முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவசமாக தங்கி பயணித்த 33 வயது பெண்.. இது எப்படி சாத்தியமானது..?

70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவசமாக தங்கி பயணித்த 33 வயது பெண்.. இது எப்படி சாத்தியமானது..?

 சிபு டி பெனடிக்டிஸ்

சிபு டி பெனடிக்டிஸ்

அவர் தனது 70 நாடுகள் பயணத்தில் மொத்தம் பயன்படுத்திய ஆடைகளே வெறும் 7 செட் தானாம்.

  • Last Updated :
  • Chennai |

பயணத்தை விரும்புபவர்கள் பலர் உள்ளோம். ஒவ்வொரு பயணமும் நமக்கு புதிய அனுபவத்தையும் அறிவையும் தருகிறது. ஒவ்வொரு பயணிக்கும் அவரவர் பயண பாணி மற்றும் விருப்பங்கள் இருக்கும். சிலர் மலைகளை விரும்புவார்கள் சிலர் கடல் அலைகளை விரும்புவார்கள். சிலர் எளிமையான கேம்ப் போன்ற இடங்களில் தங்க விரும்புவார்கள். சில 5 நட்சத்திர விடுதிகளை தேடுவார்கள்.

அந்த வகையில், ஒவ்வொரு தனது பயணத்தை வித்தியாசமான அனுபவமாக மாற்றிய ஒரு பயணியைப் பற்றி இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.  அனைத்து தடைகளையும் தாண்டி 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்த சிபு டி பெனடிக்டிஸ் பயணத்தில் அப்படி என்ன சுவாரசியம் என்று தான்  தெரிந்துகொள்ள போகிறோம்.

செபு பயணங்களில் ஒரு சிறப்பு உள்ளது. அவர் சென்ற அனைத்து நாடுகளின் அனைத்து முக்கிய இடங்களிலும் அவர் இலவசமாக தங்கியிருக்கிறார். அதுவும், அனைத்து விதமான வசதிகளும் கொண்ட ஆடம்பரமான தங்குமிடங்களில் தான் அவர் தங்கியிருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்பதை சிபுவே சொல்லியுள்ளார். அதோடு, சிபுவைப் பற்றியும், சிபு பயணங்களைப்  பற்றியும் தெரிந்து கொள்வோம்.

பள்ளி படிப்பை முடித்த ஜெர்மனியை சேர்ந்த சிபுவிற்கு நிறைய பயணம் செய்ய வேண்டும் என்பது தான் கனவு. அதற்காக பணியாள் முதல் பார் அட்டெண்டர் வரை பல வேலைகளை சிபு செய்துள்ளார். அதில் கிடைத்த மனம் முழுவதையும் சேமித்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதே நேரம் குறைவான பணத்தில் எப்படி பயணம் செய்ய முடியும் ,இலவசமாக தங்குமிடம் பெறுவது எப்படி என்று எல்லாம் ஆய்வு செய்து தெரிந்து வைத்துள்ளார்.

அப்போது தான் 2020 இல், சிபு நம்பகமான ஹவுஸ்-சிட்டர்ஸ்(trusted Housesitters) என்ற ஆப் பயன்பாட்டைப் பற்றி அறிந்தார். இது தங்குவதற்கான அழகான சிறிய வீடுகளை தேடும் மக்களுக்கான ஒரு ஆப்பாகும். ஒருசில இடங்களில், வீடுகளின் உரிமையாளர்கள் அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.

அப்படித்தான் சிபு உலகம் முழுவதும் தங்குவதற்கான இடங்களை இலவசமாகக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். அதிலிருந்து சிபு முழுநேரப் பயணியாக மாறிவிட்டார்.  ஜெர்மனியில் இருந்து கிளம்பி ஒரு வருடத்திற்கும் மேலாக பலவிதமான வீட்டில் வாழ்ந்து  அமெரிக்காவைச் சுற்றியுள்ளார். இது ஹோட்டல்களில் செலவழிப்பதை விட பலமடங்கு குறைவாக இருந்துள்ளது.

எனவே அதே முறையை பின்பற்றத் தொடங்கினார். அதே போல  பயணம் செய்யும் போது, ​​விசா, டிக்கெட் வாங்குவது  போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கான பணத்தை மட்டும் கையில் வைத்திருந்தார். கையில் இருந்தால் செலவழிக்க தோணும் என்பதால் இந்த யுத்தியை கையாண்டுள்ளார்.அதே போல குறைவான பொருட்களையே தன்னோடு எடுத்துக்கொண்டார். சிபு தனது  மற்ற அனைத்து சொத்துக்களையும் ஜெர்மனியில் உள்ள சேமிப்பு அமைப்பில் வைத்துவிட்டு கிளம்பியுள்ளார்.

சிபு ஆடைக்கு கூட அதிகம் செலவு செய்யவில்லை. “நான் ஆடைகளை வாங்கும் போது, ​​அவற்றை என்னால் அதிகம் பயன்படுத்த முடியுமா என்று யோசிப்பேன்.  மீண்டும் மீண்டும் அணியக்கூடிய ஆடைகளை மட்டுமே வாங்கினேன் ," என்றார். அவர் தனது 70 நாடுகள் பயணத்தில் மொத்தம் பயன்படுத்திய ஆடைகளே வெறும் 7 செட் தானாம். இந்த ஆடைகளே 3 வாரங்கள் போடுவதற்கு தாராளமாக பத்தும் என்கிறார்.

இதையும் பாருங்க : 12 மணிநேரத்தில் ஹைதராபாத் சுற்றுலா.. தெலுங்கானா போக்குவரத்தின் அசத்தல் பேக்கேஜ்..

ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்த செலவுகளையும் சிபு விவரித்தார். "நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு டாலரும் அனுபவங்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள். மிகவும் அவசியமான பொருட்களை மட்டும் வாங்குங்கள். செல்லும் இடங்களும் அப்படி தான்" என்று சிபு கூறினார்.

top videos

    70 நாடுகளுக்கு பயணம் செய்த சிபு  தற்போது அதன் அனுபவங்களை வைத்து, உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுப்பயண திட்டங்களையும் ஏற்பாடு செய்து தருகிறார். அது மட்டும் இல்லாமல் ஓய்வு நேரத்தில் சிபு தனது பயணங்கள் பற்றியும் எழுதுகிறார். பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்காக இந்த இளம் பெண் ஒரு புத்தகத்தை உருவாக்கி வருகிறார்.

    First published:

    Tags: Travel, Travel Tips