முகப்பு /lifestyle /

அடி ஆத்தி இது என்ன ஃபீலு.. ஜி.வி பிரகாஷ்-உடன் இணைந்து பாடி அரங்கை அதிர வைத்த கோவை மாணவர்கள்!

அடி ஆத்தி இது என்ன ஃபீலு.. ஜி.வி பிரகாஷ்-உடன் இணைந்து பாடி அரங்கை அதிர வைத்த கோவை மாணவர்கள்!

X
ஜி.வி

ஜி.வி பிரகாஷ் - உடன் இணைந்து பாடிய மாணவிகள்

G.V.Prakash Concert | கோவையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசை கச்சேரி நடைபெற உள்ளதை முன்னிட்டு போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷின் இசை கச்சேரியை கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் மற்றும் எம்.கே என்டர்டைன்மென்ட் இணைந்துநடத்துகின்றன. கோவை கொடிசியா மைதானத்தில் வரும் மே மாதம் 27ம் தேதி நடைபெறும் இந்த இசைக்கச்சேரியில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து கச்சேரியை நடத்துகின்றனர்.

இதனை முன்னிட்டு கச்சேரிக்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜி.வி.பிரகாஷ், எம்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்த பாடல்களைப் பாடினார். அப்போது கல்லூரி மாணவர்களும் இணைந்து அவருடன் பாடலை பாடினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு சேர இணைந்து வாத்தி மற்றும் ஆடுகளம் திரைப்படங்களில் வரும் பாடல்களை பாடி அரங்கை அதிர வைத்தனர். ஜி.வி.பிரகாஷ் இதுவரை இசைக்கச்சேரி எதுவும் நடத்தாத நிலையில் கோவையில் முதல் முறையாக இவரது இசைக்கச்சேரி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இசை ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

First published:

Tags: Cinema, Coimbatore, Local News