அற்புதமான மற்றும் வித்தியாசமான மசூதிகளை இங்கே பாருங்கள்!
இந்த நான்கு நாள் விடுமுறையானது பின்லாந்தில் உள்ள ஏரி மாவட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுதல், குரு ரெசார்ட்டில் தங்குதல், பின்லாந்தில் உள்ள சில பழமையான காடுகள். சில காட்டு விளைபொருட்களுக்காக காடுகளுக்கு உணவு தேடுவது போன்ற உற்சாகமான செயல்களும் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.