காதல் தோல்வியின் போது இதயம் நொறுங்குவது போல உணர்வதன் பின்னால் உள்ள மருத்துவ காரணங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளனர் கலிபோர்னியா மருத்துவ விஞ்ஞானிகள். அதுகுறித்த சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.
காதல் தோல்வியை பற்றி சொல்ல எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. இந்த தோல்வியின் போது ஏற்படும் மனவலி, இதயம் வெடித்தது போன்றோ அல்லது நொறுங்குவது போன்றோ உணர்ந்ததாக பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். இது அப்படி எளிதில் கடந்து போகும் வார்த்தை இல்லை என்கின்றனர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது ஒரு வகை நோய் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்..
அது எப்படி என்று கேள்வி எழலாம்? சரி, காதல் தோல்வி ஏற்பட்ட போது இதயம் நொறுங்குவது போல் உணர்ந்திருக்கிறீர்களா? கட்டுப்படுத்த முடியாத வகையில் அழுகை பீறிட்டதா? இந்த உலகமே தலைகீழாக மாறியது போல் உணர்ந்தீர்களா? ஏதோ ஒன்று உங்களை வெகுவாக பாதித்தது போல் ஸ்தம்பித்து போனீர்களா? அதுதான் " BROKEN HEART SYNDROME “ என்றும், அந்தநிலையில் கனத்த இதயம் போன்ற உணர்வை பலரும் எதிர்கொள்வதாகவும் இதனை “TAKASUBO SYNDROME “ என்றும் சொல்கின்றனர் இதய சிகிச்சை நிபுணர்கள்.
இந்தவகை SYNDROME பெண்களையே அதிகம் பாதிப்பதாகவும் கூறுகின்றனர். பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களில் 90% பேர் பெண்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.. இந்தவகை SYNDROME வந்தவர்களின் மூளை செயல்பாடுகள் பாதிப்படைந்து ,மெதுவாக சோர்வடைந்து விடுவதாககவும், இது அவர்களின் உடலின் செயல்பாடுகளையும் சேர்த்து பாதிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, நம்முடைய உடல், வலிகளை சந்திக்கும்போதோ அல்லது மனம் கடினமாக உணரப்படும்போதோ, ‘’Anterior Cingulate Ridge’ என்னும் நம் மூளையின் ஒரு பகுதி இயங்க துவங்குகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், மனம் சோர்வடையும் நிலையிலும் இதேதான் நடக்கிறது. இந்தநிலை தான் இதயம் நொறுங்குவது போன்ற உணர்வுக்கு பின்னால் உள்ள மருத்துவ காரணம்.
மேலும் படிக்க... வெயில் உக்கிரமாக சுட்டெரிக்க என்ன காரணம்... இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்? - வானிலை இயக்குநர் விளக்கம்!
காதல் தோல்வியால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அதிகம் கேட்டிருப்போம், ஆனால் அந்த காதல் தோல்வியில் விழுந்தவர்களின் இதயம் பாதிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் நிலைக்கு தீவிரமானது என்ற கருத்தும் இந்த ஆய்வில் முன்வைக்கப்படுகிறது. உரிய மனநல சிகிச்சை தான் இதற்கான தற்போதைய சிகிச்சை என்றும், இதற்கான மருத்துவ தீர்வு விரைவில் கண்டுப்பிடிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
லவ் பண்ணுங்க சார் லைவ் நல்லா தான் இருக்கும்... ஆனா feel பண்ணும் போது உங்க heart -யும் கொஞ்சம் யோசிச்சுங்கோங்க...
செய்தியாளர்: காயத்ரி, சென்னை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Love breakup, Love failure