முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Mother's Day 2023 : அன்னையர் தினம் கொண்டாட என்ன காரணம் தெரியுமா..? வரலாறும்.. முக்கியதுவமும்..!

Mother's Day 2023 : அன்னையர் தினம் கொண்டாட என்ன காரணம் தெரியுமா..? வரலாறும்.. முக்கியதுவமும்..!

mothers day 2023

mothers day 2023

உங்கள் தாயிடம் அன்பு மற்றும் பாசமழை பொழிய இது தனித்துவமான நாளாகும். உங்கள் தாயாரின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தையும் இந்நாளில் நீங்கள் கௌரவிக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தாய்மார்களின் தியாகத்தை போற்றவும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக பரிசளிப்பது, அவர்களை பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகளை குழந்தைகள் மேற்கொள்கின்றனர்.

தாய்மார்களிடம் அன்னையர் தினத்தில் ஆசிர்வாதம் பெறுவதை சிறப்புக்குரிய நடவடிக்கையாக கருதுகின்றனர். எந்த நாளும் தன் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் உழைத்துக் கொண்டே இருக்கும் தாய்மார்களை அன்னையர் தினத்திலாவது கொண்டாடுவது அவசியமாகிறது.

அன்னையர் தினம்

உலகந்தோறும் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் மே 10ஆம் தேதியை அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். அமெரிக்கா உள்பட இன்னும் சில நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடுகின்றனர்.

அன்னையர் தின வரலாறு

அமெரிக்காவில் கடந்த 1908ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸ் என்பவர் முதன் முதலில் அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். தன்னுடைய சொந்த தாயாருக்காக அன்னையர் தினத்தை அவர் அனுசரித்தார். இவருடைய தாயார் ஆண் ரீவிஸ் ஜார்விஸ் சமூக சேவகியாக வாழ்ந்தவர். உள்நாட்டுப் போரில் காயம் அடைகின்ற ராணுவ வீரர்களுக்கு சேவை செய்வதை இவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

நாட்டுக்கும், வீட்டுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த தன் தாயாரை நினைகூரும் விதமாகத்தான் அன்னையர் தினத்தை அண்ணா ஜார்விஸ் கொண்டாடத் தொடங்கினார். அவரது முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு 1914ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது. அப்போது முதல், அன்றைய நாளை அன்னையர் தினமாக உலகெங்கிலும் கொண்டாடி வருகின்றனர்.

அன்னையர் தின முக்கியத்துவம்

உங்கள் அம்மாவிடம் அன்பு மற்றும் பாசமழை பொழிய இது தனித்துவமான நாளாகும். உங்கள் தாயாரின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தையும் இந்நாளில் நீங்கள் கௌரவிக்கலாம். அதேபோல, மறைந்த தாயாரின் நினைவுகளை போற்றுவதற்கு இது சிறப்பான நாளாகும்.

Also Read | உங்க குழந்தையிடம் நெகடிவான எண்ணங்கள் அதிகமாக உள்ளதா..? அவர்களை மீட்டெடுக்க டிப்ஸ்..!

கொண்டாட்டங்கள்:

உலகெங்கிலும் அன்னையர் தினத்தை பல விதங்களில் கொண்டாடுகின்றனர். சிலர் தங்கள் தாய்க்கு வாழ்த்து மடல், அன்பளிப்புகள் அல்லது மலர்கள் போன்றவற்றை வழங்குகின்றனர். இன்னும் சிலர் வெளியிடங்களுக்குச் சென்று ஹோட்டல், ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் விருந்து சாப்பிட்டு இந்தப் பொழுதை கழிக்கின்றனர்.

top videos

    பேரன்பு கொண்ட பிள்ளைகள் அன்னையர் தினத்தில் தாய்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு தங்கள் கைப்பட சமைத்து பரிமாறுகின்றனர். கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று ஃபோட்டோ எடுத்து, அதை மலரும் நினைவுகளாக சிலர் மாற்றுகின்றனர். அதேபோல பள்ளி, கல்லூரிகள் அல்லது சமூக அரங்குகளில் அன்னையர் தினம் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே இடத்தில் பலருடைய தாய்மார்களுக்கு ஒருசேர பாராட்டு விழா, பரிசளிப்பு விழா போன்றவை நடத்தப்படுகின்றன.

    First published:

    Tags: Mother, Mothers day, Relationship Tips