முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / VIDEO : மண்பானை தண்ணீர் குடிக்கிறீங்களா? 2 நாளில் மிதக்கும் புழுக்கள்.. இதை தெரிஞ்ச்சுகோங்க முதல்ல!

VIDEO : மண்பானை தண்ணீர் குடிக்கிறீங்களா? 2 நாளில் மிதக்கும் புழுக்கள்.. இதை தெரிஞ்ச்சுகோங்க முதல்ல!

மண் பானை

மண் பானை

கோடை காலத்தில் மண்பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்தி வருபவர்கள் அந்தப் பானையை அடிக்கடி கழுவதோடு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடையில் இருந்து தப்பிக்க நாம் எத்தனையோ வழிமுறைகளை கையாளுகிறோம். உடல் சூட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை நாம் அனைவரும் அறிவோம். செயற்கையான ஃபிரிட்ஜில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையான முறையில் தண்ணீரை குளிர்விக்கும் மண்பானையை நாம் அனவைருமே விரும்புவோம்.

ஏழைகளின் ஃபிரிட்ஜ் என்று அழைக்கப்படும் மண்பானையை பராமரிப்பது மிக முக்கியம். இல்லை என்றால் பல்வேறு தொல்லைகள் ஏற்படும். அப்படி மண்பானையை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் பராமரிக்காவிட்டால் என்ன நிகழும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியில் மக்கள் பானை தண்ணீர் குடிப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரும்பாலும் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையை கண்டுகொள்வதே இல்லை. கிளாஸில் தண்ணீரை நிரப்பி தண்ணீர் குடித்தால் போதும். பானையில் உள்ள தண்ணீரின் நிலையை நாம் சரிபார்பார்ப்பதில்லை. இந்த அலட்சியம் நம் உங்கள் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த காணொளியை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


இந்த வைரலான வீடியோவில், பானை தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பானை தண்ணீரை மாற்றி பானையை நன்றாக கழுவ வேண்டும். நாம் இதைச் செய்யாவிட்டால், தண்ணீரில் பூச்சிகள் உருவாகியிருக்கும். நீங்கள் பானையை மூடி வைத்தாலும் பூச்சிகள் தண்ணீருக்குள் நுழைந்துவிடும். பானையை எப்போதும் உள்ளே இருந்து கழுவ வேண்டும். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும்.

மேலும் அந்த வீடியோவில், இரண்டு நாட்களில் பானை தண்ணீருக்கு என்ன நடக்கும் என்பதும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. பானையில் இருந்த தண்ணீரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றியபோது, ​​அதில் பூச்சிகள் மிதப்பது தெரிந்தது. இந்த சிறிய பூச்சிகள் பானையின் வால் பகுதியில் இருந்துள்ளன. அந்தப் பானை அடிக்கடி கழுவப்படுதில்லை. இப்படி பானையை கழுவாமலும், தண்ணீரை மாற்றாமலும் இருந்தால் தண்ணீரில் புழுக்கள் தோன்றி விடும். எனவே ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பானையில் இருக்கும் மாற்ற வேண்டியது அவசியம். அதோடு அடிக்கடி பானையை நன்றாக கழுவ வேண்டியதும் கட்டாயம்.

top videos

    இப்படி செய்தால் தான் பானையில் இருக்கும் தண்ணீர் சுகாதாரமாக இருக்கும். நாம் அருந்தும் உணவாக இருந்தாலும் சரி தண்ணீராக இருந்தாலும் சரி சுவையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிட முக்கியம் அந்த உணவும் தண்ணீரும் சுகாதாரமாக இருக்கிறதா என்பதையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    First published:

    Tags: Summer tips