முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு எப்படி உருவானது தெரியுமா..? தேதி, வரலாறு, முக்கியத்துவம்...

Puthandu 2023 : தமிழ் புத்தாண்டு எப்படி உருவானது தெரியுமா..? தேதி, வரலாறு, முக்கியத்துவம்...

தமிழ் புத்தாண்டு 2023

தமிழ் புத்தாண்டு 2023

கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் ஒரே நாளில் தான் அமையும். இந்த ஆண்டில் (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாங்காய் பச்சடி போன்ற ஸ்பெஷலான உணவுகளுடன் இந்த புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டுக்கும் மாங்காய்க்கும் என்ன ஒற்றுமை என்று தானே கேட்கிறீர்கள்..? மாங்காய் பச்சடியை சமைப்பதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. மாங்காய் பச்சடியானது இனிப்பு, புளிப்பு, கசப்பு, மற்றும் காரம் ஆகிய பல சுவையை கொண்ட ஒரு உணவாகும். அதோடு நமது வாழ்க்கையிலும் நாம் பல்வேறு விதமான உணர்ச்சிகளை அனுபவிக்க நேரிடும். அந்த உணர்ச்சிகள் அனைத்தையும் சமநிலையில் கொண்டு சென்று மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடியை சாப்பிடுவது வாழ்க்கையில் நிலைத்தன்மையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

தேதி:

கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் ஒரே நாளில் தான் அமையும். இந்த ஆண்டில் (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

வரலாறு:

9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டு முதன் முதலாக தோன்றியது. இந்த காலத்தில் தான் தமிழ் காலண்டர் உருவாக்கப்பட்டது. மேலும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டது.

புத்தாண்டின் முக்கியத்துவம்:

தமிழ் சோலார் காலண்டரின் (Solar Calendar) முதல் மாதமான சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் இந்த நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Puthandu 2023 : தமிழ் புத்தாண்டுக்கு சுவையான சேமியா பாயசம் செய்ய ரெசிபி..!

வேறு சில மாநிலங்களும் இந்த நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் இது பொயிலா பொய்ஷாக் என்ற பெயரில் கொண்டாடுகிறது, அதே நேரத்தில் கேரளாவில் விசுவாக கொண்டாடுகிறது, பஞ்சாப் பைசாக்கியை கொண்டாடுகிறது மற்றும் அசாம் பைஹூவை கொண்டாடுகிறது.

சம்பிரதாயம் மற்றும் கொண்டாட்டங்கள்:

புது வருடப்பிறப்பு என்பது கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. புத்தாண்டு அன்று சர்க்கரை பொங்கல் சமைத்து தங்களுக்கு விரும்பியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டாடுகின்றனர். இந்த நாளை குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த நாளை அரிசி மாவு மற்றும் கலர் கோலம் போடுவதன் மூலமாக தொடங்குகின்றனர். புத்தாண்டு சிறப்பு உணவாக மாங்காய் பச்சடி சமைக்கப்படுகிறது. பின்னர் தெய்வீக பாடல்கள் பாடி செல்வத்தையும், மகிழ்ச்சியையும் வீட்டிற்குள் அழைக்கின்றனர். ஒரு சிலர் முதல் நாளின் தொடக்கத்தில் கோவிலுக்கு செல்வதன் மூலமாக தங்களது நாளை தொடங்குகின்றனர்.

மாங்காய் பச்சடியை தவிர்த்து சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், வடை, பாயாசம், அப்பளம், ஊறுகாய், தயிர் என அனைத்து விதமான உணவுகளும் அன்று சமைக்கப்படுகிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கடந்த வருடத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதோடு இந்த ஆண்டை நம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும் தொடங்குவதுமே இதன் நோக்கமாகும்.

இந்நாளில் புத்தாடைகளை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வர். புத்தாண்டு அன்று முதன் முதலில் நாம் எதை பார்க்கிறோமோ அதன் அடிப்படையிலேயே அந்த ஆண்டு முழுவதும் அமையும் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. இதன் காரணமாக அனைவரும் விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு தங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்களான தங்கம், வெள்ளி, பூக்கள், பழங்கள் மற்றும் கண்ணாடி போன்றவற்றை பார்ப்பது வழக்கம்.

First published:

Tags: History, Tamil New Year