முகப்பு /lifestyle /

திருமண நிகழ்ச்சிக்காக பிரத்யேக கண்காட்சி! கோவையில் எங்கு நடக்கிறது தெரியுமா?

திருமண நிகழ்ச்சிக்காக பிரத்யேக கண்காட்சி! கோவையில் எங்கு நடக்கிறது தெரியுமா?

X
திருமண

திருமண நிகழ்ச்சிக்காக பிரத்யேக கண்காட்சி

Wedding Events Exhibition : கோவை நவ இந்தியா பகுதியில், உள்ள தனியார் விடுதியில் லக்ஷரி அபேர் சீசன் 14 எனும் திருமண கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருமண நிகழ்வுகளுக்கான பிரத்யேக கண்காட்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த திருமண கண்காட்சியில், நகைகள், புத்தாடைகள், இசைக் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், ஆடல் பாடல் கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் என திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காட்சியானது இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை திரைப்பட நடிகைகள் லாஸ்லியா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இந்த திருமண கண்காட்சியானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அனைவருக்கும் நுழைவு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News